பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
--------------------------------------------------
நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....
--------------------------------------------------------------------------------
நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...
டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....
------------------------------------------------------
"எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...."
"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"
-----------------------------------------------------
ராணி: தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"
வாணி: தெரியலையே, என்னது?
ராணி: தலையிலே முடி இருக்கிறது தான்...!"
----------------------------------------------------
ராமு: ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்
சோமு: ஏதாவது பிரச்சினையா...?
ராமு: ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்
--------------------------------------------
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் home work செய்யலை சார்
----------------------------------------------------
|