""ஏண்டா... என்னிடம் இப்படி பொய் பேசறே..?''
""உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன, அதான்!''
------------------------------------------------------------------------------------------------------------
* ""டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வரச் சொன்னேனே வாங்கிட்டு வந்தியா?''
""கேட்டேன் சார். அது அவர் படிச்சு வாங்கின சர்டிஃபிகேட்டாம். தர முடியாதுன்னு சொல்லிட்டாரு!''
------------------------------------------------------------------------------------------------------------
* ""காலையில் எழுந்ததுமே எதுக்கு பனியனும், சட்டையும் போட்டுக்கிறீங்க?''
""வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!''
------------------------------------------------------------------------------------------------------------
""உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?''
""எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.''
------------------------------------------------------------------------------------------------------------
""என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.''
""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.''
------------------------------------------------------------------------------------------------------------
""என்னடா... இது, வயிற்றில் காயம்?''
""பசி வயிற்றைக் கிள்ளிடுச்சு மச்சான்.

|