ஒரு பல் மருத்துவர் ஒரு சிறுவனின் பல்லைப் பிடுங்கியதற்காக ஆயிரம் ரூபாய் கேட்டார்.சிறுவனின் அம்மா,''வழக்கமாக இருநூறு ரூபாய் தானே வாங்குவீர்கள்?''எனக் கேட்டார்.டாக்டர் சொன்னார்,''நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் இன்று உங்கள் பையன் போட்ட சப்தத்தில் வந்திருந்த நான்கு நோயாளிகள் ஓடி விட்டனரே!''
**********
டாக்டரிடம் சென்ற ஒரு முதியவர்,''என் மனைவிக்கு வரவர காது சரியாகக் கேட்கவில்லை.பல முறை கூப்பிட்ட பின்தான் பதில் சொல்கிறாள்,''டாக்டர் சொன்னார்,''வீட்டிற்குப்போய் நான் சொல்கிறாற்போல சோதனை செய்து பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள்.முதலில் இருபது அடி தூரத்தில் இருந்து கூப்பிடுங்கள்.பதில் வராவிடில் பத்து அடி தூரத்தில் இருந்து கூப்பிடுங்கள்.அதற்கும் பதில் வராவிடில் ஐந்து அடி தூரத்திலிருந்து கூப்பிடுங்கள்.எவ்வளவு தூரத்திலிருந்து பேசும்போது கேட்கிறது என்பதை வைத்து செவிட்டுத் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கலாம்.''
வீட்டிற்குப்போன பெரியவர்,டாக்டர் சொன்னபடி வெவ்வேறு தூரத்தில் இருந்து நான்கு முறை கூப்பிட்டுப் பார்த்தார்.பதில் வரவில்லை.பின் மனைவியின் காதருகே சென்று கூப்பிட்டார்.மனைவி சொன்னார்,''உங்களுக்கு என்னவாயிற்று.ஏற்கனவே நான்கு முறை நீங்கள் கூப்பிட்ட பொது நான்,'என்னவேண்டும்?'என்று கேட்டேனே?''