ஓடாதீங்க!

''டாக்டர்,எங்கேயாவது போனா,போன இடத்திலேயே தூங்கி விடுகிறேன்.''
'அதனால தப்பு ஒண்ணும் இல்லையே.அவனவன் தூக்கமே வர மாட்டேங்குது என்கிறான்.'
''அட புரியாம பேசாதீங்க.நான் ஒரு திருடன்.திருடப்போன இடத்திலேயே தூங்கினால் என் கதி என்னாகும்?''
**********
''என் பையன் பர்ஸ்ட் க்ளாசில பாஸ் பண்ணிட்டான்.''
'அப்படியா சந்தோசம்.அடுத்து என்ன படிக்க வைக்கப் போறீங்க?'
''செகண்ட் க்ளாஸ்தான்.''
**********
''சட்ட சபையை எப்போது கூட்டுவாங்க?''
'குப்பை சேர்ந்தவுடன்.'
**********
''உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்.''
'உண்மை.அதுவாவது உன்னை நல்ல உதைச்சிருக்கும்.'
**********
''இவ்வளவு அவசரமா ஆபீசுக்கு ஓடுகிறாயே!அங்க போய் என்னத்தக் கிழிக்கப் போகிற?''
'தேதி காலண்டரைத்தான்.'
**********
''உனக்கு ஒரு உதை நான் கொடுத்தா சென்னையில போய் விழுவ தெரியுமா?''
'கொஞ்சம் மெதுவாய் உதை.எனக்கு விழுப்புரம் தான் போக வேண்டியிருக்குது.'
**********
''என்ன சார்,பாக்கெட்டிலே கரப்பான் பூச்சியை வச்சிருக்கீங்க!''
'பாக்கெட்டில இருக்கிற பணத்தைக் காப்பாத்த அதை விட வேறு வழி
தெரியலை.என் மனைவி அதைப் பார்த்து மட்டும் தான் பயப்படுவாள்.'
**********
''எங்க மேனேஜர் வரும்போது மரம் மாதிரி நின்று கொண்டிருந்தது தப்பாய்ப் போச்சு.''
'ஏன்,என்ன ஆயிற்று?'
''கூப்பிட்டு அறு அறு என்று அறுத்துவிட்டார்.''
**********

கடிக்காதே!

'என் மனைவி தன கையாலேயே எனக்குசாப்பாடு  பரிமாறுவாள்.''
'பரவாயில்லை,நீ கொடுத்து வைத்தவன்.'
''ஆனால் சமையல் செய்வது நான்தான்.''
**********
''என்னங்க,என் பல் ரொம்ப வலிக்குது.''
'பல் வலிக்கிற அளவுக்கு என்னத்த கடிச்ச?'
''உங்க அம்மாவைத்தான்.''
**********
''டாக்டர்,எவ்வளவு கடினமான ஆப்பரேசனை நல்லபடியா முடிச்சுட்டீங்களே,என் வாழ்த்துக்கள்.''
';எல்லாம் ஆண்டவன் செயல்.'
''அப்ப ஆப்பரேசனுக்கு உரிய பீசை உண்டியலில் போட்டு விடட்டுமா?''
**********
''அம்மா,ஏதாவது பழைய பொருள் விக்கிற மாதிரி இருக்கா என்று வாசலில் ஒரு ஆள் கேட்கிறார்.''
'இப்ப,அப்பா இல்லை என்று சொல்.'
**********
திருடனின் மனைவி:இப்பெல்லாம் எங்க வீட்டுக்காரர் சரியாகவே தொழில் செய்வதில்லை.அடிக்கடி வெளியூர் போய்விடுகிறார்.இந்த மாதம் மட்டும் மூணு தடவை வேலூருக்குப் போயிட்டாருன்னா பாத்துக்கங்க.''
**********
தலைவர்:என்னப்பா,தொகுதியில கெட்டது தான் நடக்குதுன்னு மக்கள் பேசிக் கொள்கிறார்களாமே?
தொண்டன்:நீங்க தொகுதியில நடந்து போனதை சொல்லியிருப்பாங்க
**********
''டாக்டர்,மூணு மாதமா எனக்குக் கடுமையான இருமல்.''
'அப்படியா,மூணு மாதமும்  சும்மாவா இருந்தீங்க?'
''இல்லை டாக்டர்,நான் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.''
**********
''உங்களுக்கு அல்சராமே?''
'அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்குறீங்க?'
**********

எப்படித்தெரியும்?

இராணுவ வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. இரண்டு பேர் ஹெட் போனில் பேசியபடி மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.திடீரென ஒருவர் பிடி நழுவி மேலேயிருந்து கீழே  விழுந்தார்.அவர்,''அச்சச்சோ,நான் கீழே விழுந்திட்டேன்.''எனக் கத்தினார்.நண்பன் கேட்டார்,''ரொம்ப அடி பட்டிடுச்சா?''உடனே பதில் வந்தது,''மடையா,நான் இன்னும் கீழே போய்க்கொண்டுதான் இருக்கேன்.அதுக்குள்ளே எப்படித் தெரியும்?''
**********
''என்ன டாக்டர்,நீண்ட நேரமா என் உடம்பை டெஸ்ட் பண்றீங்களே?''
'என்னப்பா செய்றது?பணம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியலையே!'
**********
''ச்சே என்ன புத்தகம் இது?ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கு.ஆனால் கதையே இல்லையே!''
'நல்லாப் பாருங்க,டெலிபோன் டேரக்டரியா இருக்கப் போகுது!'
**********
''தலையிலே என்ன கட்டு?''
'இனிமே அடிக்க மாட்டேன்னு என் மனைவி என் தலையில் அடிச்சு சத்தியம் செஞ்சா....'
**********
''அட,கோழிக்கு ஏன் குடிக்க வெந்நீரை கொடுக்கிறாய்?''
'அப்பத்தான் அது அவிச்ச முட்டையிடும்.'
**********
''காந்தி,இயேசு,அம்பேத்கார்,இவர்களுக்குள் ஏதாவது ஒரு ஒற்றுமையான் விஷயம் சொல்லு,''
'அவர்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் பிறந்தார்கள்.'
**********
பாட்டி சொன்னார்,''என் துணிகளெல்லாம் நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்பதற்காக நானே துணிகளைத் துவைத்துக் கொள்கிறேன்.''பேத்தி சொன்னாள்,''நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக துணிகளை வாசிங் மெசினில் போடுகிறேன்.''
**********

பொன்மொழிகள்

சொர்க்கம் தாயின் காலடியில் இருக்கிறது.
வணக்கங்களின் தாய் பாவங்களை விடுதல்.
பேராதரவின் தாய் பொறுமையாய் இருத்தல்.
மருந்துகளின் தாய் குறைவாகச் சாப்பிடுதல்.
ஒழுக்கங்களின் தாய் குறைவாகப் பேசுதல்.
**********
ஒரு மனிதன் தினம்,
கொஞ்சம் சங்கீதம் கேட்க வேண்டும்.
ஒரு நல்ல கவிதையைப் படிக்க வேண்டும்.
சிறந்த ஓவியத்தைப் பார்க்க வேண்டும்.
முடிந்தால் அர்த்தத்தோடு சில வார்த்தைகள் பேச வேண்டும்.
**********
இளமை ஒரு குழப்பம்:
வாலிபம் ஒரு போராட்டம்:
முதுமை ஒரு மனமிரக்கம்.
**********
சுடத் தெரியாதவன் கையில் துப்பாக்கி இருந்தாலும் சுடத்தெரிந்தவன் அவனிடம் சரணடைகிறான்.ஆட்சி ஒரு முட்டாளிடம் இருந்தால் கூட அறிவுள்ளவனும் அவனுக்கு அடி பணிகிறான்.
**********
கிடைக்காதவரை எது பெரிதாகத் தோன்றுகிறதோ
கிடைத்ததும் எது அற்பமாகத் தோன்றுகிறதோ,
மேலும் கிடைக்காதா என்று எது ஏங்கச் செய்கிறதோ,
அது ஆசை எனப்படும்.
**********
அதிகமாகக் கடன் வாங்கும் தந்தை மகனுக்கு எதிரி:
வாயாடியான தாயார் பெண்ணுக்கு எதிரி.
மிகவும் அழகான பெண் கணவனுக்கு எதிரி:
ஆமாம் போடும் அமைச்சன் அரசனுக்கு எதிரி.
**********
தாய் நாட்டை நேசிப்பது இயல்பு.
மனித குலம்முழுவதையும் நேசிப்பதே சிறப்பு.,
**********
நல்லவனாக இருப்பது எளிது:
நேர்மையானவனாக இருப்பது கடினம்.
**********
நம் மனச்சான்று தவறு செய்யாத நீதிபதி.
---நாம் இன்னும் அதைக் கொல்லாமல் இருந்தால்.
**********
சிறு புண்களையும்,ஏழை உறவினர்களையும்
ஒருபோதும் அலட்சியப் படுத்தி விடக்கூடாது.
**********
எந்தச்செய்தியையும் எப்படிச்சொன்னாலும் நம்பாத மக்களை நம்ப வைப்பதற்கு சிறந்த வழி,கிசுகிசுவெனப் பேசுவதுதான்.
**********

அன்பு எது?

அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை.அதுதான் அன்பின் அழகு சுதந்திரம்.வெறுப்பு ஒரு பந்தம்,சிறை.உங்கள் மீது திணிக்கப்படுவது.உலகமே  வெறுப்பிலும்,அழிவிலும்,வன்முறையிலும் போட்டியிலும்,பொறாமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.செயலாலோ,மனதாலோ ஒருவர் மற்றவரைக்  கொன்று கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் சொர்க்கமாக இருக்க வேண்டிய இந்த உலகம் நரகமாக இருக்கிறது.அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.
நேற்றுயாராவதுஉங்களிடம்இனிமையாகநடந்துகொண்டிருப்பார்கள்.அல்லது நாளை யாராவது இனிமையாகப் பேச உங்களை அழைத்திருக்கலாம்.இது  அன்பே அன்று.இது வெறுப்பின் மறுபக்கம்.இத்தகைய அன்பு எந்த நேரத்திலும் வெறுப்பாக மாறலாம்.ஒருவரை லேசாக சுரண்டிப் பாருங்கள். அன்பு மறைந்து வெறுப்பு வெளிப்பட்டுவிடும்.அதற்குத் தோலின் ஆழம் கூடக் கிடையாது.உண்மையான் அன்பிற்குப் பின்னணி கிடையாது. நேற்றோ,நாளையோ கிடையாது.அதைப் பகிர்ந்து கொள்ளக் காரணம் தேவையில்லை.காலை வேளையில் பறவைகள் பாடுகின்றன.ஒரு குயில் அழைக்கிறது.காரணம் இல்லாமல் தான்.இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒரு பாடலாக வெடித்துப் பீரிடுகிறது.அப்படிப்பட்ட அன்பின் பரிமாணத்திற்குள் நீங்கள் நுழைய முடியுமானால் அதுவே சொர்க்கம்.வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும்.அன்பு அன்பையே உருவாக்கும்.

ஒட்டகத்தின் சிறப்புகள்!!!



தமிழ் சினிமாக்கள் பலவற்றில் கதாநாயகர்கள், வில்லன்களால் பாலைவனங்களில் தனித்து விடப்படும்போது அவர்களை காப்பாற்ற வரும் ஜீவன்களில் தவறாமல் இடம் பிடிப்பது ஒட்டகம் ஆகும். பாலைவனங்கள் என்றால் உடனடியாக நம் நினைவில் இடம் பிடிப்பதும் இந்த ஒட்டகம் தான் மேலும் ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பாலைவனங்களோடும், பாலைவனமக்களோடும் இறன்டற கலந்துவிட்ட ஒட்டகத்தின் சிறப்புகள் பற்றி இன்று காண்போம்!

ஒட்டகம் பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.

ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது!

ஒரு வாரம் வரையில் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மற்ற விலங்குகளை போலல்லாமல், நீர் அருந்தாமல் உடல் வரண்ட நிலையில் இருந்து மீண்டும் நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 லிட்டர் நீர் அருந்தவல்லது. ஏனைய பிற விலங்குகளில் (மனிதன் உள்பட) நீரற்ற வரண்ட நிலையில் இருந்து இவ்வாறு தடாலடியாக நீர் அருந்த இயலாது ஏனெனில் இரத்தத்தில் திடீறென்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் ஆஸ்மாட்டிக் அழுத்தம் என்னும் அடர்த்தி அதிகமான பகுதி நோக்கி நகரும் விரவல் விளைவால் சிவப்புக் குருதியணுக்கள் வெடித்து இறக்க நேரிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை.

ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 10 ° செல்சியஸ் வரையான வேறுபாடுகளை தாங்க வல்லது ஏனைய பிற விலங்குகளின் உடல் 2-3 ° செல்சியஸ் வெப்பநிலை வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது.

ஒட்டகம் 15 மணிநேரம் தொடர்ந்து நடக்கும். எந்த நிலையிலும் ஒட்டகத்திற்கு வியர்க்காது, ஏனென்றால் அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது

நாள் ஒன்றுக்கு ஒட்டகம் சராசரியாக 40 லிட்டர் வரை பால் தரும் மேலும் இப்பால் 60 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது.

மேற்கூறிய அனைத்துவகை உடலமைப்புகளை பெற்றிருப்பதால்தான் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காக ஒட்டகங்கள் கருதப்படுகின்றன!


குங்கும பூவே கொஞ்சும் புறாவே ..





குங்குமப்பூ அப்படினா நமக்கு உடனே ஞாபகம் வரது தமிழ் படத்தில வர்ர சீன்தான் குழந்தை கலரா பிறக்கனும்னா குங்குமப்பூவ பால்ல கலந்து குடிக்க சொல்லுவாங்க. அது தவிர இந்த பூவ பத்தி வேற ஒன்னும் தெரியாது. அது மட்டும் இல்ல நான் இது வரைக்கும் குங்குமப்பூனா குங்குமக் கலர்ல சிவப்பா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது குங்குமப்பூ பிங்க் கலர்ல சூப்பரா கீழ படத்துல இருக்கற மாதிரி இருக்கும்னு.


அப்புறம் நாம பயன் படுத்தறது குங்குமப்பூக்களின் இதழ்களை இல்ல. அதுக்கு உள்ள இருக்கற மகரந்த இதழ்கள் மட்டும்தான். மேல படத்தில இருக்கற பூவுக்கு உள்ள இருந்து வர சிவப்பு மகரந்தம்தான் நாம பயன்படுத்தற குங்குமப்பூ. 1500 மலர்களில் இருந்து எடுத்தா அதிக பட்சம் 50 மிகி அளவுதான் குங்குமப்பூ கிடைக்கும். அதனாலதான் அது விலை மிக அதிகமா இருக்கு.



குங்குமப்பூ பல வகைகளிலும் பயன்படுது மருத்துவம், சாயம், உணவு வகை தயாரித்தல், வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன் படுத்தறாங்க. குங்குமப்பூவினால நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும், காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு எல்லாத்துக்கும் மருத்தா பயன்படுது. ஆனா அளவுக்கு அதிகமாவோ அல்லது மருத்துவர் ஆலோசனை இல்லாமயோ பயன்படுத்துனா இது மிகக் கடுமையான உடல்நல பாதிப்புகளை உண்டாக்குமாம். அதனால அதிகமா உபயோகப்படுத்த கூடாது.


 அது மட்டும் இல்லீங்க குங்குமப்பூ குழந்தைக்கு நிறத்தை குடுக்கும்னு எந்த உறுதியான தகவலும் இல்லை. ஆனா பெரியவங்களுக்கு அழகு சாதனப் பொருட்கள் செய்யும் போது பயன்படுத்தறாங்க. எது எப்படியோ இந்த குங்குமப்பூ வழக்கம் போல எல்லா மலர்களையும் போலவே அழகா இருக்கு. பார்க்கவே ஆசையா இருக்கு.

