வாங்க சிரிக்கலாம்!!


 
 
கேள்வி: எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
பதில்: ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

கேள்வி: தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
பதில்: அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்குமே!

ராமு: தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
சோமு: மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: (மாணவர்களிடம்) மகாகவி பாரதி தெரியுமா?
மாணவன்: தெரியும் சார்..., மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

கன்: அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
அம்மா: சரோஜா! ஏன் கேக்குற?
மகன்: அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பேரன்: ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
பாட்டி: நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
பேரன்: போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?