Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

நாசூக்கு

நாசூக்கு என்றால் என்ன?
நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக நாம் நினைக்கிறோம் என்பதனையும்,பிறரைப் பற்றி எவ்வளவு மட்டமாக நாம் நினைக்கிறோம் என்பதனையும் வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்வது.
--மார்க் ட்வைன்

மனிதனும் மர்மங்களும்

நண்பர்களே நான் மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் என்ற புத்தகதை இங்கு ஒவ்வொரு பகுதியாக பதிகிறேன் ...வழக்கம் போல் இதன் உரிமை எனதல்ல ..

1.ஒரு சிம்பிளான ஆவி ...


டாக்டர் .கென்னத் வாக்கர் ,உலக புகழ் பெற்ற மருத்துவ மேதை .நரம்பியல் நிபுணர் .இன்றைய பிரபலமான மருதுவார்கல்லூக்கெல்லாம் பீஷ்மர் போன்றவர் .சாதாரணமான மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அவர் எழுதி விட்டு சென்ற மருதுவ் மற்றும் மனோதத்துவ புத்தகம் நிராய உண்டு .குறிப்பாக ஆவிகளை புரிந்து கொள்ளுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார் . the unconscious Mind என்ற நூலில் apparations என்ற ஆதியாயதில் விவரிக்கப்படும் ஆவீ இது .

வாக்கரின் மிக நெருங்கிய நண்பர் டாக்டர்.ரோவள் ,மூட நம்பிக்கை எதுவும் இல்லாத ,ரெம்பவும் பிரக்டிகளான மனிதர் அவர்.லண்டன் னில்உள்ள மிகப்பெரிய மருத்துவ மனை ஊன்றில் பணிபுரியும் ரோவள் ,கென்னத் வாக்கரிடம் விவரீத்த நிகல்சி இது ..
மிகவும் சிம்பிளான ஆவி இது.வாக்கர் இதை பற்றி புத்தகத்தில் எழுதியற்கான காரணத்தை அவ்ரே குறிபிடுகிறார் .டாக்டர்.ரோவள் என் நீண்ட கால நண்பர் .பொய் சொல்லி காலை வரிவிடுபவரோ ,அதிகப்படியான கற்பனை செய்து திரித்து சொல்பவரோ இல்லை .அவர் ஒன்றை பார்த்தால் ,நான் பார்த்ததை போல

விசித்திரம்

ஒருவரைப் பிடிக்காமல் போனால்,அவர் கையில் வெறும் பேனாவைப் பிடித்திருக்கும் விதம் கூட எரிச்சலைத்தரும்.ஆனால் அதே நபர்,உங்களுக்கு மிகவும் பிடித்தவராயிருந்தால்,அவர் முழுத்தட்டையும் சாப்பாடுடன் உங்கள் மடியில் கொட்டினால் கூட அதைப் பெரிதாக நினைக்க மாட்டீர்கள்.
இந்த மனம் தான் எத்தனை விசித்திரமானது?


கண்டியுங்கள்

செயலைக் கண்டியுங்கள்,நபரை அல்ல.
விரும்பத்தகாத் செயல்களைப் பிறர் செய்யும் போதுநமக்கு கோபம் வருகிறது.சிலர் பண்பு கருதி,நபரைக் கருதி,சூழ்நிலை கருதி கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.சிலரால் இது முடிவதில்லை.காச் மூச் என்று கத்துகிறார்கள்.
''டேய்,உனக்கு அறிவிருக்குதா?''என்று கேட்பதை விட,'ஒரு புத்திசாலி செய்யக் கூடிய காரியமா இது?'என்று கேட்டுப் பாருங்கள்.நல்ல பலனிருக்கும்.செயல் தான் கண்டிக்கப் படவேண்டும்.நபர்கள் அல்ல.இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.
*நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.
*நாம் அப்படிப் பேசியிருக்க வேண்டாமே என்று நாம் பின்னால் வருத்தப் பட வேண்டிய சூழ் நிலை வராது.
*கோபத்திற்கு ஆளானவர்கள் நம் மீது வருத்தமோ,கோபமோ கொள்வதை விட்டு விட்டு,தங்கள் தவறைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.

