துன்பம்

துன்பத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?முதலில் நீங்கள் துன்பத்திலிருந்து தப்பிச்செல்ல எண்ணாமல்,அது உங்களிடம் இருப்பதற்கு அனுமதித்தால்,அதை சந்திக்கத் தயாராக இருந்தால்,அதை எப்படியாவது மறந்து விட வேண்டும் என்று முயற்சி செய்யாமல் இருந்தால் அப்போது நீங்கள் மாறுபட்டவர் ஆகிறீர்கள்.துன்பம் இருக்கும்.ஆனால் அது உங்கள் வெளியே இருக்கும்.அது உங்கள் துன்பமாயிராது.யாருக்கோ நடப்பது போலத் தோன்றும்.ஒரு மெல்லிய இன்பம் உங்களுக்குள் பரவ ஆரம்பிக்கும்.ஏனெனில் நீங்கள் உண்மையில் இன்பமயமானவர்கள்.துன்பத்தை நடு நிலையுடன் பாருங்கள்.என்ன துன்பம்,அது ஏன் வந்தது என்று உணர்ச்சி வசப்படாமல்  பாருங்கள்.அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதீர்கள்.மனமானது,''துன்பத்தைப் பாராதே,தப்பி ஓடிவிடு ''என்றுதான் கூறும்.ஆனால் தப்பி ஓடி விட்டால் ஒருபோதும் மகிழ்வுடன் இருக்க முடியாது.