யாவும் அறிய பூவாக இருந்தேன்
உன்னை கண்டபின்
எல்லாம் அறிந்துவிட்டேன்
பூக்கும் பூவில்கூட உன்
புதுமுக கண்டேன்
பார்க்கும் பறவையில் கூட
உன் பருவராகம் கேட்டேன்
ஈர்க்கும் புவிஈர்ப்பு விசையில் கூட
உன் காதல் ஈர்ப்பை கண்களில் கண்டேன்
இரவுகள் கூட பகலாய் மாற
இன்ப வரவுகள் எல்லாம்
செலவுகளை தேட ....
உயிரே உறவே உன்னில்
நன் நுழைந்ததால்
வானம் வசபடுகிறது
வாழ்க்கையை தேடி ...
நீயும் நானாகி பார்
உன் நிழல் கூட வசப்படும்
நீல வானத்தில் நம்
காதல் நினைவுகள் நீந்துவதால் ...!
|