ஒரு மகானைத் தேடி ஒருவன் படபடப்போடும் கோபத்தோடும் வந்தான்.கால் செருப்பை கழட்டிகோபமாக ஒரு மூலையில் வீசி எறிந்தான்.கதவை வேகமாக அடித்துச் சாத்தினான்.அப்புறம் மகானுக்கு வணக்கம் தெரிவித்தான்.மகான் சொன்னார்,''அப்பா,உன் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.முதலில் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா.''
''உயிரற்ற அப் பொருள் களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது?''என வினவினான்.அவன்.
''அந்தச் செருப்புக்கும் கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்துத்தானே உன் கோபத்தைக் காட்டினாய்.மன்னிப்பு கேட்க மட்டும் அவை உயிரற்றவை ஆகி விடுமா?''எனக் கேட்டார் மகான்.
அவன் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டான்.அவனது மூர்க்க குணம் அடங்கியது.
''நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம் தான் செய்கிறோம்.பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே கோபம் அடங்கி விடும்.''என்றார் மகான்.
Showing posts with label ஞானக் கதைகள். Show all posts
Showing posts with label ஞானக் கதைகள். Show all posts
புனிதம்
பெரும் புகழ் பெற்ற கபீர் தாசர் இஸ்லாம் மதத்தில் பிறந்தாலும் ஜாதி மத பேதங்களை மீறி மனித நேய தத்துவங்களை உலகுக்குச் சொன்னவர்.ஒரு முறை,சில பிராமணர்கள் கங்கை நதியின் புனிதமாக்கும் தன்மை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.ஒரு மரக் கோப்பையில் கங்கை நீரை நிரப்பி,'குடியுங்கள்,' என்று அவர்களிடம் நீட்டினார் கபீர்.பிற மதத்தைச் சேர்ந்த ஒருவர்தரும் கோப்பையைத் தொடுவதா என்று அவர்கள் தயங்கினர்.கபீர் பளிச்சென்று கேட்டார்,''என் கோப்பையை கங்கை நீர் புனிதமாக்காது என்றால் என் பாவங்களைக் கழுவி புனிதமாக்கும் என்று எப்படி நான் நம்புவது?''
பட்டாம் பூச்சி
வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என குருவிடம் சீடன் கேட்டான்.குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.வித விதமான பட்டம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.குரு சீடனை ஒரு பட்டாம் பூச்சியைப் பிடித்து வரச்சொன்னார்.எவ்வளவோ ஓடி முயன்றும் அவனால் ஒரு பட்டாம் பூச்சியைப் பிடிக்க முடிய வில்லை.''பரவாயில்லை,நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்''எனக்கூறி குரு சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் தோட்டத்தின் அழகைக் கண் குளிரக் கண்டு களித்தனர்.சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின.சீடன் துரத்திய பட்டாம் பூச்சி அவன் கைகளிலேயே இப்போது வந்து அமர்ந்தது.குரு சிரித்தார்.
''இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல. நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி தானே கிடைக்கும்,''என்றார் குரு.
''இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல. நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி தானே கிடைக்கும்,''என்றார் குரு.
வரம்
ஒருவன் சிவ பெருமானை நோக்கி வருடக் கணக்காகத் தவமிருந்தான்.சிவன் அவன் எதிரில் தோன்றி மூன்று வரங்கள் தருவதாகக் கூறினார்.முதல் இரண்டு வெகுமதிகள் அவன் குழப்பத்தால் வீணாயிற்று.மூன்றாவது வரம் என்ன கேட்கலாம் என அவரிடமே வினவினான்.அவர் சொன்னார்,''ஒரே ஒரு விருப்பம்,ஒரே ஒரு ஆசை தான் மதிப்பு வாய்ந்தது.அது தான் ஆசையின்மை.நீ கேட்க வேண்டியது ஆசையின்மையைத்தான்.நீ வேறு எதைக் கேட்டாலும்,அடுத்த கணமே வேறு ஏதாவது வேண்டுமென விரும்புவாய்.''
