சேர்ந்து வாழ வேண்டிய குடும்ப உறுப்பினர்களும் சரி,சேர்ந்து பணி புரிய வேண்டிய அலுவலக ஊழியர்களும் சரி,ஒரு சிறு பிரச்சினை என்றால் கூட மன வேறுபாடுகளை வேகமாக வளர்த்துக்கொண்டு எதிரெதிர் திசைகளில் நடக்க ஆரம்பித்து விலகி விலகிப் போய் விடுகிறார்கள்.
எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.வேறு கோணம்,வேறு பார்வைகள் உண்டு.அவர்களை என்ன சொன்னாலும் மாற்ற முடியாது.நான்கு விசயங்களில் முட்டி மோதித் தோல்வி காணும்போது மற்றவர்கள் கருத்துக்கு மதிப்புத் தரத் துவங்குவார்கள்.
தன முனைப்பு,அகங்காரம்,வரட்டுப் பிடிவாதம்,சுய பரிசோதனையின்மை ஆகிய தூண்களைக் கொண்டு நம்மால் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கட்டடத்தில் எல்லோரும் வந்து குடியிருக்க வேண்டும் என எதிர் பார்ப்பது தவறு.
ஒரு சில விசயங்களில் கருத்து வேறுபாடு இருந்தால்,இருந்து விட்டுப் போகட்டும்.அது ஒரு முட்டுச்சந்து,வேறு வழியில்லை என்பதனை உணர்ந்து அவர்கள் திரும்பட்டும்.அதுவரை நமக்குப் பொறுமை அவசியம்.
சிறு சிறு கருத்து வேறுபாடுகளுக்காக மன வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.இது நியாயமற்றது.