சோதிடம்

சோதிடன் ஒருவன் தன மகன் சோதிடத்தில் சிறந்து விளங்குவானா என்பதை சோதிக்க விரும்பினான்.ஒரு நாள் இரவு மழையும் கொடுங்காற்றும் அடிக்கையில் அவர்கள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.சோதிடனும் மகனை விசாரிக்க சொன்னான்.பின் அவன் எப்படிக் கையாளுகிறான் என்பதைக் கவனமாகக் கேட்டான்.
கதவைத்திறந்த பையன்,வந்த ஆளிடம்,''நீங்கள் வடமேற்குத் திசையிலிருந்து வருகிறீர்கள்.உங்கள் பெயர் கருப்பன்:உங்கள் மனைவி அனுப்பி நீங்கள் வந்திருக்கிறீர்கள்.என்ன நான் சொல்வதெல்லாம் சரிதானே?''என்று கேட்க அந்த ஆள் உணர்ச்சி மேலிட,''அய்யா,நீங்கள் சொன்னது முழுவதும் சரி,''என்று சொல்லிவிட்டுத் தன பிரச்சினையை சொல்ல மகனும் சில வழிமுறைகளைக்  கூறிவிட்டுப் பின் பணம் பெற்றுக்கொடு வந்தவரை அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தான்.
ஆச்சரியத்தில் இருந்து  மீள முடியாத தந்தை கேட்டார்,''அவன் வந்த திசை,அவன் பெயர்,அவன் யார் சொல்லி வந்தான் என்பதையெல்லாம் எப்படி அவ்வளவு சரியாகச் சொன்னாய்?''மகன் சொன்னான்,''கடுமையான காற்று வடமேற்கு  திசையிலிருந்து அடிக்கிறது.அவன் முடி பின் பக்கம் கலைந்து,முன் பக்கம் விழுந்திருந்தது.எனவே அவன் வடமேற்கு திசையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.விளக்கு வெளிச்சத்தில் அவன் வைத்திருந்த குடையில் அவன் பெயர் எழுதியிருந்தது.மூன்றாவதாக,இந்த இடி மழையிலும்,காற்றிலும்,இருளிலும் ஒருவன் உயிரை துச்சமாக மதித்து வருகிறான் என்றால் அவன் மனைவி நச்சரித்திருக்க வேண்டும்.எனவே தான் அவன் மனைவி சொல்லி வந்தான் என்றேன்,'' தந்தைக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.மகன் தன்னை விட சிறப்புடன் வாழ்வான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

உன்னைப்பற்றி

உன்னைப்பற்றி நீயே உயர்வாகவோ
       குறைவாகவோ பேச வேண்டாம்.
உயர்வாய்ப் பேசினால் மக்கள்
        உன்னை நம்ப மாட்டார்கள்.
தாழ்வாய் பேசினால் நீ சொல்வதை விட
       அதிகத் தாழ்வாக எண்ணுவார்கள்.
**********
புயலில் உயரமாகிற அலைகள் மாதிரி விளம்பரம்.
அலை ஓய்ந்த ஆழ்கடல் போல மௌனமானது புகழ்.
மனிதன் கூட்டுறவால் விளம்பரம் பெறுகிறான்.
தனிச் செயல்களால் புகழ் பெறுகிறான்.
விளம்பரம் சாராயம் போல.
புகழ் தாய்ப்பால் போல.
             --கவிஞர் வைரமுத்து.
**********
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் கேட்டார்,''அன்று ஒரு இரண்யனை அழிக்க கடவுள் நரசிம்மாவதாரம் எடுத்தார்.இன்று இரண்யனை விடக் கொடியவர் பலர் நாட்டில் உள்ளனரே?கடவுள் ஏன் அவதாரம் எடுக்கவில்லை?''பரமஹம்சர் சொன்னார்,''அன்று ஒரு பிரகலாதன் இருந்தான்.இன்று ஒருவர் கூட பிரகலாதன் போல இல்லையே.''
**********
பிரச்சினைகளை வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.பிரச்சினை வரும்போது,உங்கள் தலையை நிமிர்த்தி அதனை நேருக்கு நேர் பார்த்து சொல்லுங்கள்,''நான் உன்னை விடப் பெரியவன் உன்னால் என்னை வெற்றி கொள்ள முடியாது.''
**********

மனசுக்கு இதமாக கணக்கு பன்னுவோமே..

நண்பர்களே,
நன்றாக யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை.சாதரணமாக நடைமுறைக்கு ஏற்றவாறு கணக்கிட்டாலே போதும்.

கேள்வி ஒன்று:
ஒரு ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். முதலிலிருந்து இரண்டாவதாக ஓடும் ஆளையும் முந்தி விட்டீர்கள். இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?
...
....

பதில்:
இரண்டாவது ஆளையும் முந்தி விட்டால் முதலிடம்தானே. இது என்ன கேள்வி என்கிறீர்களா?
தவறு.
இரண்டாவது ஆளை முந்தி நீங்கள் அவரிடத்தில்தானே வருவீர்கள்.
அதாவது... இரண்டாவது இடத்தில். சரிதானே!.


கேள்வி இரண்டு:
முதல் கேள்விக்கு எடுத்தது போல, நிறைய நேரம் எடுத்து யோசிக்காமல், வேகமாக பதில் சொல்லுங்கள். சரியா?

ஒரு ஓட்டப் பந்தயத்தில் கடைசி ஆளை நீங்கள் முந்தி விட்டீர்கள் என்றால் அப்போது உங்களின் இடம் எது?

...
....

பதில்:
இதில் தப்பாக சொல்ல வழியே இல்லை. கடைசிக்கும் முதல் ஆள். இதுதானே உங்கள் பதில்.
தவறு.
கடைசி ஆளை எப்படிங்க முந்த முடியும்.நீங்களே கடைசி ஆளாய் இருந்தாலும் கூட, கடைசிக்கும் முதல் ஆளைத்தானே முந்த முடியும்.

சே! என்று தானே சொன்னீங்க. பின்னால் உள்ள இரண்டிலும் வெற்றிதான். வாங்க!.

கேள்வி மூன்று:
சாதாரண கூட்டல் கணக்குதான். சின்ன தந்திரம் இருக்கிறது. மனதில்தான் போடணும். கால்குலேட்டர் எடுக்கக் கூடாது. சரியா?

ஒரு 1000 எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு 40 சேருங்கள். இதில் மேலும் ஒரு 1000 சேருங்கள். இப்போது அதில் ஒரு 30 சேருங்கள். அதில் இன்னொரு 1000 சேருங்கள். இதில் ஒரு 20ஐ சேருங்கள். மீண்டும் ஒரு 1000 சேருங்கள். அதில் ஒரு 10ஐ சேருங்கள். மொத்தம் எவ்வளவு?
...
....

பதில்:
5000 வந்திருக்கிறதா?
சரியான பதில் நான்காயிரத்து நூறுதான்.
நம்பவில்லையா?
இப்போது கால்குலேட்டர் கொண்டு கூட்டிப் பாருங்கள்.

போகட்டும் விடுங்கள். அடுத்த கேள்விக்கு சரியான விடை சொல்லி விடுவீர்கள். போவோமா?

கேள்வி நான்கு:
Maryயுடைய தந்தைக்கு ஐந்து பெண் குழந்தைகள்.
அவர்களுடைய பெயர்கள் முறையே
1. Nana 2.NiNi 3.Nunu 4.Nene எனில்
ஐந்தாவது குழந்தையின் பெயரென்ன?
...
....


பதில்:
NaiNai என்று சொன்னால் சரியானதுதான் என்று சொல்ல மாட்டேன்.
தவறு. அவளுடைய பெயர் Mary.
சந்தேகம் வந்தால் கேள்வியை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

சரி விடுங்க.
கடைசியாக போனஸ் கேள்வி. சொல்லிடுவீங்க

போனஸ் கேள்வி:
ஒரு வாய் பேச இயலாதவர் tooth brush வாங்க ஒரு கடைக்குச் சென்றார். கடைக்காரரிடம், ஒருவன் பல் விளக்குவது போல செய்கை காண்பித்து, அதைக் கடைக்காரருக்கு புரிய வைத்து, வெற்றிகரமாக வாங்கி விட்டார். இப்போது ஒரு பார்வையற்றவர் sunglasses வாங்க அதே கடைக்கு வந்திருப்பதாகக் கொள்வோம். அவர் எப்படி கடைக்காரருக்கு விளங்க வைப்பார்?
...
....

பதில்:
இதென்ன பெரிய அதிசயமா? அவர் வாயால் கேட்டு வாங்கி வருவார். அவர் பார்வையற்றவர்தான் பேசத் தெரியாதவர் அல்லவே.

நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சாதரணமான கணக்குத்தான் இவை.

உனக்கான என் இதயத்தின் குரல்; காதல் கவிதை!!!


நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.

ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
***************************** 
முனிவர்கள் 
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்..,

நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்!
***************************** 
சிந்திய மழை
மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை
ஆனால்,
ஒவ்வொரு முறையும்
நீ சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும்
உன் கன்னத்துக்குள்ளேயே
போய்விடுகிறதே!!!





கடவுள் இருக்கிறாரா?

