உன்னைப்பற்றி

உன்னைப்பற்றி நீயே உயர்வாகவோ
       குறைவாகவோ பேச வேண்டாம்.
உயர்வாய்ப் பேசினால் மக்கள்
        உன்னை நம்ப மாட்டார்கள்.
தாழ்வாய் பேசினால் நீ சொல்வதை விட
       அதிகத் தாழ்வாக எண்ணுவார்கள்.
**********
புயலில் உயரமாகிற அலைகள் மாதிரி விளம்பரம்.
அலை ஓய்ந்த ஆழ்கடல் போல மௌனமானது புகழ்.
மனிதன் கூட்டுறவால் விளம்பரம் பெறுகிறான்.
தனிச் செயல்களால் புகழ் பெறுகிறான்.
விளம்பரம் சாராயம் போல.
புகழ் தாய்ப்பால் போல.
             --கவிஞர் வைரமுத்து.
**********
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் கேட்டார்,''அன்று ஒரு இரண்யனை அழிக்க கடவுள் நரசிம்மாவதாரம் எடுத்தார்.இன்று இரண்யனை விடக் கொடியவர் பலர் நாட்டில் உள்ளனரே?கடவுள் ஏன் அவதாரம் எடுக்கவில்லை?''பரமஹம்சர் சொன்னார்,''அன்று ஒரு பிரகலாதன் இருந்தான்.இன்று ஒருவர் கூட பிரகலாதன் போல இல்லையே.''
**********
பிரச்சினைகளை வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.பிரச்சினை வரும்போது,உங்கள் தலையை நிமிர்த்தி அதனை நேருக்கு நேர் பார்த்து சொல்லுங்கள்,''நான் உன்னை விடப் பெரியவன் உன்னால் என்னை வெற்றி கொள்ள முடியாது.''
**********