கருணையுள்ள மன்னர் ஒருவர் தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் வரும் தூரத்தைக் கணக்கிட்டு சன்மானம் கொடுத்து வந்தார்.அதிகப் பணம் பெற வேண்டும் என்ற ஆசையில் ஒருவன் மன்னரிடம் தான் வைகுண்டத்திலிருந்து வருவதாகக் கூறினான்.மன்னர் அவனுக்கு ஒரே ஒரு பொற்காசு மட்டும் கொடுத்தார்.வந்தவன் வருத்தத்துடன் ,'அய்யா, வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?'எனக்கேட்டான்.
மன்னர் அமைதியாகச் சொன்னார்,''எனக்குத் தெரிந்து வைகுண்டம் கூப்பிடு தூரத்தில் தான் உள்ளது.கஜேந்திரன் என்ற யானை,தன காலை முதலை கடித்த போது,'ஆதிமூலமே,'என்று கூப்பிட்ட போது உடனே பெருமாள் வந்து விட்டார். அப்படியானால் வைகுண்டம் கூப்பிடு தூரத்தில் தானே இருக்க வேண்டும்?அவ்வளவு பக்கத்தில் இருந்து வந்த உனக்கு ஒரு பொற்காசு கொடுத்ததே அதிகம்.''