ராமகிருஷ்ண  பரமஹம்சர் அன்பு மயமானவர். அவருக்கு எழுதப் படிக்க தெரியாது.அவருக்கு மிகுந்த புகழ் இருந்தது.கேசவசந்திரசென் என்பவர்  அப்போது இந்தியாவிலே சிறந்த ஒரு அறிவாளியாக இருந்தார்.அவர் படிக்காத ராமகிரிஷ்ணருக்கு இருந்த புகழ் கண்டு பொறாமை கொண்டு அவரிடம் வாதம் செய்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்கக் கருதி அவர் இருக்கும் இடம் தேடி சென்றார்.எல்லோருமே  ராமகிருஷ்ணர் தோல்வி அடைவது உறுதி என்று கருதினர்.பரமஹம்சரின் சீடர்களுக்கு பயம் வந்துவிட்டது.ஆனால் குருவோ சிரித்துக் கொண்டிருந்தார்.சென்,''கடவுள் இல்லை''என்பதற்கான வாதங்களை எடுத்துக் கூற ஆரம்பித்தார்.பின் அவர் ராமகிருஷ்ணரிடம்,''கடவுள் இருக்கிறாரா?''என்று கேட்டார்.அவரோ சென் சொல்ல விரும்புவதை எல்லாம் மொத்தமாக சொல்ல சொன்னார்.சென் வாதங்களை சொல்லிக் கொண்டே போக பரமஹம்சரோ வெகுவாக அதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.அவ்வப்போது 'பிரமாதம்,பிரமாதம்!சரியாகச் சொன்னீர்கள்!'என்று பாராட்டிக் கொண்டிருந்தார்.சென்னுக்கோ ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை.நீண்ட நேர உரைக்குப் பின் அவர் பரமஹம்சரிடம்,''இப்போது சொல்லுங்கள் கடவுள் இருக்கிறாரா,இல்லையா?''என்று கேட்டார்.எல்லோரும் பரமஹம்சர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..அவர் சொன்னார்,''நண்பரே!இதுவரை எனக்குக் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வந்தது.இன்று உங்கள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு அந்த சந்தேகம் முழுமையாகத் தீர்ந்து விட்டது. கடவுள் உறுதியாக இருக்கிறார்.என்று இப்போது நம்புகிறேன்.''எல்லோரும் புரியாமல் விழிக்க  அவர் தொடர்ந்தார்,''கடவுள் இல்லாமல் ஒருவருக்கு எப்படி இவ்வளவு ஞானம் வரும்?எவ்வளவு தெளிவான பேச்சு!நான் ஒரு படிக்காத தற்குறி. ஏழை.என்னை மாதிரி சாதாரணமான ஆளைப் படைக்க கடவுள் தேவையில்லை.ஆனால் உங்களைப்போல ஞானம் படைத்தவர் கடவுள் இல்லாமல் எப்படி வர முடியும்?சாத்தியமே இல்லை.''கேசவர் உடனே தலை குனிந்து பரமஹம்சரின் பாதத்தில் விழுந்தார்.அவரின் எஞ்சிய காலத்தை ராமகிருஷ்ணரின் சீடராக கழித்தார்.

துன்பம்

துன்பத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?முதலில் நீங்கள் துன்பத்திலிருந்து தப்பிச்செல்ல எண்ணாமல்,அது உங்களிடம் இருப்பதற்கு அனுமதித்தால்,அதை சந்திக்கத் தயாராக இருந்தால்,அதை எப்படியாவது மறந்து விட வேண்டும் என்று முயற்சி செய்யாமல் இருந்தால் அப்போது நீங்கள் மாறுபட்டவர் ஆகிறீர்கள்.துன்பம் இருக்கும்.ஆனால் அது உங்கள் வெளியே இருக்கும்.அது உங்கள் துன்பமாயிராது.யாருக்கோ நடப்பது போலத் தோன்றும்.ஒரு மெல்லிய இன்பம் உங்களுக்குள் பரவ ஆரம்பிக்கும்.ஏனெனில் நீங்கள் உண்மையில் இன்பமயமானவர்கள்.துன்பத்தை நடு நிலையுடன் பாருங்கள்.என்ன துன்பம்,அது ஏன் வந்தது என்று உணர்ச்சி வசப்படாமல்  பாருங்கள்.அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதீர்கள்.மனமானது,''துன்பத்தைப் பாராதே,தப்பி ஓடிவிடு ''என்றுதான் கூறும்.ஆனால் தப்பி ஓடி விட்டால் ஒருபோதும் மகிழ்வுடன் இருக்க முடியாது.

சுலபமான வேலை

குழந்தை வளர்ப்புதானே! அது ரொம்ப சுலபமான வேலை!குழந்தை நம்முடையது அல்ல:பிறருடையது என்று பாவித்துக் கொள்ள வேண்டும்.அவ்வளவுதான்!பிறருடைய குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது தெரியாதவன் எவனுமே இவ்வுலகில் இல்லை!
**********
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி நினைக்காததை  எல்லாம் நினைப்பதாக நீங்களே நினைத்துக் கொள்வீர்கள்.
**********
அன்பு டெலஸ்கோப  வழியாக எதையும் பெரிதாகப் பார்க்கிறது.பொறாமை மைக்ராஸ்கோப  வழியாகச் சின்னதாகப் பார்க்கிறது.
**********
இரண்டு பொருட்களை நாம் இழந்த பிறகுதான் அதன் மதிப்பை உணர்கிறோம்.ஒன்று ஆரோக்கியம்,மற்றொன்று  இளமை.
**********
வீரம் உள்ளவன் என்று பாராட்டப்படுபவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் தைரியசாலி அல்ல.சாதாரண மனிதனைக் காட்டிலும் பத்து நிமிடம் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கிறான்.அவ்வளவுதான்.
**********
அனுபவம் என்பது ஒரு புது விதமான ஆசிரியர்.அது பாடங்களைக் கற்றுத் தந்தபின் தேர்வு வைப்பதில்லை.தேர்வின் மூலம் தான் பாடங்களைக் கற்றுத் தருகிறது.
**********
வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற அளவுக்கு இன்பங்களும் மடிந்தே ஆக வேண்டும் என்ற அளவுக்குத் துன்பங்களும் சம விகிதத்தில் கலந்ததே இவ்வுலகம்.
**********

பிளாஸ்டிக் எமன்

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.




- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே


- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.


சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.


நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.


- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்


மக்கிப் போவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்


வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்


பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது


எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.


பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?


சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை


அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

வாழ்வில் வெற்றிபெற விவேகானந்தர் கூறிய அறிவுரைகள்



வாழ்கையில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பலரின் சிந்தனையில் உள்ள ஒரு பொதுவான கேள்வியாகும். இந்த கேள்விக்கு எமது குரு விவேகானந்தர் எப்படி பதிலளித்திருக்கிறார் என்று கீழே காணுங்கள்

எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள்.

தானேபெரியவன், தானேசிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

சிலநேரங்களில், சிலசங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்.

நீங்கள் சொன்னதேசரி, செய்வதேசரி என்று கடைசிவரை வாதாடதிர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொளியுங்கள்.

உண்மைஎது, பொய்எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதிர்கள்.

அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதிர்கள்.

எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ, சொல்லி கொண்டிருக்காதிர்கள்.

கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.

உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதிர்கள்.

புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள். 

பேச்சிலும், நடத்தையிலும், திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

தேவையான இடங்களில் நன்றியும், பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.

இந்த கோட்பாடுகளை நீங்கள் உங்கள் வாழ்வில் பின்பற்றினால் நிச்சயம் வெற்றி உங்கள் வாசல் கதவை வந்து தட்டும் என்கிறார் எமது குரு விவேகானந்தர்.


