மேய்ப்பது யாரை?

ஆசிரியர்:உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும் மாடு மேய்க்கப் போகலாம்.
மாணவன்:அப்படிப் போவதானால் சொல்லுங்கள் சார்,எங்கள் வீட்டில் மேய்ப்பதற்கு இரண்டு மாடுகள் இருக்கின்றன.
**********
கொட்டுகின்ற அருவியை ஒருவர் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.அருகில் இருந்த ஒருவர் கேட்டார்,''நீங்கள் ஒரு ஓவியரா?'' அவர் சொன்னார்,''இல்லீங்க,நான் ஒரு பால் வியாபாரி.''
**********
''உங்கள் பூனை என் கார் ஏறி செத்து விட்டது.நான் அதற்காக வருந்துகிறேன்.நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள்.நான் கண்டிப்பாக செய்கிறேன்.''
'உங்களால் எலி பிடிக்க முடியுமா?'
**********
நீதிபதி:ஒரு நல்ல மனிதனை இப்படி ஏமாற்றித் திருடி இருக்கிறாயே,உனக்கு வெட்கமாக இல்லை?
குற்றவாளி:அய்யா,ஏமாற்றுக்காரன்,அயோக்கியன்,எவனையாவது என்னால் ஏமாற்ற முடியுமா?
**********
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண் தன தோழியிடம் சப்தமாக சொன்னாள்,''அந்த அழகான ஆள் மட்டும் இடம் கொடுத்தால் உட்காரலாம்.''உடனே பேருந்தில் இருந்த ஆண்கள் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு எழுந்து நின்றனர்.
**********
அரசியல் ஊர்வலம் ஒன்று பெரிதாக சென்று கொண்டிருந்தது.கூட்டத்தில் ஒரு தொண்டனின் பணப்பை திருடு போய் விட்டது.உடனே அவன் தன தலைவரிடம் சென்று புகார் சொன்னான்.தலைவர் கேட்டார்,''உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?''அவனும் தன பக்கத்தில் ஊர்வலத்தில் வந்த ஒருவனைக் காட்டினான்.''நீ இங்கேயே இரு''என்று தொண்டனை அமைதிப் படுத்திவிட்டு கூட்டத்திற்குள் சென்ற தலைவர் சிறிது நேரத்தில் பணப்பையுடன் வந்தார்.தொண்டன் மிகுந்த மகிழ்ச்சியில்,''இது தான் எனது பணப்பை.நீங்கள் கேட்ட உடன் கொடுத்து விட்டானா?''என்று கேட்டான்.தலைவர் சொன்னார்,''சப்தம் போட்டுப் பேசாதே!நான் இந்தப் பணப்பையை  எடுத்தது அவனுக்குத் தெரியாது.''
**********