ஒரு பெண் தன கணவரை டாக்டரிடம் அழைத்து சென்றாள்.எல்லாப் பரிசோதனைகளையும் முடித்த பின்னர் டாக்டர்,அந்தப் பெண்ணைத் தனியே கூப்பிட்டு அவள் கணவரின் நோயின் தன்மை குறித்து விளக்கினார்.''உன் கணவர் தீவிரமான மனக் குழப்ப நோயில் இருக்கிறார்.நான் சொல்லும் அறிவுரைகளைக் கவனமாகக் கேட்டு அதன்படி நீ செய்யாவிடில் உன் கணவர் உயிர் இழக்க நேரிடும்.எப்போதும் அவரிடம் இன் முகம் காட்டு.காலை,பகல் இரவிற்கு நல்ல ஆரோக்யமான எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளைக் கொடு.வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி துன்புறுத்தாதே.உன்னுடைய பிரச்சினைகளை அவரிடம் பேசாதே.அது அவருடைய மனக் குழப்பத்தை இன்னும் அதிகரிக்கும்.அவனை கேலி செய்யாதே.மொத்தத்தில் அவரை மிக அன்புடன் நடத்து.நான் சொன்னபடி செய்தால் ஒரு ஆண்டில் உன் கணவர் முழுமையாகக் குணம் அடைந்து விடுவார்.''என்றார் டாக்டர்.வீட்டிற்குப் போகும் வழியில் கணவன்,''டாக்டர் என்ன சொல்கிறார்?''என்று கேட்க மனைவி சொன்னால்,''நீங்கள் விரைவில் இறந்து விடுவீர்களாம்.''