தெரிந்துகொள்ள

பீஹாரின் பழைய பெயர் மகத நாடு.பௌத்த மதம் பரவிய பிறகு மகத நாடெங்கும் பௌத்த  விஹாரங்கள் தோன்றின.விகாரங்கள்  நிறைந்தது விகார் ஆயிற்று.அதுவே பின்னர் பீஹார் எனத் திரிந்து விட்டது.
**********
VOTE என்பது இலத்தீன் மொழியின் VOTUM என்ற சொல்லிலிருந்து வந்தது.இதற்கு VOW,PROMISEஎன்று பொருள்.நமக்கு நல்லது செய்வதாக உறுதி அளிப்பவர்களுக்கு நாமும் வாக்கு அளிப்பதாகக் கூறுகிறோம்.
**********
தாய்லாந்து என்பதற்கு சுதந்திர பூமி என்று பொருள்.
**********
கேரளம் என்ற பெயர் கேரா என்ற சொல்லிலிருந்து வந்தது.கேரா என்ற சொல்லுக்கு தேங்காய் என்று பொருள்.
**********
பைஜாமா  என்பது பாரசீகச் சொல்.பை என்றால் கால்.ஜாமக் என்றால் துணி.
**********
மிசோரம் என்ற பெயர் எப்படி வந்தது  தெரியுமா?மி என்றால் மனிதன்.ஜோ என்றால் மலை.மலையில் வாசம் செய்யும் மனிதன் என்று பொருள்.
**********
சோவியத் என்ற ரஷ்யச் சொல்லுக்கு அறிவுரை என்று பொருள்.
**********
சயிண்டியா என்ற லத்தீன் சொல்லுக்கு மிகப் பரந்த அறிவு என்று பொருள்.இதிலிருந்துதான் அறிவியலுக்கு SCIENCE என்ற ஆங்கில வார்த்தை வந்தது.
**********
மொசைக் என்ற ஆங்கில சொல்லுக்கு சிறு கற்களால் உருவாக்கப்பட்ட ஓவியம் என்று பொருள்.
**********
நவநீதம் என்றால் புதிதாக எடுக்கப்பட்டது என்று பொருள்.
**********
கிரேக்க மொழியில் DEMOS என்றால் மக்கள் என்றும் ,KRATOS என்றால் ஆட்சி என்றும் பொருள்.இந்த இரு வார்த்தைகளிலிருந்து வந்ததுதான் DEMOCRACY.
**********
PARADISE என்பது ஒரு பெர்சியச்சொல்.இதற்கு இன்பத்தோட்டம் அல்லது மான் பூங்கா என்று பொருள்.
**********

உலகின் மிகப் பழமையான உயிரி கண்டுபிடிப்பு




தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியா ஒன்று, ஏனைய கோள்களில் காணப்படும் உயிரினங்கள் எவ்வாறு அங்குள்ள கடுமையான சுற்றாடலைத் தாக்குப்பிடித்து வாழுகின்றன என்பதற்கான துப்பை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பூமி மேற்பரப்பில் இருந்து 2.8 கிலோமீட்டர்கள் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள உருளை வடிவமான Desulforudis audaxviator என்னும் இந்த உயிரினம் பிராணவாயு இல்லாமலேயே உயிர் வாழும் என்பதுடன், அது வாழும் இடத்தில் காணப்படுகின்ற ஒரே உயிரினம் இது மாத்திரமே - அதாவது - உயிர் வாழ்வதற்கு வேறு எந்த உயிரினத்தையும் இது சார்ந்திருக்கவில்லை.

ஒளியே இல்லாத இடத்தில் உயிர் வாழ்வதுடன், ஒரு உயிரி தானாகவே இனப்பெருக்கமும் செய்துகொள்கிறது.

கார்பன், நைட்ரஜன் போன்றவை மாத்திரமே இது உயிர் வாழ்வதற்கு தேவையானவையாகும்.

சக்திக்காக இது சூரியனை சார்ந்திராமல் நீர், ஹைட்ரஜன் மற்றும் சல்பேட் ஆகியவற்றையே நம்பியிருக்கிறது.

உடைந்தது

ஒரு புதுக் கவிதை:

கண்ணாடி  டம்ளரை
குழந்தை   அழ அழ
அதன்  கையிலிருந்து  பிடுங்கி
உயரே வைத்தாள்   அம்மா.
உடைந்து போயிற்று
குழந்தையின் மனது!

அபிப்பிராயம்

பிறர் அபிப்பிராயத்திற்காக உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.பிறர் நம் அபிப்பிராயங்களை ஏற்கவில்லை என்பதற்காக இடிந்து போகாதீர்கள்.பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு காரியம் செய்துவிட்டு பின்னால் அவர்கள் நம்மை இப்படி செய்ய வைத்து விட்டார்களே என்று வருத்தப்படாதீர்கள்.முதலிலேயே  இயலாது என்றால் முடியாது எனத் தைரியமாய்க் கூறிவிடுங்கள்.எதற்கும் மன்னிப்புக் கேட்கும் மனோபாவம் கொள்ளாதீர்கள்.எதற்கும் உங்களையே நொந்து கொண்டு,தன நிலைக்குப் பரிதாபப்பட்டு சித்திரவதை செய்து கொள்ளாதீர்கள்.பிறர் உங்களைக் குழந்தையாய்ப் பாவித்து உச்சி மோந்து,சீராட்டி,பாராட்டி,தாலாட்டும் நிலையில் உங்களைப் பிறரிடம் பறிகொடுக்காதீர்கள்.

வெறிபிடித்த மத நம்பிக்கை

உலகில் எந்த ஒரு மதத்தையும் இறைவன் தோற்றுவித்ததாக வரலாறு கிடையாது, மாறாக மதகுருமார்களால் மதமும் அந்த மதத்திற்கான கடவுள்களும் தோற்றுவிக்கப்பட்டன, இயேசு, மகாவீரர், புத்தர் போன்ற மத குருமார்களையே கடவுளாக்கிய மதங்களும் உண்டு.
மதப் பரப்புரைகளின் நோக்கம் பற்றி உண்மையைக் கூர்ந்து பார்த்தால் அவை இன ஆளுமையை முன்னெடுக்கும் ஒரு வழிமுறையாக உள்ளதைக் காணலாம். புனித தலங்களில் நடக்கும் மதச் சடங்குகள் பெரும்பாலும் மதங்கள் தோன்றிய அந்த இனத்தவருக்கே முன்னுரிமை குறித்து
செய்யப்பட்டும், பிற இனத்தினருக்கு வழிபாட்டு உரிமை என்ற அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்.
ஐரோப்பியர் அல்லாதோர் போப் ஆண்டவராக வரமுடியாது, காஃபாவினும் நுழைந்து தொழும் உரிமை அரபு வம்சாவளிகளுக்கே உரியது மற்றவர்கள் அதைச் சுற்றி வெளியே தொழுகை நடத்தலாம். இந்தியாவிலும் பெரிய இந்துக் கோவில்களில் நடத்தப்படும் சடங்குகள், பூசைகள் பார்பனர்களாலேயே நடத்தப்பெறுவதும், பிறருக்கு மறுக்கப்படுவதும் அதற்கு பாதுகாவலாக ஆகமம், நியமம், பரம்பரை என்கிற கட்டுபாடுகளை வைத்திருப்பதைப் பார்க்கிறோம்.

எந்த இனம் எப்போது தோன்றியது என்று இன்று அறுதி இட்டுக் கூறமுடியாத நிலையில், புழக்கத்தில் இருக்கும், வரலாற்றுடன் தொடர்புடைய, காலத்திற்குள் அடங்கும் மதங்களை நம்பலாம்.

மதங்கள் எப்போதும் அது தோன்றிய நாடுகளின், இனங்களின் பழக்க வழக்கங்களை, வாழ்வியல் முறைகளை உள்ளடக்கியது. எதோ ஒரு புதிய மதம் வடதுருவத்தில் தோன்றினால் அதைப் பின்பற்றுபவர்கள் குளிர்காரணமாக குளிரைதாங்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள், அந்த மதம் ஒருவேளை மற்ற நாடுகளிலும் பரவினால் மத அடையாளமாக அந்த குளிருடையும் சேர்ந்தே மத விதிமுறையாக பரவும். ஆனால் வெப்ப நாடுகளில் அவை பொருத்தமானதா என்று பார்த்தால் அறிவு விதிப்படி பொருத்தமற்றது. அது வடதுருவ மக்களின் அன்றாட உடை என்ற அளவில் இருக்கிறது என்ற அளவில் மட்டுமே பொருந்தும். இது போல் தான் மதங்களில் இருக்கும் மதம் சார்ந்த அடையாளங்கள் அனைத்தும். ஆனால் இவற்றையெல்லாம் இன்றைய காலத்தில் அறிவியலுடன் முடிச்சுப் போட்டு புனிதம் கற்பிக்கப்படுவதுடன், மறைமுகமாகச் சொல்லப்படும் மனித குல மேன்மைக்கான வழிமுறை என்று இட்டுக் கட்டப்படுவதெல்லாம் அறிவீனம்.

"நல்ல வேளை பன்றிக்காய்ச்சலால் எங்கெளுக்கெல்லாம் ஆபத்து இல்லை...ஏனெனில் நாங்கள் பன்றி இறைச்சி உண்பது இல்லை...இதை 1400 வருடங்களுக்கு முன்பே தீர்க்க தரிசனமாக உணர்ந்ததால் குரானில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டு இருகிறது" என்றார் என் நண்பர்.