சிறந்த அறிஞர்
சாக்ரடீசுக்கு சிறையில்நஞ்சு கொடுக்கப் படுவதற்கு முன் டெல்பியிலிருந்த தெய்வீக அசரீரி,அவரை,முழு உலகிலும் மிக அறிவு கொண்டவர் என்று மொழிந்தது.இதைக் கேட்டு மகிழ்வடைந்த பலர் ஏதென்ஸ் சென்று அவரிடம்,''இதுவரை இதுபோல் நடந்தது இல்லை.இதற்கு முன் யாரையும் டெல்பியின் தெய்வ வாக்கு உலகிலேயே சிறந்த அறிஞர் என்று கூறியதில்லை.உங்களைத் தான் சிறந்த அறிஞர் என்று கூறியிருக்கிறது.நீங்கள் தான் உலகின் சிறந்த அறிஞர்.''என்றனர்.
அதற்கு சாக்ரடீஸ் ,''நீங்கள் டெல்பிக்குத் திரும்பச்சென்று,இது நாள் வரை அது சரியாகச் சொல்லியிருந்தாலும்,இம்முறை அது தவறு செய்து விட்டது என்று அதனிடம் கூற வேண்டும்.ஏனெனில் எனக்கு உண்மையில் ஒன்றும் தெரியாது.''செய்தி கொண்டு வந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர்.
அவர்கள் திரும்பச் சென்று தெய்வ வாக்கிடம்,''சாக்ரடீஸ் இதை மறுக்கிறார்.அவர் உலகிலேயே சிறந்த அறிவாளி இல்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறுகின்றார்,''என்றனர்.
இங்கே தான் இந்த சம்பவத்தின் அழகே இருக்கிறது.தெய்வ வாக்கு,''அதனால்தான் அவர் உலகில் தலை சிறந்த அறிவாளியாக இருக்கிறார்.இதில் முரண்பாடு எதுவுமில்லை.''என்று கூறியது.

கொடிய நரகம்
ஒருவன் இறந்தபின்,தான் நரகத்தில் இருப்பதாக உணர்ந்தான்.ஆனால் எல்லோரும் பயமுறுத்தியதை போல்கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகளோ, வேறு எந்த பயங்கரமான் சம்பவங்களோ இல்லை.அவன் ஒரு குளிரூட்டப் பட்ட,அழகான வேலைப் பாடுகளுடனும் எல்லா வசதிகளும் உள்ள ஒரு அறையில் இருந்தான்.ஆனால் அந்த அறையில் வெளியே செல்லும் வழி கிடையாது.அவனுடன் அந்த அறையில் மூன்று பேர் இருந்தனர்.கேட்ட ஆசைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப் பட்டன.உடன் இருந்தவர்கள்,ஒரு வயதான பெண்,ஒரு இளம் பெண்,ஒரு இளைஞன்.ஓரிரு நாட்கள் அவர்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர்.பேசிப் பேசி,இனிப் பேச ஒன்றுமில்லை என்ற நிலை.பேச்சைத் தொடர வழியில்லை.அங்குள்ள விளக்குகளை அணைக்க இயலாது.அவர்கள் உண்டார்கள்;உறங்கினார்கள்.அவர்கள் தனிமையிலும் இல்லை.ஆக அவர்கள் ஒருவருக்கொருவர் துன்பம் உண்டாக்குபவர்கள் ஆகிவிட்டார்கள்.திடீரென விழித்துக் கொண்ட மனிதனுக்கு இது தான் நரகம் என்பது தெரிந்தது.அவனுக்கு அங்கே இனி வாழ்வது முடியாத காரியமாய்த் தோன்றியது.மற்ற மூவரின் இருப்பே சுமையாகத் தெரிந்தது.தற்கொலை செய்து கொள்ள வழியில்லை.இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கேட்ட போது,நரகம் அழிவில்லாதது என்று பதில் வந்தது.ஆக, அடுத்தவர் தான் நரகம்.நம்முடைய மதங்கள் சித்தரிக்கும் நரகத்தை விடக் கொடியது.இதற்குப் பதிலாக எண்ணைக் கொப்பரையில் தூக்கி எறியப் பட்டால் கூடத் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் ஒரு மூடப் பட்ட அறையில் சிலருடன் எப்போதும் இருப்பது என்பது பெரிய நரகம் தான்!
--- ஜீன் பால் சார்த்ரே சொன்ன கதை.
--- ஜீன் பால் சார்த்ரே சொன்ன கதை.
