எங்கோ கேட்டவை (கவி அரங்கம்)



நீ தொடர்புகொண்டு என்னிடம்
பேசும் போது எல்லாம் நான்
தொடர்பிழந்து நிற்கிறேனே ஏன்?
இன்னும் புரியவில்லை காரணம் எனக்கு...!

ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்.

உன்னிடம் பேசுகையில்
உன்னுடைய "ஹம் ", "ப்ச்" , "ஹேய்"
இந்த வார்த்தைகளுக்கு நடுவில்
மற்றவை தோற்று போய் நிற்கின்றன.
காரணமே தெரியாமல்........