நோயின் போது

வேறு எப்போதையும் விட நோயுறும் போது தான் மனதில் அதிகக் கேள்விகள் பிறக்கின்றன.வீடு கற்றுத்தர மறந்ததை நோய்ப் படுக்கை கற்றுத் தந்து விடுகிறது.வாழ்வின் அருமையையும், யார் நமக்கு நெருக்கமானவர்கள்,யார் நம்மைப் பயன் படுத்திக் கொண்டவர்கள் என்பது நோயுறும்  போது தான் தெரியத் தொடங்குகிறது.உடல் குறித்த நமது கவனம் மிக அலட்சியமானது. இயல்பாக இருக்கும் போது உடலின் அற்புதம் நமக்குப் புரிவதேயில்லை.    வலியின் முன்னால் வயதோ,,பணமோ,பேரோ,புகழோ,எதுவும் நிற்பதில்லை. வலி மனிதனை உண்மைக்கு மிக நெருக்கம் ஆக்குகிறது.தன்னைப் பற்றி தான் கொண்டிருந்த அத்தனை பெருமிதங்களையும் ஒரே நிமிடத்தில் கரைத்து அழித்து விடுகிறது.நோய் ஒரு வகையில் நமது உடலை மட்டுமல்ல, ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது.
நோயின் போது, திடீரென உலகின் இயக்கத்திலிருந்து தான் துண்டிக்கப் பட்டது போலவும்,தன்னை அடியோடு உலகம் மறந்து போகும் என்பது போலவும் நோயாளி நினைக்கத் தொடங்குகிறான்.தான் படுக்கையில் இருக்கும் போது மற்றவர்கள் இயல்பாக  இருப்பது  குறித்து நோயாளிக்கு  ஆத்திரம் வருகிறது.தனக்காக மற்றவர்கள் வருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறான்.வாழ்க்கை தன்னைப் புரிய வைப்பதற்குசில  நிகழ்வுகளையும்,தருணங்களையும் ஏற்படுத்துகிறது.உடலில் தோன்றிய நோய் நீங்கக் கூடும்.ஆனால் நோய்மை ஏற்படுத்திய புரிதல் வாழ் நாள் முழுவதும் கூட இருக்கும்.
                                                              __எஸ்.ராமகிருஷ்ணன்.

விளக்கம்

தீமையில் முடிவடைவது;--அகந்தை.
மகிழ்வைத் தருவது  ;--நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது;--வஞ்சகம்.
விலை மதிப்பிட முடியாதது;--காலத்தே செய்த உதவி.
அலட்சியம் செய்யப் பட வேண்டியவை ;--தீயோர்,மாற்றானின் மனைவி,
                                                                                        பிறர் உடமை.
வாழ்கின்ற உயிர்களைக் கட்டுப் படுத்துபவர்கள் ;--
                         உண்மையே பேசுபவர்கள்.
                         இனிமையாகப் பேசுபவர்கள்.
                         அடக்கத்துடன்இருப்பவர்கள்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன் ;--ஊமை
சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ;--உலகை வெல்பவன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.;--குருடன்.
நல்லவற்றையே கேட்காதவன் ;--செவிடன்.
கேட்காமல் கொடுப்பது ;--கொடை
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன் ;--நண்பன்.
பேச்சுக்கு அழகு தருவது ;--சத்தியம்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது ;--நல்ல நடத்தை.
மகிழ்ச்சியுடன் ஆற்ற வேண்டிய பணிகள் ;--
                               நலிந்தோர் பால் இரக்கம் கொள்வது.
                               நல்ல நடத்தையுள்ள நண்பர்களிடம் பழகுவது.
                                                            ---ஆதி சங்கரர்.
                                                      (ப்ரச்னோத்ர ரத்னா மாலிகா)

இயல்பு

மனிதனின் இயல்பு;
முப்பது வயதில்  --முறுக்கு
நாற்பது வயதில் --நழுவல்
ஐம்பது வயதில்  --அசதி
அறுபது வயதில்--மறதி
எழுபது வயதில்  --ஏக்கம்
என்பது வயதில்  --தூக்கம்

முதன்மையான பரிசு

பகைவனுக்கு        --மன்னிப்பு.
நண்பனுக்கு           --இதயம்
குழந்தைக்கு           --நன்னடத்தை
தந்தைக்கு               --மரியாதை.
தாய்க்கு                   --நம்முடைய ஒழுக்கம்
போட்டியாளனுக்கு --சகிப்புத்தன்மை
எல்லோருக்கும்       --தாராள மனப்பான்மை

கள்

கள்ளுக்கு போதை உண்டு.கள்ளை உண்டால் தான் போதை வரும் என்பதல்ல.கள் என்ற சொல்லுக்கே போதை வரும்.சான்றாக,'நீ'என்று சொல்பவரை நீங்கள் என்று சொல்லிப் பாருங்கள்,அவருக்கு உடனே எவ்வளவு போதை வருகிறதென்று!