துறவறம்
ஒரு வயதான கணவனும் மனைவியும் துறவறம் செல்லத் தீர்மானித்து வீடு சொத்து எல்லாவற்றையும் விட்டு வெளியேறினர்.சிறிது தூரம் சென்ற போது பாதையில் ஒரு வைரக்கல் கீழே கிடப்பதை கணவர் பார்த்தார்.தன மனைவி அதைப் பார்த்தால் அவளுக்கு அதன் மீது ஆசை வந்து விடுமோ என்று பயந்து விரைந்து சென்று தன காலுக்கடியில் அதை மறைத்தார்.அவருடைய நடவடிக்கை மனைவிக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.என்ன விஷயம் என்று வலியுறுத்திக் கேட்டதால் கணவர் உண்மையைச் சொன்னார்.மனைவி சொன்னார்,''வாருங்கள்,வீட்டுக்குப் போகலாம்.இன்னும் உங்களுக்கு வைரக் கல்லுக்கும் சாதாக் கல்லுக்கும் வித்தியாசம் தெரிகிறது.எனவே உங்களுக்கு துறவறம் போகக் கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை என்பது தெளிவாகிறது.அந்தப் பக்குவத்தை அடைந்தபின் நாம் துறவறம் செல்வோம்.''
ஏழு ஜாடி தங்கம்
கவலையில்லாத மனிதன் ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் புல்வெளிகளிலேஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் திரிவான்.அவனுக்கென்று ஒரே ஒரு துண்டு தவிர வேறு உடமைகள் கிடையாது.கவலையில்லாத அவனைக் கண்டு சைத்தானுக்குக் கவலை உண்டாயிற்று.அவனுக்குக் கவலை உண்டாக்க முடிவு செய்தது.ஒரு நாள் பகலில் அவன் ஒரு மரத்தடியில் ஆனந்தமாகப் படுத்திருந்த போது சைத்தான்,அசரீரியாகச் சொன்னது,''மனிதனே,நீ படுத்திருக்கும் இடத்திற்கு கீழே ஏழு ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது.அதையெடுத்துச் சென்று மகிழ்வுடன் இரு.''முதலில் அக்கறை காட்டாத அம்மனிதன் பிறகு அசரீரி உண்மையானது தானா என்று சோதித்துப் பார்க்க முடிவு செய்து தோண்டிப் பார்க்கையில் எழு ஜாடிகள் தென்பட்டன.ஆர்வமுடன் அவற்றை எடுத்துப் பார்த்ததில் ஆறு ஜாடி முழுக்கவும்,ஏழாவது ஜாடியில் பாதி அளவிலும் தங்கக் காசுகள் இருந்தன.அவனுக்கு தங்கக் காசுகளைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.ஆனால் ஏழாவது ஜாடியில் பாதி அளவே தங்கம் இருந்தது அவனுக்கு வருத்தத்தைத் தந்தது.உடனே அவன் ஒரு முடிவு செய்தான்.கடுமையாகப் பாடுபட்டுச் சம்பாதித்தேனும் அந்த ஏழாவது ஜாடியைத் தங்கக் காசுகளால் நிரப்ப வேண்டும் என்று எண்ணி அன்று முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.சம்பாதித்த பணத்தை தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது ஜாடியில் போட்டு வந்தான் பல காலம் உழைத்தும் அந்த ஜாடி நிரம்பவில்லை.அவனுடைய மகிழ்ச்சி,ஆனந்தமான பாடல்கள்,ஆட்டபாட்டங்கள் எல்லாம் அவனிடமிருந்து விடைபெற்று சென்று விட்டன.அவன் இப்போது கவலையே உருவானவனாக இருந்தான்.சைத்தான் அவனுடைய முயற்சியில் வெற்றி பெற்று விட்டான்.அந்த மனிதனைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஒரு துறவி அவனுடைய சமீப கால மாற்றங்களைக் கண்டு அவனிடம் கேட்டார்,''எங்கே போயிற்று உன் சந்தோசமெல்லாம்?அந்த ஏழு ஜாடி தங்கம் உனக்குக் கிடைத்ததா?''அவனுக்கு ஒரே ஆச்சரியம்.அவருக்கு இது எப்படித் தெரிந்தது என்று வினவினான்.துறவி சொன்னார்,''இதற்கு முன் இந்த ஜாடிகளை எடுத்தவர்கள் கதி இவ்வாறே ஆயிற்று.மேலும் இந்த ஏழாவது ஜாடி இறந்த ஒரு பேராசைக்காரனின் மண்டை ஓட்டில் செய்யப்பட்டது.அதை நிரப்ப யாராலும் முடியாது.முதலில் அந்த எழு ஜாடிகளையும் தூக்கி எறிந்து விட்டு முன் போல் ஆனந்தமாக வாழ்வாயாக!''
