எகிப்தின் பாலைவனப்பகுதியில் ஒரு ஞானி வசித்து வந்தார்.அவர் புலன்களை வென்றவர்.நாடோடியாகத் திரிந்து கொண்டிருப்பார்.அவரைக்காண மக்கள் நீண்ட தூரத்திலிருந்து எல்லாம் வந்தனர்.தீராத வியாதிகள் அவரால் குணம்,ஆனதாகச் சொல்லப்பட்டது.புற்று நோய் வந்து பல சிகிச்சைகளாலும் குணமடையாத ஒரு பெண் அவரைப்பற்றி கேள்விப்பட்டு அவரைத் தேடி அலைந்தாள்.ஒருநாள் ஒரு கடற்கரை ஓரமாக சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த அந்த ஞானியை அவர் இன்னார் என்று அறியாது,அவரிடமே அவர் இருப்பிடம் பற்றி விசாரித்தாள்.அவர் சொன்னார்,''போயும் போயும் அவனை எதற்காகத் தேடுகிறாய்?அவனைப் பற்றிய கதைகளை நம்பாதே!அவன் எந்த இறைவனிடம் மன்றாடுவானோ,அந்த இறைவன் உனக்கும் வேண்டியவர்தான்.அவர் மீது நம்பிக்கை வைத்துப் புறப்படு.கடவுள் விரைவில் உனக்கு குணம் அளிப்பார்.''முழு நம்பிக்கையுடன் சென்ற அப்பெண் குணமடைந்தாள்.