முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?

எட்டுவயது சிறுமி ஒருத்தி தன் அம்மாவிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”

அன்னையின் பதில் : “கடவுள் ஆதாம், ஏவாளைப் படைத்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. இப்படியே மனித உலகம் உருவானது”.

இரண்டு தினங்களுக்குப் பிறகு அவள் தன் தந்தையிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”

தந்தையின் பதில் : “குரங்கிலிருந்து மனிதன் உருவானான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குரங்காக இருந்தவர்கள் நாம்”.

சிறுமிக்குக் குழப்பம் அதிகரித்தது. ”ஒரே கேள்விக்கு தாயின் பதிலும், தந்தையின் பதிலும் வேறுவேறாக இருக்கிறதே” என்று.

அடுத்த நாள் தன் தாயிடம் கேட்டாள் “இது எப்படிச் சாத்தியம்? நீங்கள் ஆதாமும், ஏவாளுமே மனிதன் உருவாகக் காரணம் என்றீர்கள். ஆனால் அப்பா சொன்னார் - குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று. இரண்டில் எது உண்மை”.

சுதாரித்துக்கொண்ட தாய் சொன்னாள் -

1) “இது மிக எளிது. என் பரம்பரை அதாவது (உன் அம்மாவின் பரம்பரை) வந்த விதம் ஆதாம், ஏவாளின் சந்ததி வாயிலாக உருவானது”

2) “உன் தந்தையின் பரம்பரை வந்த விதம் குரங்குகளின் சந்ததி வாயிலாக உருவானது. இரண்டுமே சரிதான்” என்றாள்.

இதைக்கேட்ட சிறுமி ‘ஙே’ என விழித்தாள்.