பணத்தின்குணமே அதுதான்.எவ்வளவு சேர்த்தாலும் அது திருப்தி
ஏற்படுத்தாது.மேலும் மேலும் சேர்க்கவே தூண்டும்.மனிதனுடைய மகிழ்ச்சியை அழித்து விடும்.
பணத்தின்குணமே அதுதான்.எவ்வளவு சேர்த்தாலும் அது திருப்தி
ஏற்படுத்தாது.மேலும் மேலும் சேர்க்கவே தூண்டும்.மனிதனுடைய மகிழ்ச்சியை அழித்து விடும்.
புத்திமதி
மசூதியிலிருந்து ஒரு ஞானி திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் ஒரு குடிகாரன் கையில் ஒரு இசைக் கருவியுடன் வழியில் போவோர் வருவோரை ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தான்.ஞானி அவனுக்குப் புத்திமதி சொல்ல,அவன் தனது இசைக் கருவியினால் அவர் தலையில் அடித்தான்.அவர் தலையும் உடைந்தது.இசைக் கருவியும் உடைந்தது.
மறுநாள் காலை ஞானி அந்தக் குடிகாரனுக்கு சில இனிப்புப் பண்டங்களும் கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்தார்.கூடவே ஒரு சிறு குறிப்பு;
''உங்களுடைய இசைக் கருவி உடைய என் தலை காரணமாக இருந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.இத்துடன் அனுப்பியுள்ள பணத்தைக் கொண்டு புதிய இசைக் கருவி வாங்கிக் கொள்ளவும்.''

எது ஞானம்?
''ஞானத்தில் சிறந்த ஞானம் எது?''என்று ஒரு ஞானியிடம் கேட்கப்பட்டது. ''இன்பத்தினால் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் சோர்வடையாமலும் இருப்பது தான்.''என்று ஞானி கூறினார்.;;அந்த ஞானம் தங்களுக்கு எப்படி வந்தது?''என்று கேட்டதற்கு ஞானி சொன்னார்,''கழுதையைப் பார்.உமக்குப் புரியும்.''கேட்டவருக்குப் புரியவில்லை.ஞானி விளக்கினார்,''இந்தக் கழுதை தினமும் தன முதுகில் கனமான அழுக்கு மூடைகளை ஆற்றுக்குக் காலையில் சுமந்து செல்கிறது.மாலையில் அழுக்கு நீங்கிய துவைத்த துணிகளை ஆற்றிலிருந்து சுமந்து வருகிறது.ஆனால் கழுதை போகும் போது அழுக்கு மூடைகளை சுமந்து செல்கிறோமே என்று வருத்தம் அடைவதும் இல்லை.திரும்பும் போது சுத்தமான துணிகளைச் சுமந்து வருகிறோம் என்று மகிழ்ச்சி அடைவதும் இல்லை.இதைப் பார்த்துத் தான் நான் ஞானம்அடைந்தேன்.''
ஏற்றுக்கொள்ளாதது
புத்தர் ஒரு முறை தனது சீடர்களுடன் ஒரு ஊருக்குள் சென்றார்.அந்த ஊர் மக்கள் பல்வேறு பலகாரங்களைக் கொண்டு வந்து அவரை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.ஆனால் அவரோ,எதையும் எடுத்துக் கொள்ளாமல் புன்முறுவலோடுபோய்விட்டார்.அடுத்த ஊர் வந்தது.அந்த ஊர் மக்களோ புத்தரை வாய்க்கு வந்தபடி திட்டினர்.அப்போதும் அவர் புன் முறுவலோடு சென்று விட்டார்.ஒரு சீடர் கேட்டார்,'சுவாமி,அவ்வளவு பேர் அவதூறாகப் பேசினார்களே,பதிலுக்கு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வந்து விட்டீர்களே?உங்களால் எப்படி முடிகிறது?'புத்தபிரான் சொன்னார்,''நாம் முதலில் சென்ற ஊர் மக்கள் கொடுத்த பலகாரம் எதையும் ஏற்கவில்லை அல்லவா?அதே போலத்தான் இந்த ஊர் மக்கள் கொடுத்ததையும் நான் ஏற்கவில்லை.அங்கே வயிறு ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.இங்கே மனம் ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.அவ்வளவுதான்.''