செய்யாதீர்கள்

அழகில்லா உருவங்களை ஒதுக்காதீர்கள்;
அதற்குள் ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.
அழகான உருவங்களுக்கு ஏங்காதீர்கள்;
அங்கே ஆணவம் தலை தூக்கி நிற்கிறது.
வறுமையில் வாடுபவர்களைக் கேலி செய்யாதீர்கள்;
அங்கே வாழ்க்கைத்தரம் வணங்கிக் கொண்டிருக்கிறது.
பணக்காரன் வீட்டுப் படிக்கட்டில் ஏறாதீர்கள்;
அங்கே அவமரியாதை காத்துக் கொண்டிருக்கிறது.
மேதைகளை அளவுக்கு மீறிப் புகழாதீர்கள்;
அங்கு மேதைத்தன்மை  அத்தோடு முடிந்து விடுகிறது.
                                                  --கண்ணதாசன்

நஷ்டம்

நீசனுக்கு நீ செய்யும் நூறு உபகாரங்களும்  நஷ்டம்.
மூடனுக்கு அளிக்கும் நூறு புத்திமதிகளும் நஷ்டம்.
கேளாதவனுக்கு  சொல்லும்  நூறு நல்லுபதேசங்களும்  நஷ்டம்.
அறிவில்லாதவனுக்கு அளிக்கும் நூறு ஞானோபதேசங்களும் நஷ்டம்.
பாத்திரமில்லாதவனுக்கு அளிக்கும் நூறு  தானம் நஷ்டம்.
நன்றியற்றவர்களுக்கு செய்யும் நூறு உதவி நஷ்டம்/
குணம்ற்றவர்களுக்குக் காட்டும் நூறு கருணை நஷ்டம்.

கோள்

கோள் சொல்லும் பேர்வழிகளின் அயோக்கியத்தனத்தை விட அதை நம்பும் முட்டாள்தனமே ஆபத்தானது.கோள் சொல்பவர்கள் கேட்பவர்களின் மனப் பலவீனத்தை முதலாகக் கொண்டவர்கள்.இவர்களிடம் எச்சரிக்கையாக இல்லாதவர்கள் பெரும்பாலும் கோள் சொல்பவர்களின் புகழ் மொழியில் மயங்குபவர்களாகவே இருப்பார்கள்.கேட்பவர்களின் சில தவறுகளை நியாயப்படுத்துவதே கோள் சொல்பவர்களின் முதல் அம்பு.அவர்கள் நியாயப்படுத்த சொல்லும் வாதங்கள் கேட்பவர்களுக்கே தெரியாதவையாக இருக்கும்.கோள் சொல்பவர்கள் தமக்கு எந்தப் பயன் இல்லாவிட்டாலும் அடுத்தவரை துன்புறச் செய்கிற சேடிஸ்ட்கள்..இவர்களிடம் சிக்காமலிருப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாடக் கடமை.

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு.....

இந்தியாவில் அதிக கேமிரா விற்கும் நிறுவனம் எது ?

நீங்கள் சோனி, கேனான், நிக்கான் என்று பதிலளித்தால், அது தவறு. இதில் யாருமே இல்லை. நோகியா தான் அதிக கேமிரா விற்கிறார்கள். ஆனால், அவர்கள் கேமிரா விற்பனையாளர்களாக தெரிவதில்லை. செல்போன் விற்பனை செய்பவர்களாக தெரிகிறார்கள்.


செல்போனோடு கேமிராவருவதால் கேமிரா விற்பனை குறைந்து போயிருக்கிறது. செல்போனிலே கேமிரா இருப்பதால் பலர் தனியாக கேமிராவை வாங்குவதில்லை.

கேமிரா வாங்க வேண்டும் என்று இல்லை. செல்போனை கூட வாங்கலாம் என்பது தான் இன்றைய நிதர்சனம்.

இந்தியாவில் அதிக கேமிரா இசை பாடல்கள் விற்பனை செய்யும் நிறுவனம் எது ?


HMV இல்லை. ச-ரி-க–ம. அதும் இல்லை. ஏர்டெல் தான். காலர் டுயூன் என்ற பெயரில் ஒவ்வொரு நொடிக்கு பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். பல இசை ஆல்பம் நிறுவனங்களை விட ஏர்டெல் அதிகமாக சம்பாதிக்கிறது. அதுவும் நிமிடங்களில்..!


ஏர்டெல் இசை நிறுவனமில்லை. தொலைப்பேசி சேவை நிறுவனம் மட்டுமே. காலர் டியூன் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கொடுக்கும் சேவை. ஆனால், மற்ற இசை நிறுவனங்களை விட காலர் டியூனில் ஏர்டெல் லாபம் சம்பாதிக்கிறார்கள்.


ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ-போன்', கூகிள் நிறுவனத்தின் 'அன்திராய்ட்' போன்ற வரவால் தங்கள் விற்பனை பாதிக்க படலாம் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிள், ஆப்பிள் செல்போன் விற்கும் நிறுவனமாக மாறபோகிறதா என்ன ? இல்லை.