"பறவைக்காய்ச்சல், மாடுகளுக்கு வரும் கோமாரி நோய் பற்றி குரானில் முன்னெச்சரிக்கை எதுவும் கொடுத்து தடை செய்யவில்லை. இல்லை என்றால் கோழி பிரியாணியும், மாட்டு இறைச்சியும் உண்ணும் பாக்கியம் கூட உங்களுக்கு கிடைத்திருக்காது' என்று அந்த நண்பருக்கு சொன்னேன்.

"விதண்டாவாதம்" என்றார்.

"அப்ப அதை வெறும் மத நம்பிக்கை, மதக்கட்டுபபாடு என்று சொல்லிவிட்டுப் போங்கள், அதையும் பன்றிக்காய்சலையும் ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்...ஐரோப்பியர்களும், சீனர்களுக்கும் முக்கிய உணவே பன்றி தான்...அது இழிவானது என்று சொல்லித் தடுக்கப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள் ?" என்றேன்

"உங்க பேச்சில் இந்த்துத்துவா வாசனை அடிக்கிறது" என்றார்

அதுக்கு மேல் அவரிடம் விவாதிக்க நானும் விரும்பவில்லை.

இன்னொரு உறவினர் ,

"ஐரோப்பிய கிறித்துவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியர்கள் இன்றும் கோவனத்துடன் தான் இருப்பார்கள்" என்றார்

"ஐயா சாமி, கிறித்து பிறப்பதற்கு முன்பே, உலகின் முதல் பல்கலை கழகம் நாளந்தாவில் நம் இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது, யுவான் சுவாங் மற்றும் பல சீன மாணவர் வந்து தங்கிப் படித்துச் சென்றார்கள்" என்றேன்

மதம் அதன் கொள்கைகள் நல்லவையாகவே இருந்துவிட்டுப் போகட்டம், ஆனால் அதைப் பற்றி பெருமை பேசும் போது மறைமுகமாக பிற மதங்களை மட்டம் தட்டுக்கிறோம் என்ற உணர்வும் பிறர் புண்படுவார்கள் என்று பலரும் நினைப்பதே இல்லை. எந்த ஒரு மதத்திலும் தனிச் சிறப்பு இருக்கும், ஆனால் எந்த ஒரு மதத்திற்கு தனிப் பெருமை என்பது இல்லவே இல்லை.

கடவுள் நேரில் வந்தா காப்பார்?; ஒரு சுவாரஸ்யமான பதிவு!!!



ஒரு ஊரில் மழைபெய்து கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எல்லோரும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி உயிர் பிழைக்கும் பொருட்டு ஊரைவிட்டுச் சென்றனர்.  ஒருவன் மட்டும் தெளிவாகச் சொன்னான். "எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது, கடவுள் என்னைக் கண்டிப்பாக காப்பாற்றுவார், ஆகையால் நான் இங்கேதான் இருப்பேன்" என்று கூறி ஊரைவிட்டு வெளியே கிளம்ப மறுத்தான்.

ஊரெங்கும் பண்பலை வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வழியே வெள்ள  எச்சரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. மக்கள் அச்சப்பட்டு கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறினர். அந்த ஒருவன் மட்டும் ஊரைவிட்டு வெளியே வர மறுத்தான். மழை தொடர்ந்து பெய்தது. ஒரு  ஜீப் வண்டியில் மீட்புக்குழுவினர் வந்து அவனைப் பார்த்து, ‘வண்டியில் ஏறிக்கொள்  உயிரைக் காத்துக்கொள்என்றனர். இவனோ "கடவுள் காப்பாற்றுவார்.., நீங்கள் போகலாம்", என்றான். 

அடாது மழை விடாது பெய்ததுஊரில் இவன் மட்டும் தான் இருந்தான். இப்போது இவனது மார்பு அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. மீட்புக்குழுவினர் படகில் வந்தனர். இவனருகில் வந்து 'தயவு செய்து படகில் ஏறிக்கொள், உயிரைக் காத்துக்கொள் என்றனர் இவனோ "கடவுள் காப்பாற்றுவார்.., நீங்கள் போகலாம்" என்றான். இப்பொழுது வெள்ளநீர் இவனது தோள்பட்டையை தாண்டிக் கொண்டிருந்தது.

இறுதிக்கட்ட மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ‘எலிகாப்டர்' ஒன்று இவனை வட்டமிட்டு  செய்தி கூறியது. 'தயவு செய்து எலிகாப்டரில் ஏறிக்கொள்.., உயிரைக்காத்துக்கொள் என்று வேண்டிக்கொண்டது. இவனோ மீண்டும் "கடவுள் காப்பாற்றுவார்.., நீங்கள் போகலாம்", என்றான். இடி மின்னலுடன் மழை பிரளயமாக உருவெடுத்தது. இவன் நீரில் முழுவதும் மூழ்கி இறந்தான், விண்ணுலகம் சென்று கடவுளை கண்ட அவன் அவருடன் தர்க்கம் செய்தான்.

இவ்வளவு பெரிய வெள்ளத்தில் எல்லோரும் சுயநலமாக கடவுளாகிய உன்னைப் பற்றி கருதாமல் வேறு ஊருக்குச் சென்று தஞ்சம் புகுந்தார்கள். நான் ஒருவன் மட்டும் தான் உன்னை நினைத்து உருகி வேறிடம் செல்லாமல் ‘கடவுள் காப்பாற்றுவார் என்ற ஒரே எண்ணத்தில் தீவிரமாக இருந்தேன். ஆனால் நீயோ என்னைக்  கைவிட்டு விட்டாயே இது முறையா?" என்றான். 

கடவுள் சொன்னார் ‘ஜீப், படகு, எலிகாப்டர் இவற்றை அனுப்பிவைத்து உன்னைக் காப்பாற்ற முயன்றது யார் என்று நினைத்தாய். நீ என் மீது  வெறும் நம்பிக்கை மட்டும்தான் வைத்து இருந்தாய், உயிர் பிழைப்பதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் நானோ உனக்காக முதலில் ஒரு ஜீப்பை அனுப்பினேன் நீ வர மறுத்து விட்டாய், சோர்ந்துவிடவில்லை நான், நீ.., என் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை மெச்சி உனக்காக ஒரு படகை மீண்டும் நான் அனுப்பி வைத்தேன் அதிலேயும் நீ ஏறிவர மறுத்துவிட்டாய். இறுதிவினாடிகளில் கூட உன்னை எப்படியாவது காக்கவேண்டும் என்ற என் தீவிர எண்ணத்தால் ஒரு எலிகாப்டரை அனுப்பி முயற்ச்சித்தேன் உன் அறியாமையால் அதிலும் ஏறிவர நீ மறுத்து உயிர் நீத்ததாய்.

உன் பொருட்டு நான் இத்தனை முயற்சித்தும், நீ ஒரு சிறு  முயற்சிகூட எடுக்காமலிருந்து உயிர் நீத்ததாய் இதில் எனது தவறு எங்கே உள்ளதென்று நீ கூறு என்றார். புவியில் கோடான கோடி ஜீவராசிகள் உண்டு, ஒவ்வொறுவருக்கும் நானேதான் நேரில் வந்து உதவ வேண்டுமென்றால் உங்களுக்கெல்லாம் உணர்ச்சிகள் எதற்கு?, சிந்திக்கும் மூளை எதற்கு? என்றார்.

உண்மைதானே! நாம்தான் நம்மை காத்துக்கொள்ள வேண்டுமே தவிர கடவுள் தான் வந்து காக்க வேண்டும் என்று நினைப்பது, ஒருவன் நம்மை வெட்டுக்கத்தியால் வெட்ட வரும் போது கடவுள் நம்மை காப்பார் என்று கண்ணை மூடிக்கொண்டு கழுத்தை காட்டிக்கொண்டிருப்பதற்க்கு சமமானது.

Bariatrics என்றால் என்ன?

அதிகமான உடல் பருமன், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது.

அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காக சிறுகுடலின் ஒருபகுதி, அல்லது வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. சிறுகுடலை மாற்றி அமைப்பதன்மூலம் உடல் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சாதாரணமாக ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு அதிகமானால் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் உடல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பருமனாக இருந்து ஆல்கஹால் உபயோகிக்காதவராக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யலாம். மேலும் அவரது மனநலம் திருப்திகரமாகவும் வயது 18 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உடல் பருமன் BMI (Body Mass Indx) என்னும் குறியீட்டால் கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட (1) உடல் எடையை கிலோகிராமில் கண்டறிந்து கொள்ளவேண்டும் மேலும் (2) உடலின் உயரத்தை மீட்டரில் அளந்து அதன் வர்க்கத்தை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். (1) ஐ (2) ஆல் வகுத்து வரும் எண்தான் BMI என்பது.

