வியக்கவைக்கும் தகவல்கள் - 8




நம்முடைய சிறு பிராயத்தில் நம்முடைய நகங்களில் புள்ளிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை நண்பர்களிடம் பெருமையாக காட்டுவோம் இது கருடன் இட்ட பூ என்று. ஆனால் உண்மையில் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் ரத்தத்தில் குறைபாடு உள்ளது என்று அர்த்தமாம்.

கிரீன்விச் நாட்டில் இப்போது என்ன நேரம் என்று அறிய வேண்டுமா? உங்கள் கடிகாரத்தை அப்படியே தலைகீழாக பாருங்கள். அதுதான்.

காடுகள், இயற்கை என்றாலே மரங்களளின் பசுமை தான் நினைவுக்கு வருகிறது ஆனால் மரங்களே இல்லாத கண்டம் உண்டு என்றால் நம்புவீர்களா?  நம்புங்கள் அண்டார்டிகா கண்டத்தில் மரங்களே கிடையாது.

நாம் பிறக்கும்போது நமது உடலில் இருக்கும் எல்லா பாகமும் வளரும். ஆனால் நமது கரு விழிகள் மட்டும் வளர்வதில்லை.

மனிதனின் மூளை என்றால் எல்லோருக்கும் ஒரே எடையில் இருக்குமா?

இருக்காது, அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்களை விட இந்தியர்களின் மூளை எடை அளவில் சற்று குறைந்துதான் காணப்படுகிறதாம். ஆனால் எடை குறைவிற்கும் அறிவாற்றலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக 2.6 கிலோ எடை இருக்க வேண்டும்.

பிறந்த குழந்தைகள் அழுது கொண்டே தான் இருக்கிறது. ஆனால்... கண்ணீர் வருமா?

இல்லை. பிறந்த குழந்தைக்கு 15 நாட்கள் கழித்துத்தான் கண்ணீர் சுரப்பிகள் வளர்கின்றன, ஆகையால் பிறந்ததும் குழந்தைகள் அழுதாலும் கண்ணீர் வராது இது தெரியாமல் நாம் தாய்மார்கள் கண்ணீர் வராமலே அழுகுறான் பாரு கல்லுளிமங்கன் என்பார்கள்.