நோக்கியாவுக்கும், கேனானுக்கு என்ன சம்பந்தம் ? ஏர்டெலுக்கும், எச்.எம்.விக்கும் என்ன சம்பந்தம் ?
ஆனால் இதில் ஒரு நிறுவனத்தால் இன்னொரு நிறுவனத்தின் விற்பனை பாதிக்கிறது. மறைமுகமான போட்டியாளராக இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிக பெரிய யுத்த காவியம் என்று கேட்டால் 'மகாபாரதம்' என்று சொல்லுவார்கள். ஆனால், நாளை மிக பெரிய யுத்தம் இதுவாக தான் இருக்க முடியும். ஆம்... யார் நம் போட்டியாளர் ?


என் மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் " ஆப்பிள் நிறுவனம் சோனி நிறுவனத்துக்கு என்ன செய்தது, சோனி நிறுவனம் கோடாக் நிறுவனத்துக்கு என்ன செய்தது ?" . பதிலிது தான். சோனி நிறுவனம் ஒலியை விற்பனை செய்கிறார்கள். கோடாக் நிறுவனம் ஒளியால் படத்தை விற்பனை செய்கிறார்கள். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த இரண்டையும் உள்வாங்கி கொண்டு தனது கணினியில் ஒலி (sound) மற்றும் ஒளி (Light)யை காட்டுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கணினி சோனி, கோடாக் நிறுவனத்தை விழுங்கும் ஆபாயம் உள்ளது.


முன்பெல்லாம் கோடாக் பிலிம் வாங்கி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு இருந்தோம். டிஜிட்டல் காமிரா வந்ததும் கோடாக் பிலிம் வாங்குவது குறைந்துவிட்டது. காமிராவுக்காக தான் கோடாக் நிறுவனம் பிலிம் தயாரித்தது. ஆனால்,
பிலிம் இல்லாமல் காமிரா வரும் என்று கோடாக் நிறுவனம் யூகித்திருப்பார்களா ??

2008 ஆண்டில், பிரிட்டிஷ் ஆர்வேஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் யார் போட்டியாளராக இருந்தார்கள் தெரியுமா ? சிங்கபூர் ஆர்லைன்ஸ். இல்லை. இந்தியன் ஆர்லைன்ஸ். அதுவும் இல்லை. எச்.பி , சிஸ்கோ நிறுவனத்தின் டெலி கான்பிரன்ஸ் தான் பதில். யூகிக்க முடியாத பதில் தான். ரெசிஷன் சமயத்தில் நிறுவனங்களின் செலவுகளை குறைக்க பல மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் மேலதிகாரிகளை வெளியூர் அனுப்புவதற்கு பதிலாக, டெலிகான்பிரன்ஸ் முறையில் பேசி தங்கள் வேலையை முடித்துக் கொண்டனர். ரெசிஷன் சரியாகி மீண்டும் பழைய நிலையில் திரும்பினாலும், ஆர்லைன்ஸ்யை விட டெலிகான்பிரஸ் முறையை தான் பயன்படுத்துவார்கள்.


இந்திய மக்களுக்கு இரண்டு பொழுது போக்கு விஷயம், ஒன்று சினிமா. இன்னொன்று கிரிக்கெட். டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி நடந்த வரையில் சினிமாவுக்கும், கிரிக்கெட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கிரிக்கெட்டில் ஷேவாக், தோனி கடவுள் என்றால், சினிமாவில் ரஜினி, கமல் கடவுள். இரண்டும் வெவ்வேறாக தான் இருந்தது. ஆனால், 20-20 ஓவர் IPL ஆட்டம் வந்ததும் பல படங்கள் வெளியிட தயங்கினர். சில திரையரங்குகளில் 20-20 IPL கிரிக்கெட் ஆட்டத்தை பிரத்தியேக முறையில் ஒளிபரப்பினர். படங்களை திரையிட கூட திரையரங்கு கிடைக்கவில்லை. காரணம், 20-20 கிரிக்கெட், சினிமாவும் மூன்று மணி நேர பொழுது போக்கும் அம்சம் கொண்டது. 3 மணி நேரம் படம் பார்த்தால் என்ன ? கிரிக்கெட் பார்த்தால் என்ன ? ரசிகர்களின் எண்ணம் சினிமாவை ஓறம் கட்டியது.


முப்பது வருடங்களுக்கு முன்பு, கருப்பு வெள்ளை படம், டைப் ரைட்டர், ஃபௌன்ட்டன் பேன் பயன்படுத்தினர். இப்போது அது எல்லாம் நினைவு சின்னம் தான். கணினி வந்த பிறகு டைப் ரைட்டரை யாரும் பயன்படுத்துவதில்லை. விஞ்ஞான வளர்ச்சி பல கருவிகள் உருவாக்குகிறது மட்டுமல்ல, உருவாக்கின கருவிகளை அழித்தும் இருக்கிறது.


