எப்பூடி?

ஒரு கணவன் வடை தின்ன ஆசை கொண்டு,தேவையான பொருட்களை வாங்கி மனைவியிடம் கொடுத்து வடை சுட்டு வைக்கச் சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டான்.அவள் நூறு வடை சுட்டாள்.ருசி பார்ப்பதற்காக ஒரு வடையை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தாள்.வடை மிகவும் ருசியாயிருக்கவே அவளால் கட்டுப் படுத்த முடியாமல் தொடர்ந்து சாப்பிட்டாள்.இப்படியே  99 வடைகளை சாப்பிட்டு விட்டாள்.கணவன் வந்ததும்,மீதமிருந்த ஒரு வடையை மட்டும் பயந்து கொண்டே ஒரு தட்டில் வைத்து அவனிடம் கொடுத்தாள்.விபரம் அறிந்து கொண்ட கணவன் ஆச்சரியத்துடன்,''அதெப்படி 99 வடைகளை சாப்பிட்டாய்?என்று கேட்டான்.வடையின் ருசியிலிருந்து இன்னும் மீளாத அந்தப்பெண் ,'இப்படித்  தான் தின்றேன்!'என்று கூறிக் கொண்டே மீதமிருந்த ஒரு வடையையும் எடுத்துத் தின்று விட்டாள்.