BMI ன் மதிப்பு 20 க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர் என தீர்மானிக்கலாம். 20 முதல் 25 வரை இருந்தால் சராசரி எடை எனவும், 25 முதல் 30 வரை இருந்தால் அதிக எடை எனவும், 30 முதல் 40 வரை இருந்தால் உடல் பருமனானவர் எனவும் 40 க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர் எனவும் வகைப்படுத்தலாம்.

ஹஹஹா

செய்தித்தாள் வாசிக்கும் ஒருவர்: கோவையில் முக்கிய நபர் கைது.
அருகில் இருப்பவர்: அது ஏன்,மதுரையில் முக்கினா கைது செய்ய மாட்டாங்களா?
**********
''அந்த டாக்டர் கால் ஆணி எடுப்பதில் கெட்டிக்காரர்.''
'அப்படீன்னா மீதி முக்கால் ஆணியை யார் எடுப்பார்கள்?'
**********
''ஆஹா,இதைவிட சிறந்த ஓவியத்தை என்னாலேயே படைக்க முடியாது,''என்று பெருமை பொங்கச் சொன்னான் ஒரு ஓவியன் தன நண்பனிடம்.'தன்னம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதே!'என்று அவன் தோளில் தட்டி ஆறுதல் படுத்தினான் நண்பன்.
**********
''ஜலதோசத்திற்கு ஜன்னல் அருகே படுக்கச் சொன்னேனே,செய்தாயா?''
'நேற்று ஜன்னல் அருகே தான் தூங்கினேன்.'
''ஜலதோஷம் போயிடுச்சா?''
'ஜலதோஷம் அப்படியே இருக்கு ஆனால் என் வாச்சும் பர்சும் தான் போயிடுச்சி.'
**********
ஒருவன் தன டாக்டர் நண்பருடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.அப்போது அவன்,''ஏன் டாக்டர்,வருத்தமாய்  இருப்பதுபோலத் தெரிகிறதே?என்று கேட்டான்.டாக்டர் சொன்னார்,''இன்று ஓரு தவறு செய்து விட்டேன்.ஒரு நோயாளிக்கு தவறான மாத்திரையை எழுதி  விட்டேன்.''நண்பன்,''அது என்ன ஆபத்தானதா?''என்று கேட்டான்.டாக்டரும் கவலையுடன் சொன்னார்,''இல்லை,அவன் ஒரு பெரிய பணக்காரன் இந்த மாத்திரை சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகிவிடுவானே?''
**********
ஒருவன் தன நண்பனிடம் சொன்னான்,''மச்சி,எனக்கு நேர் எதிரிடையான ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.'' நண்பன் சொன்னான்,''அது ஒன்றும் சிரமமில்லை.எனக்குத் தெரிந்தவரின் பெண் ஒருத்தி இருக்கிறாள்.அவள் நல்ல அழகி,சுறுசுறுப் பானவள் ,புத்திசாலி.நாகரீகம் தெரிந்தவள்.அவளைப் பார்க்கலாம்.''
**********

உண்டு

விளையாடி விளையாடி இறந்து போனவர்கள் உண்டு:
சாப்பிட்டு சாப்பிட்டு இறந்து போனவர்கள் உண்டு:
குடித்துக் குடித்து இறந்து போனவர்கள் உண்டு.ஆனால்
சிந்தித்து சிந்தித்து இறந்து போனவர்கள் யாருமில்லை.
**********


குறுகலாகப் பார்த்தால் குறுகலாகத் தெரியும்.
மட்டமாகப் பார்த்தால் மட்டமாகத் தெரியும்.
சுயநலத்தோடு பார்த்தால் சுயநலமாகத் தெரியும்.
பரந்த,தாராளமான சிநேகிதமான மனத்தோடு
பாருங்கள்.அற்புதமான மனிதர்கள் உங்கள்
கண்ணில் படுவார்கள்.
**********


துரதிருஷ்டம் இரண்டு வகை:
ஒன்று நமக்கு வரும் துரதிருஷ்டம்.
மற்றது பிறருக்கு வரும் அதிருஷ்டம்.
**********


உயர்ந்த மனிதன் மூன்று நெறி அம்சம் உடையவன்.
அவன் ஒழுக்கமானவன்.
ஆகவே அவன் கவலைகளிலிருந்து விடுபட்டிருக்கிறான்.
அவன் அறிவாளி:
ஆகவே குழப்பங்களிலிருந்து விடுபட்டிருக்கிறான்.
அவன் தைரியசாலி.
ஆகவே அச்சத்தினின்றும் விடுபட்டிருக்கிறான் .
**********


ஒரு மனிதனுக்கு என்ன நடந்ததோ
அது அனுபவமாகி விடாது.
தனக்கு நடந்ததை வைத்து அவன் என்ன
செய்கிறான் என்பதுதான் அனுபவம்.
**********


அவனுடைய வேலையை நான் இன்னும் நன்றாகச் செய்வேனே,இவனுடைய வேலையை இன்னும் பிரமாத மாகச்  செய்வேனே என்று எண்ணி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் உங்கள் கையிலுள்ள வேலையை இன்னும் நன்றாகச் செய்யுங்கள்.

இறைவனுடன் ஒரு கலந்துரையாடல்



இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரை ஒன்று. ஹைத்தி நாட்டின் கொடுமை பற்றி வெளியாகி இருந்தது. கறுப்பின மக்கள் வாழும் அந்த நாட்டில் தொழில் வளம் ஏதும் இல்லை. விவசாயத்திற்கும் சாதகமான நிலங்களும் இல்லை. எங்கும் பசி பட்டினி. இதனால் திருட்டு, கொலை, கொள்ளை அழையா விருந்தாளிகள் அந்நாட்டில்.ஹைதியின் ஓரிடத்தில் சிறு மக்கள் கூட்டம். அங்கே ஒரு பெண் வெள்ளை களிமண்ணை சிறு உருண்டைகளாக்கி தட்டு போல செய்து வெயிலில் காய வைக்கிறாள். அங்கே வரும் மக்கள் அதை காசு கொடுத்து வாங்கி செல்கிறார்கள். சிலர் கடனாக கொடுக்கும் படியும் கெஞ்சுகிறார்கள். ஆனால் அவள் காசில்லாமல் அருகே வராதீர்கள் என்று அவர்களை விரட்டி விடுகிறாள். இந்த களிமண் தட்டுக்களை வாங்க அங்கே ஒரே போட்ட போட்டி. சில நிமிடங்களில் அவள் கொண்டு வந்த
தட்டுக்கள் அனைத்தும் விற்றுதீர்ந்து விடுகின்றன.அதை வாங்கி சென்ற ஒரு பெண் அதை தன் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறாள்.
மிகுந்த பசியால் இருந்த அந்த குழந்தை வேகவேகமாக அதை சாப்பிடுகிறது. அவள் தன் இன்னொரு குழந்தைக்கும் அந்த களிமண்ணை கொடுக்கிறாள். அதுவும் சாதாரணமாக அதை சாப்பிடுகிறது. அதற்க்கு ஒரு 4 அல்லது 5 வயது இருக்கலாம். எலும்பும் தோலுமாக அந்த குழந்தைகள் பார்க்கவே பரிதாபமாக இருகின்றன. இப்படி அந்த குடும்பம் உட்பட அந்த நாட்டில் நிறைய மக்கள் உணவின்றி இப்படி இந்த களிமண்ணை உணவாக சாப்பிடுகின்றனர். அந்த பெண் சொல்கிறாள். எங்களுக்கு இங்கு உணவு ஏதும் கிடைப்பதில்லை. பசியால் நாங்கள் தினம் தினம் செத்துக்கொண்டு தான் இருக்கிறோம். இக்குழந்தைகள் பசியால் துடிப்பதை பார்க்க சகிப்பதில்லை. ஆரம்பத்தில் இதை சாப்பிடுவது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. பழக்கிகொண்டோம். இதனால் பசியை கொஞ்சமாவது தணிக்க முடிகிறதல்லவா. ஆனால் இதை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை மலச்சிக்கல் , தொண்டை மற்றும் வயிற்றுக் கோளாறால் இறந்துகொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இதை உணவாகவே கொண்டுதான் வாழ்கிறார்கள்.