இன்று காலையில் சிக்கிரம் விழிக்க யார் ஆலாரத்தை நாடுகிறார்கள். எத்தனை பேர் வீட்டில் ஆலார கடிகாரம் இருக்கிறது. செல்போன் எடுத்தோமா , நேரத்தை செட் செய்தோமா... அவ்வளவு தான். காலையில் திரைப்பட பாடலோடு விழிக்கலாம். ஆனால், இதில் பாதிக்க பட்டது டைட்டன் நிறுவனம் தான். ஆலார கடிகாரத்தை டைட்டன் நிறுவனம் இப்போது தயாரிப்பது இல்லை.


நாளைய புத்தகங்களுக்கு பதிலாக ஈ -புக் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஏன் பாடம் சொல்லி தரும் ரோபோவாக இருக்க கூடாது ? ஆசிரியர், புத்தகம் இரண்டுமே தேவையில்லை. நினைத்தமாத்திரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம்.


நாளை ஆப்பிள் நிறுவனம் கதை சொல்லி இயந்திரத்தை தயாரித்தால் என்னாகும். எழுத்தாளர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளும். வணிகத்தில் தங்கள் போட்டியாளர்களை வைத்து தான் தங்கள் தயாரிப்பை நிர்ணயம் செய்தார்கள். ஆனால், இப்போது போட்டியாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.



நீங்கள் செய்ய வேண்டியது..... ‘யார் நம் போட்டியாளர் ?’ என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு !!

அப்படியா சொன்னீங்க?

நாம் ஒன்றை நினைத்துக் கொண்டு சொல்ல,அதைக் கேட்கிறவர்கள் வேறு விதமாகப் புரிந்து கொண்டு விடுவது சாதாரணமாக நடக்கிறது.ஆனால் இந்த சாதாரண செயலின் விளைவு சிலசமயம் மிகவும் விபரீதமாக முடிந்து விடுவதுண்டு.சொல்லுபவர்கள் எவ்வளவு சரியாகச் சொன்னாலும் புரிந்து கொள்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்வது ஒரு வகைக் கொடுமை.சொல்பவன் தன மன நிலைக்கேற்ப சொல்வான்.கேட்பவன் தன மன நிலைக்கேற்ப புரிந்து கொள்வான்.இருவரின் மன நிலைகளுக்கும் இருக்கும் இடைவெளியில் ஏற்படும் விபரீதம் தான் தவறான புரிதல்.
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே  ஏற்படும் பெரும்பாலான  சர்ச்சைகள்,சொல்வதில் தெளிவின்மை,புரிந்து கொள்வதில் தவறு ஆகியவற்றால் உண்டாகின்றன.கணவனோ,மனைவியோ,சரியான காரண காரியங்களோடு எடுக்கிற ஒரு முடிவை அடுத்தவரிடம் சொல்லும்போது , அந்த முடிவுக்கு வந்த முறையை சொல்லாமல் முடிவை மட்டும் சொல்வதால் குழப்பம் விளைவதுண்டு.எப்போதும் சொல்வதைத் தெளிவாக சொல்லி விட்டால்,''அப்படியா சொன்னீங்க !''என்ற ஆராய்ச்சிக்கே இடமிருக்காது.

பாசமும் நட்பும் - நிதர்சனமான உண்மை.

நம்முடைய கல்வித் திட்டங்கள் குழந்தைகளுக்குக் கல்வியைப் புகட்டும் (புகட்டுவது என்பதன் நேரடியான பொருள் உங்களுக்குத் தெரியும்) வேலை ஒன்றை மட்டுமே செய்து வருகின்றன.  அக்குழந்தைகளின் நுண்மாண் நுழைபுலத்தை வலுப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மறந்து கூடச் செய்வதற்கு இப்பள்ளிகளும் நம் கல்வித் திட்டமும் வழிவகுக்கவில்லை. 


 பள்ளிகளின் கடமைகள் ஒருபுறம் இருக்க பெற்றோரின் கடமையும் இங்கே இருக்கிறது.  தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தையும் தனிப்பட்ட திறமைகளையும் கண்டெடுத்து அவர்களை அந்தத் திசையில் வெற்றிகரமாகப் பயணிக்கச் செய்வது பெற்றோர்களின் தலையாய கடமையாகிறது.  பள்ளிகள் பாடங்களைப் "புகட்டினால்'' வீட்டில் பெற்றேர்கள் அந்தப் பிள்ளைகளை வெறும் மதிப்பெண்களைப் பெறும் இயந்திரமாக மாற்றத்தான் அதிகமாக முயற்சிக்கிறார்கள்.  அதற்கு சாதகமான பள்ளிகளில் தேடித்தேடித் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அலைகிறார்கள்.
குழந்தைகளின் பன்முகத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகள் செயல்படத் துவங்கினால் சில நேரங்களில் பெற்றோர்களே ஒன்று திரண்டு, காரியத்துக்கு ஆகாத இந்தக் காரியத்தை விட்டுவிட்டு எங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் ஏதாவது செய்யுங்கள் என்று அந்தப் பள்ளிகளுக்கு நெருக்கடி தருவதையும் நாம் காண முடிகிறது.