உயர்ந்தவர் யார்?
மகா விஷ்ணு : நாரதா,பெரியது எது?
நாரதர் :பூமி.
விஷ்ணு :உலகில் முக்கால் பாகம் நீர்.கால் பாகம் தானே நிலம்?
நாரதர் :தண்ணீர் தான் பெரியது.
விஷ்ணு :அகத்தியர் தவத் தீயை அணைக்க ஏழு கடலையும் குடித்தாராமே?
நாரதர் :அகத்தியர் தான் பெரியவர்.
விஷ்ணு :இவ்வளவு பெரிய வானில் அவர் ஒரு சிறு நட்சத்திரம் தானே?
நாரதர் :வானம் தான் பெரிது.
விஷ்ணு :வானமே,என் ஒரு பாத அடிதானே?
நாரதர் :பிரபோ,நீங்கள் தான் பெரியவர்.
விஷ்ணு :நீ கூறினாயே,நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம்,காற்று இந்த பஞ்ச பூதங்களால் ஆனா என் பக்தன் தான் உயர்ந்தவன்.அவனதுஉள்ளத்தில் தானே நான் பிடிபட்டுக் கிடக்கிறேன்?ஆக பக்தன் தானே உயர்ந்தவன்?
நாரதர் :ஆம்,பிரபு.

முன் கூட்டியே...
ஒரு மகான் ஒரு சீடனை தண்ணீருக்குள் அழுத்தினார்.அவனைஉள்ளே திண்டாடவிட்டு கடைசியில் வெளியே எடுத்தார்.
''உள்ளே இருந்தபோது மண்,பொன்,பெண் இவைகளை நினைத்தாயா?''என்று கேட்டார்.
''ஐயோ,நினைக்கவே இல்லை.மூச்சுக்கு வழி கிடைக்காதா என்றுதான் ஏங்கினேன்.துடித்தேன்,''என்றான்.
மண்ணும் பொன்னும் சிகிச்சைக்குப் பணம் கொடுக்குமே தவிர சிகிச்சை செய்யாது.
அந்தக் கடைசி நேரத்தில்,நாம் உலகை விட்டுப் பிரியும் நேரத்தில் மண்,பொன் எல்லாமே நமக்கு அற்பமாகத் தோன்றப் போகிறது.
அந்த நினைப்பை சற்று முன் கூட்டியே கொண்டு வந்தால் என்ன?
நாம் அறிவாளியாகவும்,முன் எச்சரிக்கைஉடையவராகவும் இருந்தால் அதைத்தான் செய்வோம்.
---அழகிக்கு ஆயிரம் நாமம் என்ற நூலில் ஸ்ரீ வேணுகோபாலன்.

சமூகம்
இது ஒரு சூபி கதை:
முன்னொரு காலத்தில் கித்ர்என்றொரு ஞானி இருந்தார்.ஒரு நாள் அனைவரையும் கூப்பிட்டு அவர் சொன்னார்,''நாளையிலிருந்து உலகம் முழுவதும் தண்ணீரின் குணம் மாறிவிடும்.அதனைக் குடிப்பவர்கள் அனைவரும் பைத்தியம் ஆகி விடுவார்கள்.இப்போது தண்ணீரை கொஞ்சம் மிச்சப் படுத்தி வைப்பவர்கள் மட்டுமே இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முடியும்.''யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.ஒரே ஒருவன் மட்டும் கொஞ்சம் தண்ணீரை மிச்சப்படுத்தி வைத்துக் கொண்டான்.மறுநாள் ஞானி சொன்னது போலவே நடந்தது.அந்த ஒரு ஆளைத் தவிர அனைவரும் பைத்தியம் ஆகி விட்டார்கள்.இவன் ஒருவன் மட்டும் எப்போதும்போல இருந்தான்.அனைவரும் பைத்தியம் ஆகி விட்டதை அவர்கள் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொண்டான்.