இந்த கட்டுரையை படித்து பிறகு சாப்பிடுவதே கஷ்டமாகியது. என்ன கொடுமை. மனிதர்களாகிய நாம் அனைவரும் பூமி எனும் ஒரே கிரகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். ஒரு பகுதியில் மிகுதியான பண வசதிகளால் பணத்தை வாரி இறைக்கிறார்கள். 5 ஸ்டார் 7 ஸ்டார் என கும்மாளமிடும் மக்கள். ஒரு லட்சத்திற்கு கூட காலணிகள் வாங்கும் மனிதர்கள் இருகிறார்கள். அதே மனிதர்களோடு களிமண்ணை தின்று செத்துக் கொண்டும் மனிதர்கள் இருகிறார்கள். ஒரே இனத்தில் எத்தனை வேற்றுமை.
 நாட்டில் எங்கு பார்த்தாலும் கோவில்கள். சர்சுகள். மசூதிகள். பணத்தில்
குளிப்பவனும் செல்கிறான். அப்பாவி ஏழையும் செல்கின்றான். அவனும் மனமார வேண்டுகிறான். ஆனால் அகிரமக்காரர்களே இப்பூமியில் சுவீகாரமாக வாழ்கின்றனர். அப்பாவி ஏழை மக்கள் மேலும் மேலும் பிச்சைக்காரர்கள் ஆகிக்கொண்டுதான் இருகின்றனர். யாரை குற்றம் சொல்வது? இறைவனால் படைக்கப்பட்ட மனிதனையா அல்லது வாழ்கை என்றால் என்ன என்று சொல்லித்தராமலேயே மனித இனத்தை படைத்த இறைவனையா?

வாழ்கை என்பது தர்மம். எல்லோருக்கும் சமதர்மம். பேதங்களற்ற அனுபவம். இதுதான் இறைவன் படைத்த வாழ்கை. எல்லா மதங்களின் கூற்றும் அதுதான், ஆனால் இந்த தர்மம் இப்போது உலகத்தில் எங்கேயும் இல்லை. நம் முன்னோர்களும் பார்த்ததாக தெரியவில்லை. சமம் , தர்மம் இவை இந்த உலகத்தில் இல்லாத கற்பனை.

உண்மை சொல்வதே தர்மம் என்றால் அந்த உண்மை சொல்கிற மனிதனை இனிதான் இறைவன் படைக்க வேண்டும். வாழ்கை இன்பங்களை தனது எல்லைக்குள் அடக்கி வைத்துக்கொள்வதே மனித தர்மமாக
நடந்து கொண்டிருக்கிறது.


கண்ணதாசன் இறைவனிடம் கேட்கிறார்.....

'நீ படைத்த உலகத்தில் மனிதர்கள் இவ்வளவு அல்லல்படுகிறார்களே. நீ ஏன்அவர்களை காத்து இரட்சிக்காமல் வேடிக்கை பார்க்கிறாய்?''

இறைவன் சொல்கிறான்......

''உலகத்திற்கு நான் தர வேண்டியது ஏதும் பாக்கி இல்லை.''
நூலை கொடுத்து விட்டேன். ஆடையை பின்னிகொள்ள வேண்டியது அவன் பொறுப்பு. பாலை கொடுத்து விட்டேன். தயிராக்கிகொள்ள வேண்டியது அவர்கள் கடமை.
மழையை கொடுத்து விட்டேன்.
நிலத்தை கொடுத்து விட்டேன்
விதையை கொடுத்து விட்டேன்.
அதை பயிராக்கிகொள்ள வேண்டியது அவர்கள் பொறுப்பு. 

பெண்ணையும் ஆணையும் நான் படித்தேனே தவிர பிள்ளைகளை நானா படைத்தேன். மூலம் ஒன்றை கொண்டு விளைவுகளை தேடிக்கொள்ள வேண்டியவர்கள் அவர்களே.!எந்த ரகசியம் எந்த இடத்தில தோன்றி எந்த இடத்தில முடிகிறதென்பதை அறிந்து கொள்ள வேண்டியவர்கள் அவர்களே
படைப்பின் நோக்கங்கள் படைப்பின் போதே தெளிவாக்கப்பட்டு விட்டன. தினமும் பாடஞ்சொல்லிக் கொண்டிருப்பது என் வேலையல்ல''

கண்ணதாசன் கேட்கிறார்......

''பிறகு பூமியில் உனக்கெதற்கு ஆலயம்?''

இறைவன் சொல்கிறான்........

''நான் படைத்த பொருகளில் ஆலயம் என்று ஒன்றில்லை. உனக்கு தெரியுமா? தங்கள் பயத்தையும் நடுக்கத்தையும் தங்கள் வீட்டிற்குள்ளேயே
குவித்துக்கொள்ள முடியாமல் அவற்றை ஒப்படைப்பதற்காக ஓரிடத்தை மனிதர்கள் கட்டிகொண்டிருக்கிறார்கள். அச்சங்களும் ஐயங்களும் இன்றியே உலகத்தின் முதல் படைப்பை நான் படைத்தேன். மனிதர்கள் தாங்களே படைத்துக்கொண்ட பொருட்களில் அவையும் சேர்த்து விட்டன.
அதற்கு நான் என்ன செய்ய முடியும்?''.
  
கண்ணதாசன்............

''சர்வ வல்லமையுள்ளவன் நீ என்கிறார்களே அந்த வல்லமை உனக்கில்லையா?...

இறைவன்..............

''இல்லை. நிச்சயமாக இல்லை. என்னை சர்வ வல்லமையுள்ளவன் என்று சொன்னவன் மூடன். ஒருவனே சர்வசக்திகளும் படைத்தவனாக இருந்தால் உங்களுக்கெல்லாம் உணர்சிகள் எதற்கு?. உணவை கையிலெடுத்து நான் ஊட்டியதில்லை. கை எடுப்பதற்கும் வாய் உண்பதற்கும் என்று நீங்களே அறிந்து வைத்திருக்கும் போது மற்ற உணர்ச்சிகளும் உங்களுக்கு இருக்கும் போது விளைவுகளை கண்டுகொள்வது மட்டும் என் கடமையா? விளைவுகளை கண்டுகொள்வது உங்கள் கடமையா?''

எனக்கு தோன்றியது. இறைவன் சொல்வது உண்மை தான்.அவன் படைத்த உலகில் ஐந்தறிவு விலங்கினங்கள் ஏதும் பசியால் இறப்பதில்லை. பகுத்தறிவு படைத்த மனிதன் தான் பசி பட்டினியால் சாகிறான்.நிலம், நீர், காற்று வானம் என எல்லாவற்றையும் இறைவன் பொதுவாகவே படைத்திருக்கிறான். விலங்கினங்கள் இந்த இயற்கை வளங்களை ஒற்றுமையாக அனுபவிக்கின்றன. ஆறறிவு மனிதன் பசிக்கொடுமையால் மாள்கிறான். இதற்கு காரணம் என்ன? மனிதர்களின் பேராசையே காரணம்.
எல்லா வளங்களையும் தான் ஒருவனே அனுபவிக்க வேண்டும் என்கிற பேராசை. இந்த பேராசையே மனிதர்களை படுகுழியில் தள்ளுகிறது. பிறகு அதன் விளைவை நாம் தான் அனுபவித்தாக வேண்டும். எந்த விலங்கினங்களும் பூமியை கூறு போட்டு எல்லைகளை வைத்துக்கொள்ளவில்லை.எந்த விலங்கினங்களும் தன் 27 அல்லது அதற்கு மேலான தலைமுறைகளுக்கும் சேமித்து வைத்துகொள்வதில்லை. சுவிஸ் வங்கியில் கணக்கும் இருப்பதில்லை. அவைகளின் குடில்களில் 1500 கோடி பணம், கிலோ கணக்கில் தங்கமும் வைத்திருப்பதில்லை. இப்படி செல்வமும் வளமும் சில மனிதர்களின் வங்கிகளிலும் வீடுகளிலும்
பூட்டி வைத்துக்கொண்டால் எங்கே இருக்கும் சமதர்மம்?
பிறகு ஒரு பக்கத்தில் பட்டினி சாவும், மற்றொரு பக்கத்தில் கும்மாளமும்
நடைபெறத்தான் செய்யும்.

சுகமாக வாழும் மனிதனுக்கு பசி பட்டினி பற்றி என்ன தெரியப்போகிறது. கோடீஸ்வரநும் மரணத்திற்கு லஞ்சம் கொடுக்கமுடியாது. அதை நினைத்தாவது இல்லாதவர்களுக்கு உறங்கிக்கொண்டிரும் செல்வதை செலவழிக்கலாம். எந்த செல்வமும் கொடுக்காத மன நிறைவு இதன் மூலம் பலனாகப் பெறலாம்.