பெரியவர்களுக்கும் சரி. குழந்தைகளுக்கும் சரி.  புத்திமதி சொல்வது என்பது யாருக்குமே பிடிக்காத ஒன்று.  புத்திமதி என்பது அதனைத் தருபவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் பிடித்து இருந்தாலும் பெறுபவர்களுக்குப் பல நேரங்களில் அது தங்களை ஏதோ தண்டனைக்கு உட்படுத்தி விட்டது போலத்தான் தோன்றும்.  

குறிப்பாக குழந்தைகளுக்கு புத்திமதி என்கிற விஷயம் அறவே பிடிக்கின்ற விஷயமாக எப்போதும் இருப்பதில்லை.  மனத்தளவில் அயர்ச்சி தரும் பாடத்திட்டங்கள் ஒருபுறம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான புத்திமதிகள் ஒருபுறம் எனக் குழந்தைகள்  ஏறத்தாழ ஒரு இயந்திரத் தன்மையான ஒரு சூழலில்தான் உழல வேண்டி இருக்கின்றது.  

குழந்தைகளின் தேடல்கள் கேள்விகள் வழியாகத் துவங்குகின்றன. அந்தக் கேள்விகளே அவர்களுடைய மதி நுட்பத்தைக் கூர்மைப் படுத்தும் ஆயுதம்.    

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.   எல்லாவற்றையும் பெற்றோர்களே சொல்லிக் கொடுக்க முடியாது.  அதற்காகத் தான் குறிப்பிட்ட வயதில் குழந்தைகளை பள்ளி என்ற ஒரு அமைப்பிற்கு அனுப்பி பலவனற்றையும் கற்றுக் கொடுக்க நாம் முயற்சிக்கிறோம்.  ஆனால் நம்மில் பெரும்பாலோனோர், சகல வசதிகளும் நிறைந்த ஒரு பள்ளிக்கு குழந்தையை அனுப்பி விட்டாலே தங்களுடைய வேலை முடிந்தது என நினைப்பது மிகவும் தவறு.  பள்ளிப்படிப்பு மட்டுமே அல்லாது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டியவை மிகப் பரந்த அளவில் உள்ளன.
சொல்லப் போனால் பள்ளியில் நம் குழந்தைகள் படிக்கும் படிப்பு அவர்களுக்கு பெரும்பாலான அளவில் இன்று நேரடி வாழ்க்கைக்குத் தொடர்பு இல்லாததாக இருக்கிறது.    எந்த வகையிலும் அது பயனை நோக்கியதாக இல்லை. 

எனவே பள்ளி தரும் கல்வியைத் தாண்டிய ஒரு சமுதாயக் கண்ணோட்டத்துடன் குழந்தைகளின் அறிவுத் திறனை கூர்மைப்படுத்துவதில் பெற்றோர்களும் பங்கு வகிக்க வேண்டும்.  இந்தக் கண்ணோட்டத்தில் பெற்றோர்களும் பள்ளிகளும் தங்களுடைய கடமையை உணர்ந்து செயல்படவேண்டும். 

இன்றைய கல்வி வெறும் மதிப்பெண்களை மட்டுமே பெற்றுத்தரும் ஒரு கருவியாக இருக்கிறபடியால், பள்ளிகள் புத்தகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு காலத்தை தள்ளிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.  

சென்னையிலுள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் ஒரு பன்னாட்டு நிறுவனம் இரு மாதங்களுக்கு முன்பு Campus Interview ஒன்றை நடத்தியது.   அந்தத் தேர்வினை ஆங்கிலத்தில் நடத்தியது அந்த நிறுவனம்.  தங்களுக்கான ஒரு சாதுரியமான பணியாளரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் அந்தத் தேர்வை வடிவமைத்து இருந்தார்கள். சரியான வகையில் பிரச்னைகளை சமாளித்தல், மற்றவர்களுடன்   அழகாக உரையாடுதல், துரிதமாக முடிவுகளை எடுத்தல் போன்றவற்றில் மாணவர்கள் எப்படி சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறியும் வகையில் ஒரு தேர்வு. 