அந்தப் பைத்தியக்காரர்களிடமிருந்து தான் தனித்து நிற்பது அவனுக்கு மெல்ல மெல்ல விளங்கலாயிற்று.ஊர் மக்கள் அனைவரும் இவனைப் பைத்தியம் என்று கூற ஆரம்பித்தார்கள்.பாவம்!இவன் ஒரு தனி ஆள்.அவனால் தான் பைத்தியம் இல்லைஎன்றும் மற்றவர்கள் அனைவரும் பைத்தியம் என்றும் எப்படி நிரூபிக்க முடியும்?பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவனும் புதிய தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டான்.அவனும் இப்போது பைத்தியம் ஆகி விட்டான்.ஊர் மக்கள் இப்போது சொன்னார்கள்,''நம்மிடையே ஒரு பைத்தியக்காரன் இருந்தான்.அவனும் இப்போது குணமடைந்து விட்டான்..''
இந்தக் கதையின் கருத்து என்ன?ஓஷோ சொல்கிறார்:
சமூகம் மக்களின் மனோதத்துவத்தில்தான் வாழ்கிறது.உண்மையைப் பற்றிய கவலை சமூகத்தில் யாருக்கும் கிடையாது.மற்றவர்களுடன் கருத்து வேறுபாடின்றி இருப்பதிலேயே அது கவலை கொள்கிறது.சமூகத்துடன் ஒருவன் எவ்வாறு ஒத்துப் போவது என்ற கவலையே அது கொள்கிறது.சமூகம் பொய் என்றால் அவனும் பொய்யாகி விட வேண்டியிருக்கிறது.மனிதன் மிகவும் தனியானவன்.சமூகமோ மிகப் பெரியது.சமூகத்தை விட பெரிய ஏதோ ஒன்றின் ஆதாயம் இவனுக்குக் கிடைக்காதவரை அவன் சமூகத்திற்குக் கட்டுப் பட்டே தீர வேண்டும்.

வேண்டியவர்
எகிப்தின் பாலைவனப்பகுதியில் ஒரு ஞானி வசித்து வந்தார்.அவர் புலன்களை வென்றவர்.நாடோடியாகத் திரிந்து கொண்டிருப்பார்.அவரைக்காண மக்கள் நீண்ட தூரத்திலிருந்து எல்லாம் வந்தனர்.தீராத வியாதிகள் அவரால் குணம்,ஆனதாகச் சொல்லப்பட்டது.புற்று நோய் வந்து பல சிகிச்சைகளாலும் குணமடையாத ஒரு பெண் அவரைப்பற்றி கேள்விப்பட்டு அவரைத் தேடி அலைந்தாள்.ஒருநாள் ஒரு கடற்கரை ஓரமாக சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த அந்த ஞானியை அவர் இன்னார் என்று அறியாது,அவரிடமே அவர் இருப்பிடம் பற்றி விசாரித்தாள்.அவர் சொன்னார்,''போயும் போயும் அவனை எதற்காகத் தேடுகிறாய்?அவனைப் பற்றிய கதைகளை நம்பாதே!அவன் எந்த இறைவனிடம் மன்றாடுவானோ,அந்த இறைவன் உனக்கும் வேண்டியவர்தான்.அவர் மீது நம்பிக்கை வைத்துப் புறப்படு.கடவுள் விரைவில் உனக்கு குணம் அளிப்பார்.''முழு நம்பிக்கையுடன் சென்ற அப்பெண் குணமடைந்தாள்.
எங்கே கடவுள்?
சூபி ஞானி பாசித் பிசுடமியிடம் பேசிய பலரும் இறைவனை இடைவிடாது தொழுவதன் சிறப்புப் பற்றி கேட்டார்கள்.அப்போது அவர் கூறினார்,''நான் முதல் முறை மெக்காவுக்கு சென்றேன்.அங்குள்ள புனித மசூதி கட்டிடத்தைப் பார்த்தேன்.இரண்டாவது முறை போனபோது என் கண்களுக்கு கட்டிடம் தென்படவில்லை;அந்த இடத்தில் இறைவனை நான் கண்டேன்.மூன்றாவது முறை நான் சென்றபோது நான் புனித கட்டிடத்தையும் காணவில்லை;கடவுளையும் காணவில்லை.''
இறைவன் வேறு,நாம் வேறு என்ற உணர்வு உள்ளவரைதான் நாம் பல்வேறு இடங்களில் அவரைத் தேடுகிறோம். இது புனிதமான இடம்,இது அசுத்தமான இடம் என்றெல்லாம் மனம் அப்போது கற்பிதம் செய்யும்.எல்லாம் இறைவனே என்று உள்மனம் உணர்ந்தபின் தனியான இடமோ,தனியான தோற்றமோ நம்மால் உணரப்படுவதில்லை.
