அம்மா இருக்காங்களா?

பொருட்களைஎடுத்து சென்று வீட்டுக்கு வீடு விற்பனை செய்வதில் சிறந்து விளங்கிய ஒருவரைப் பார்த்து அவர் நண்பர் கேட்டார்,''உங்களின் இந்த வெற்றிக்கு கரணம் என்ன?''அவர் சொன்னார்,''எந்தப் பெண் வந்து கதவைத் திறந்தாலும் நான் கேட்கும் முதல் கேள்வி,'உங்க அம்மா உள்ளே இருக்காங்களா?'என்பதுதான்,''
**********
சிறுவன் ஒருவன் சாலையோரம் சிறுநீர்கழித்துக் கொண்டிருந்தான்.அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர்,''தம்பி,இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது.போலீசார் வந்தால் பிடித்துக் கொள்வார்கள்,''என்றார்.சிறுவன் சொன்னான்,''பிடித்தால் பிடித்துக் கொள்ளட்டும்,கீழே வீணாய்த்தானே போகிறது.''
**********
பேருந்தில் நல்ல கூட்டம்.பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.இளைஞர்கள்  அமர்ந்திருந்தனர்.அவர்கள் யாரும் பெண்களுக்கு உட்கார இடம் தரவில்லை.நின்று கொண்டிருந்த ஒரு பெண் கேலியாக,''பாவம்,எல்லோரும் வயதான கிழவர்கள்.அதனால்தான் எழுந்து நின்று நமக்கு இடம் தர முடியவில்லை.''என்று பக்கத்தில் இருந்தவளிடம் சொன்னாள்.உட்கார்ந்திருந்த இளைஞன் ஒருவன் சொன்னான்,''பேத்தி!இந்தத் தாத்தாவின் மடியில் வேண்டுமானால் உட்கார்ந்து கொள் அம்மா.''
***********
கடன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''கடன் வாங்கினவன் சொன்னான்,''இதென்ன பெரிய அவமானம்?இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!''
**********