வியக்கவைக்கும் தகவல்கள் - 7



கடற்கரை பிடிக்காதவர்கள் உண்டா.?

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கொண்டே செல்லும் கடல், இடைவெளிவிடாமல் கரை மீது வந்து மோதிக் கொண்டிருக்கும் அலைகள், மணல்வீடு கட்டி விளையாட குருணை குருணையாக நைசான மணல் ஆகியவற்றைக் கொண்ட கடற்கரையை யாருக்குத்தான் பிடிக்காது

உலகின் மொத்த பரப்பளவில் 71 சதவீதம் கடல். நிலத்தில் உள்ள உப்பு அனைத்தும் ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்டு காலங்காலமாக கடலில் கலந்து வருவதால், கடல்நீரில் உப்பு கூடி அது உவர்நீராகிவிட்டது. உலகிலேயே சாக்கடல் (டெட் சீ) என்ற கடலில்தான் இந்த உப்புத்தன்மை அதிகம். இதனால் நீர் அடர்த்தி அதிரித்து இருப்பதால், அந்தக் கடலில் இறங்கினால் நாம் மிதக்க முடியும். நாம் நினைத்தாலும் அங்கே மூழ்க முடியாது. பின் எப்படி அதற்க்கு சாக்கடல் (டெட் சீ) என்று பெயர் வந்தது என்கிறீர்களா? இங்குள்ள நீரில் உப்புத்தன்மையின் அடர்த்தி அதிகமாக காணப்படுவதால்அங்கு நீரில் ஆக்ஸிஜன் மிக மிகக் குறைவாக இருக்கும் இதன் காரணமாகத்தான் எந்த கடல் வாழ் உயிரினமும் இங்கு வாழ முடியவில்லை.

அதே நேரம்... நம்ம ஊரில் கடற்கரைக்கு மிக அருகிலேயே கிணறு தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறதே, இது எப்படி? அந்த தண்ணீர் கடல்நீரைப் போல் ஏன் உப்புக்கரிப்பதில்லை? இது ஏன்?

முதலில் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் ஆவியாகி, மேகமாகி காற்றில் இடம்பெயர்கிறது. இப்படி உருவாகும் மேகங்கள் ஓரிடத்தில் அதிகமாகச் சேர்வதால் நீராவி குளிர்ந்து திரவமாகி, மழையாகப் பொழிகிறது.

தூய்மையான மழை நீரில் நம் உடலுக்குத் தேவையான அளவு கனிமங்கள் இல்லாவிட்டாலும், மழை நீர் நிலத்தில் உள்ள  நுண்துளைகளுக்குள் ஊடுருவி, பல நில அடுக்குகளை கடந்து சென்று மணலால் வடிகட்டப்பட்டு பின் நிலத்தடி நீரோடு சென்று கலந்துவிடுகிறது. இதனால் தான் நாம் குடிப்பதற்கு ஏற்ற கனிமங்கள் நிறைந்த வளமான நீராக அது மாறிவிடுகிறது.


ஆனால்
, கடலுக்கு அருகே பொழியும் மழையில் மேற்சொன்ன நிலைகளுக்கு முன்னரே கனிமங்கள் அதிகம். காரணம், அதிக அளவிலான கனிமத்துகள்களை கடல் காற்று பெற்றிருப்பதே. அவற்றுடன் தண்ணீர் மூலக்கூறுகள் வினைபுரிந்து இயல்பாய் மழை நீரிலேய கனிமங்கள் கலக்கின்றனஇதன்காரணமாக மழை நீர் நிலத்தில் வெகு சமீபத்தில் கிடைத்தாலும் அது நாம் குடிப்பதுக்கு உகந்தது ஆகிறது

உப்புக்கரிக்கும் நீரைக் கொண்டுள்ள கடற்கரைக்கு மிக அருகிலேயே கரையில் நல்ல தண்ணீர் கிடைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நல்ல தண்ணீரின் அடர்த்தி செ.மீக்கு 1000 கிராம் உள்ளது. ஆனால், கடல் உவர்ப்பு நீரின் அடர்த்தி செ.மீக்கு 1.0255 கிராம். இதனால், கடலுக்கு அருகேயுள்ள நிலத்தடி நீர்மட்டத்தில் உவர்நீர் இருந்தாலும், நல்ல தண்ணீர் அதற்கு மேல் மிதக்கவே செய்யும். அடர்த்தி குறைவாக இருப்பதுதானே மேலே இருக்கும் நண்பர்களே (நம்ம சின்ன வயசில வாத்தியார் சொல்லி கொடுதிருப்பாங்கலே.... அதெல்லாம் இப்போ எங்க ஞாபகம் இருக்கு அப்படீங்கரீன்களா?) கடற்கரையில் ஊற்று தோண்டி தண்ணீர் விற்பனை செய்பவர்கள் இந்த அறிவியலை நம்பியே தொழில் செய்கிறார்கள்ஆனால், சென்னையின் கடற்கரையோர பகுதிகளான திருவல்லிக்கேணி, திருவான்மியூர் பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு விட்டதால், அதை ஈடுகட்ட கடல்நீர் உள்ளே புகுந்துவிட்டது. இதனால், இப்பகுதிகளில் இந்த அறிவியல் செல்லுபடியாவதில்லை.