வரம்புகள் அற்ற ஒன்றை வரம்புக்குள் கட்டுப்படுத்த நினைப்பதே அறியாமைதான்.இந்த முறையில் வணங்கு,இத்தனை முறை ஜெபி போன்ற வரைமுறைகளை செயல்படுத்துவதில்தான் ஈடுபாடு காட்டுமே தவிர இயற்கையில் ஒன்றாது.''எது இயல்போ,அதுவாகவே இரு''என்கின்றனர் சூபி ஞானிகள்.
===''சூட்சுமத்தை உணர்த்தும் சூபி கதைகள்'' என்ற நூலிலிருந்து.

பிணைப்பு
ஞானி ஒருவர் தெருவில் வந்து கொண்டிருந்தார்.எதிரே ஒரு விவசாயி தனபசுவைக் கையிற்றால் கட்டி அழைத்து வந்தான்.சிரித்துக்கொண்டே ஞானி விவசாயியிடம் கேட்டார்,''நீ பசுவுடன் வருகிறாயா?பசு உன்னுடன் வருகிறதா?''குழம்பிப்போன விவசாயி,''இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி?பசுதான் என்னோடு வருகிறது,''என்றான்.உடனே ஞானி,''அப்படியானால் கயிறு எதற்கு?விட்டுவிடு!''என்றார்.''கயிற்றை விட்டால் பசு ஓடி விடுமே?''என்றான் விவசாயி.''அப்படியானால் அதுதான் உன்னைப் பிணைத்துள்ளது.நீ அதைப் பிணைக்கவில்லை,''என்றார்ஞானி. விவசாயிக்கு அவர் சொன்னது புரியவில்லை.ஞானி விளக்கினார்,''பசு உன்னுடன் வருவதாயிருந்தால் நீ கட்டை அவிழ்த்து விட்டாலும் அது உன்னுடன் வர வேண்டும்.ஆனால் நிலைமை அப்படி இல்லை.கட்டை அவிழ்த்தால் அது ஓடிவிடும்.அது ஓடினால் அதைத் துரத்திக் கொண்டு நீ ஓடுவாய்.நீ ஓடினால் அது உன்னை விரட்டிக் கொண்டு வராது.உண்மையில் அதனுடன் நீதான் கட்டப்பட்டுள்ளாய்.''
எவற்றையெல்லாம் 'இது என்னுடையது'என்று பிணைக்கிறோமோ,உண்மையில் அவற்றுடன் நாம் தான் பிணைக்கப்பட்டுள்ளோம்.எவை வேண்டுமோ,அவற்றை நாம் தான் பாதுகாக்கிறோம்.
எவற்றையெல்லாம் 'இது என்னுடையது'என்று பிணைக்கிறோமோ,உண்மையில் அவற்றுடன் நாம் தான் பிணைக்கப்பட்டுள்ளோம்.எவை வேண்டுமோ,அவற்றை நாம் தான் பாதுகாக்கிறோம்.
பூதம்
ஒரு நாள் யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள்.அதைக் கண்ணன் பார்த்துக் கொண்டு இருந்தான்.அப்போது வெண்ணை திரள்கிறது.அதைச் சாப்பிட கண்ணனுக்கு ஆசை.அம்மாவிடம் தெரியாதது போலக் கேட்கிறான் கண்ணன்,''அது என்ன அம்மா?''யசோதையும் விட்டுக் கொடுக்காமல்,''அது ஒரு பூதம்,''என்கிறாள்.'பூதம் என்ன செய்யும் அம்மா?''-இது கண்ணனின் அடுத்த கேள்வி.''அது நம்மைக் கடித்துத் தின்று விடும்,''என்று பயமுறுத்துகிறாள் தாய். கண்ணன்,''அம்மா,அது உன்னைக் கடித்துத் தின்று விட்டால்,நான் அம்மாவுக்கு எங்கே போவேன்?அப்பூதத்தை என்னிடம் கொடு.நான் அதைக் கடித்துத் தின்று விடுகிறேன்,''என்று சொல்லியவாறே வெண்ணையை எடுத்து விழுங்கினான் கண்ணன்.