அந்தத் தேர்வில் மிகவும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பில் தொடர்ந்து நான்கு செமஸ்டர்களிலும் தோல்வியடைந்திருந்தார்.  அந்தப் பன்னாட்டு நிறுவனம் அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை!!. 

அதற்குப் பதிலாக அந்த மாணவரை அழைத்து அடுத்த ஆண்டில் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரும்படியானை கடிதத்தைத் தந்து வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் தேர்ச்சி பெறாத பாடங்களை முடிக்குமாறு அறிவுறுத்தி சென்றது.  

இதனை ஒரு சாதாரண சம்பவமாக தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம்.  பெற்றோர்களும், நம்முடைய அரசாங்கமும் இதை நன்கு உணர்ந்து நம்முடைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.   நான் இதில் கல்விக் கூடங்களை சேர்க்காதற்கு காரணம், அரசாங்கம் வகுக்கும் கல்வித்திட்டத்தை அவர்கள் செயல்படுத்த வேண்டிய நோக்கத்தில் மட்டுமே  இவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள்.  அதற்கு மேல் அவர்களிடமிருந்து நீங்கள் வேறெதுவும் எதிர்பார்க்க முடியாது.

மேற்சொன்ன "துரிதமான வகையில் முடிவெடுத்தல், தெளிவான முறையில் உரையாடி மற்றவர்களுக்குப் புரிய வைத்தல், எந்த நிலையிலும் நிதானம் தவறாமை, தலைமைப் பண்பு'' போன்றவற்றை எந்தப் பள்ளியோ, கல்லூரியோ போதிக்கின்றனவா என்பதை கண்டு உங்கள் குழந்தைகளை அந்த நிறுவனங்களில் பயில வையுங்கள். 

ஏனெனில் பிற்காலத்தில் இவைதான் உங்கள் குழந்தைகளை உலகிற்கு சிறந்த முறையில் அடையாளம் காட்டுவனவாகும்.  படிப்பு இப்போது CD க்களில் வந்து எல்லா கடைகளிலும் விற்க ஆரம்பித்து விட்டது.   மற்ற சாதுர்யங்களை பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு ஊக்கம் தருவதன் மூலம் வளர்க்க முடியும்.

கல்வி ஒன்றுக்கு மட்டுமே அல்லாது பொழுது போக்கு, தியானம் போன்றவை எல்லாவற்றிற்குமே  முக்கியத்துவம் அளிக்க  வேண்டும்.  இதற்கு இந்த வயது என்றெல்லாம் வேண்டாம்.  மாணவப் பருவம், குழந்தைப் பருவம் போன்றவை எதையும் கற்பதற்கு ஏற்ற  பருவம்.  

அதற்கு குழந்தைகளுடன் நல்லதொரு நட்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான காரியம்.  நல்லதொரு நட்பை நம்முடைய குழந்தைகளுக்கு நாம் கொடுப்போம்.  பாசத்தைப் பின்னுக்குத் தள்ளி நட்பை முன்னுக்கு கொண்டு வருவோம், இதில் தவறேதும் இல்லை.  காலத்திற்கேற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வோம். 

பெருந்தன்மை

ஒருவர் தெரிந்தே செய்யும் தவறை சுட்டிக்காட்ட வேண்டாம்.அப்படி செய்வதால் அவரது நெஞ்சம் மேலும்மேலும் குறுகுறுக்கும்.உடனே அவர் தன்னிலை விளக்கம் தருவார்.அல்லது சீற்றம் அடைவார்.இருவருக்கும் இடைவெளிதான் அதிகரிக்கும்.பெரும்பாலும் மக்கள் தாம் செய்த தவறுகளை  அறிந்தேயிருப்பர்.ஆனால் பிறர் அதை சுட்டிக்காட்டுவதை விரும்புவதில்லை. ஒருவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் முன் உங்கள் கருத்துரைகள் எந்த வழியிலாவது நிலைமையை சீராக்குமா,அன்பை வளர்க்குமா என்பதை எண்ணிப் பாருங்கள்.பெருந்தன்மையாக இருப்பவர்கள்,பிறர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களைக் குற்றவாளியாக்க மாட்டார். அதே சமயம் பரிவோடும் ஆதரவோடும் வார்த்தைகளால் அல்ல,நடத்தைகளால் அவர்களைத் திருத்துவார்கள்.
**********
முக்கியமானவைகளும் முக்கியமற்றவையும் காலத்தாலும் இடத்தாலும்  மாறுபடுகின்றன.பசியாக இருக்கும்போது உணவு முக்கியம்.வயிறு நிறைந்திருக்கும்போது உணவு முக்கியமில்லை.
**********
திரும்பத்திரும்ப செயல்படும் ஒரு செயல் தன புனிதத்தை இழந்து  விடுகிறது.காசியில் வசிப்பவர்கள்,அது ஒரு புனிதமான இடம் என்று கருதுவதில்லை.
**********
சமமானவர்களிடம் தான் சண்டை நடக்க முடியும்.நீங்கள் ஒருவருடன் சண்டை போடும்போது அவரை உங்களுக்கு சமமாக ஆக்கி விடுகிறீர்கள். மற்றவர்களை உங்களுக்கு மேலோ,கீழோ வைத்துக் கொண்டால் சண்டை  இருக்காது.மேலோர் என்றால் மதிப்பு காட்டுவீர்கள்.கீழோர் என்றால் அன்பும் பரிவும் காட்டுவீர்கள்.புலன்களுக்கு இடையே மனம் சிக்கிக் கொள்ளும்போது சண்டை இருக்கும்.புலன்களை விட மனம் பெரிது என்று உணர்ந்து கொண்டால் சச்சரவு இருக்காது.
**********

