சுவர்க்கத்திற்குச் செல்லும் ஆனந்தம் எல்லாம்,நரகத்திற்கு அனுப்பப்பட்டவர்களின் துன்பங்களையும் வேதனையையும் பொறுத்து அமைகின்றன.சுவர்க்கத்தில் உள்ளவர்களுக்கு நரகம் என்ற ஒன்று இல்லைஎன்று தெரிந்தால்,அவர்களது மகிழ்ச்சி சட்டெனக் காணாமல் போய் விடும்.அவர்கள் மிகுந்த வேதனை அடைந்து விடுவார்கள்.நரகம் இல்லையென்றால் அவர்கள் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமே!
நரகம் இல்லையென்றால் எல்லாக் குற்றவாளிகளும்,பாவிகளும் சுவர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்?அப்புறம் மகான்கள் எங்கே போவது?ஒழுக்க வாதிகளின் மகிழ்ச்சி ,பாவிகளின் துன்பங்களையே சார்ந்திருக்கிறது. செல்வரின் மகிழ்ச்சி,உண்மையாகவே ஏழைகளின் துன்பத்திலிருந்து தான் முளைக்கிறது.அது பணத்தால் பிறப்பதல்ல.
நல்லவனின் மகிழ்ச்சி,வெறுக்கப்படும் பாவிகளால் உண்டாவது.அது நன்மையால் மட்டும் உண்டானதல்ல.எல்லோரும் நல்லவராகி விட்டால் மகானின் மகிமையும் ஒளியும் மறைந்து போகும்.அவர் சட்டென முக்கியத்துவம் இழந்து விடுவார்.ஒரு வேளை அவர்,பழைய பாவிகளை அழைத்து,தங்கள் பழைய தொழிலைச் செய்யும்படி வேண்டலாம்.
எல்லா ஒழுக்கங்களின் முக்கியத்துவமும் அவற்றின் எதிர்மறையால் உண்டாகின்றன.ஆனால் அவை அவற்றைச் சார்ந்துள்ளன.முழுமையை ஏற்பவர்,நாம் தீமை என்று சொல்வது தீமையின் மறு எல்லை என்பதையும், நன்மை என்பது தீமையின் மறு கோடி என்பதையும் உணர்ந்து கொள்வர்.