கைத்தடி
ஒரு கண் பார்வையற்றவரும் அவர் நண்பனும் ஒரு பாலைவனத்தில் இரவில் தங்கி காலை எழுந்தபோது கண் பார்வையற்றவர் தன கைத்தடி என்று நினைத்து குளிரில் விறைத்துப்போய் அங்கு இருந்த பாம்பை புதிய அழகான கைத்தடி கிடைத்தது என்று மகிழ்ந்தார்.நண்பன் எழுந்து பாம்பைக் கண்டு அலறி அதைத் தூக்கி எறியச்சொல்ல,கண் பார்வையற்றவர் நண்பன் பொறாமையினால் அப்படி சொல்வதாகக் கூறி அதைத் தூக்கி எறிய மறுத்து விட்டார்.அப்புறம் என்ன ஆயிற்று?பாம்பு கடிபட்டு இறந்து விட்டார்.
நாமும் இதுபோல அறியாமை என்ற குருட்டுத்தனத்தால்,பலவித துன்பங்களை,வழவழப்பானஅழகிய தடி என்று பற்றிக்கொண்டு,அது வேண்டாம்,விஷம் என்று ஞானிகள் வற்புறுத்தினாலும் ஏற்க மறுத்து பிடிவாதமாக இருந்து நம் அழிவைத் தேடிக் கொள்கிறோம்.

கடவுள் இருக்கிறாரா?
ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்பு மயமானவர். அவருக்கு எழுதப் படிக்க தெரியாது.அவருக்கு மிகுந்த புகழ் இருந்தது.கேசவசந்திரசென் என்பவர் அப்போது இந்தியாவிலே சிறந்த ஒரு அறிவாளியாக இருந்தார்.அவர் படிக்காத ராமகிரிஷ்ணருக்கு இருந்த புகழ் கண்டு பொறாமை கொண்டு அவரிடம் வாதம் செய்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்கக் கருதி அவர் இருக்கும் இடம் தேடி சென்றார்.எல்லோருமே ராமகிருஷ்ணர் தோல்வி அடைவது உறுதி என்று கருதினர்.பரமஹம்சரின் சீடர்களுக்கு பயம் வந்துவிட்டது.ஆனால் குருவோ சிரித்துக் கொண்டிருந்தார்.சென்,''கடவுள் இல்லை''என்பதற்கான வாதங்களை எடுத்துக் கூற ஆரம்பித்தார்.பின் அவர் ராமகிருஷ்ணரிடம்,''கடவுள் இருக்கிறாரா?''என்று கேட்டார்.அவரோ சென் சொல்ல விரும்புவதை எல்லாம் மொத்தமாக சொல்ல சொன்னார்.சென் வாதங்களை சொல்லிக் கொண்டே போக பரமஹம்சரோ வெகுவாக அதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.அவ்வப்போது 'பிரமாதம்,பிரமாதம்!சரியாகச் சொன்னீர்கள்!'என்று பாராட்டிக் கொண்டிருந்தார்.சென்னுக்கோ ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை.நீண்ட நேர உரைக்குப் பின் அவர் பரமஹம்சரிடம்,''இப்போது சொல்லுங்கள் கடவுள் இருக்கிறாரா,இல்லையா?''என்று கேட்டார்.எல்லோரும் பரமஹம்சர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..அவர் சொன்னார்,''நண்பரே!இதுவரை எனக்குக் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வந்தது.இன்று உங்கள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு அந்த சந்தேகம் முழுமையாகத் தீர்ந்து விட்டது. கடவுள் உறுதியாக இருக்கிறார்.என்று இப்போது நம்புகிறேன்.''எல்லோரும் புரியாமல் விழிக்க அவர் தொடர்ந்தார்,''கடவுள் இல்லாமல் ஒருவருக்கு எப்படி இவ்வளவு ஞானம் வரும்?எவ்வளவு தெளிவான பேச்சு!நான் ஒரு படிக்காத தற்குறி. ஏழை.என்னை மாதிரி சாதாரணமான ஆளைப் படைக்க கடவுள் தேவையில்லை.ஆனால் உங்களைப்போல ஞானம் படைத்தவர் கடவுள் இல்லாமல் எப்படி வர முடியும்?சாத்தியமே இல்லை.''கேசவர் உடனே தலை குனிந்து பரமஹம்சரின் பாதத்தில் விழுந்தார்.அவரின் எஞ்சிய காலத்தை ராமகிருஷ்ணரின் சீடராக கழித்தார்.
Subscribe to:
Posts (Atom)