தன்னுறுதி

நம்மில் பலருக்கு பயந்த சுபாவம் இருக்கிறது.நமக்கு என்று சில உரிமைகள்,உணர்வுகள்,விருப்பங்கள்,தேவைகள் இருக்கும்.ஆனால் அவற்றை வெளிப்படுத்தத் தயங்குகிறோம்.அப்படியே சொன்னாலும் குற்ற உணர்வுடன் சொல்கிறோம்.இவ்வாறு நாம் நமது உணர்வுகளை மறைத்து அனுசரித்தே போகிறோம்.நமக்குப்  பிடிக்காதவற்றை நாம் பிறருக்காக,அவர்களுடைய வற்புறுத்தலுக்காக செய்து கொண்டிருக்கிறோம். இதில் கௌரவம் இல்லை.இது ஒரு துயரமான நிலை.பிறர் முகத்தாட்சணியம் பார்த்தே நாம் துயரப்படுகிறோம்.நம் கருத்தை வெளியிட்டால் மற்றவர்கள் வருத்தப்படுவார்களோ என்று நாம் அஞ்சுகிறோம்.பல சமயங்களில் இது உண்மைதான்.அதற்காக நாம்  நமது நியாய உணர்வுகளை விட்டுவிட முடியுமா?அவற்றை நாம் மூடி மறைக்க வேண்டுமா?நம்மை நாமே காட்டிக் கொள்ள அஞ்சத் தேவையில்லை. ஆனால் ஒன்று,நம்மை நாம் வெளிப்படுத்தும்போது மூர்க்கத்தனம் தேவையில்லை.அன்பாகவும் அமைதியாகவும் நாம் அதைச் செய்ய முடியும். அதே நேரத்தில் நாம் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.தன்னுறுதி இல்லாதவர்களால் தெளிவாகச் சிந்தித்து செயல் பட முடியாது.

தோல்வி

தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல:நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.
தோல்வி என்றால்,நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல: சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.
தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் இல்லை:முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.
தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை என்று பொருள் அல்ல:வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.
தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை:மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.
தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல:இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.
தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல: அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பொருள்.
தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை:உங்களுக்கு வேறு நல்ல எதிர் காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்.

எப்போது வரும்?

ராஜாஜியிடம் ஒரு செய்தித்தாள் நிருபர் கேட்டார்,''குத்தலான கேள்விகள் கேட்டால் கூட நீங்கள் கோபிப்பது இல்லையே?அதுஎப்படி?''
ராஜாஜி சொன்னார்,''நான் தவறு செய்தால் எனக்கு கோபப்பட உரிமை இல்லை.நான் சரியானபடி தான் நடந்து கொண்டிருக்கிறேன் என்றால் கோபப்படக் காரணம் இல்லை.தவறு செய்து விட்டு அதை நியாயப் படுத்த முயன்று தர்க்கத்தில் தோற்கும்போது தான் கோபம் வரும்.''

பூர்த்தி

சுடாத மாவுப் பலகாரம் ஒன்றை காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் போட்டால்,முதலில் படபடவென சப்தம் உண்டாகும்.பின்னர் அந்தப் பலகாரம் பொரியப் பொரிய  அதன் சப்தம் குறைகிறது.முழுவதும் பொரிந்து விட்டால் சப்தம் முற்றிலும் நின்று விடுகிறது.அதே போல ஒருவனிடம் ஞானம் அற்பமாய் இருக்கும் வரை அவன் வாதம் புரிந்து,பிரசங்கமும் பிரச்சாரமும் செய்து கொண்டு போகிறான்.ஆனால் ஞானம் பூர்த்தி அடைந்ததும் இந்த விதமான வீண் வேளைகளில் அவன் மனம் செல்வதில்லை.
                                                --ராமகிருஷ்ண பரமஹம்சர்.