தமிழ் சினிமாக்கள் பலவற்றில் கதாநாயகர்கள், வில்லன்களால் பாலைவனங்களில் தனித்து விடப்படும்போது அவர்களை காப்பாற்ற வரும் ஜீவன்களில் தவறாமல் இடம் பிடிப்பது ஒட்டகம் ஆகும். பாலைவனங்கள் என்றால் உடனடியாக நம் நினைவில் இடம் பிடிப்பதும் இந்த ஒட்டகம் தான் மேலும் ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பாலைவனங்களோடும், பாலைவனமக்களோடும் இறன்டற கலந்துவிட்ட ஒட்டகத்தின் சிறப்புகள் பற்றி இன்று காண்போம்!
ஒட்டகம் பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.
ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது!
ஒரு வாரம் வரையில் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மற்ற விலங்குகளை போலல்லாமல், நீர் அருந்தாமல் உடல் வரண்ட நிலையில் இருந்து மீண்டும் நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 லிட்டர் நீர் அருந்தவல்லது. ஏனைய பிற விலங்குகளில் (மனிதன் உள்பட) நீரற்ற வரண்ட நிலையில் இருந்து இவ்வாறு தடாலடியாக நீர் அருந்த இயலாது ஏனெனில் இரத்தத்தில் திடீறென்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் ஆஸ்மாட்டிக் அழுத்தம் என்னும் அடர்த்தி அதிகமான பகுதி நோக்கி நகரும் விரவல் விளைவால் சிவப்புக் குருதியணுக்கள் வெடித்து இறக்க நேரிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை.
ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 10 ° செல்சியஸ் வரையான வேறுபாடுகளை தாங்க வல்லது ஏனைய பிற விலங்குகளின் உடல் 2-3 ° செல்சியஸ் வெப்பநிலை வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது.
ஒட்டகம் 15 மணிநேரம் தொடர்ந்து நடக்கும். எந்த நிலையிலும் ஒட்டகத்திற்கு வியர்க்காது, ஏனென்றால் அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது
நாள் ஒன்றுக்கு ஒட்டகம் சராசரியாக 40 லிட்டர் வரை பால் தரும் மேலும் இப்பால் 60 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது.
மேற்கூறிய அனைத்துவகை உடலமைப்புகளை பெற்றிருப்பதால்தான் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காக ஒட்டகங்கள் கருதப்படுகின்றன!
|