வாங்க சிரிக்கலாம்


போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,
உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.
********************************
டாக்டர்: ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே, மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?
நோயாளி: இல்ல டாக்டர், நர்ஸை நினைச்சுகிட்டேன்....!
********************************
நோயாளி: ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன் பண்ணப் போறீங்க...?
டாக்டர்: நீங்கதானே ஆபரேஷனை "தள்ளி வைக்கச்" சொன்னீங்க...!
********************************
நோயாளி: டாக்டர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"
டாக்டர்: ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!
நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?
********************************
ராமு: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்? கொஞ்சம் பெரிசா பாருங்களேன்!
தரகர்: யோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு!"
********************************
மந்திரி-1: குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..
மந்திரி-2: குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல் போயிருப்பார் என்றுதான்.
********************************
ஒருவர்: அந்த ஆள் உண்மையிலயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு...
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்: துப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...!
********************************
ஒருவர்: சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!
மற்றொருவர்: ஏன்..?
ஒருவர்: பந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...!
********************************
நீதிபதி: எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?
குற்றவாளி: நான் ஓடவேணாம்னுதான் சொன்னேன் எஜமான், அவன்தான் கேக்கலை.