நமது சிறு பிராயத்தில் யானையை வீதியில் காண்பது என்பது ஒரு களிப்புறும் விளையாட்டாகும். அதை எண்ணினாலே மனம் குதூகளிப்பதை தவிர்க்க இயலாது. யானையை பற்றிய ஒரு பழமொழி உண்டு அதாவது யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதாகும். பண்டைய காலங்களில் யானைகளின் பயன்பாடு அலற்கரியது. கனமான பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொர இடத்திற்கு நகற்றுவதுக்கும், விளைவித்த உணவு தானியங்களை தனியாக பிரிக்கும் இடமான களத்தில் தானியங்களை அடித்து (மிதித்து) பிரித்தெடுக்கவும், படைகளில் முதன் நிலையானதுமான யானைபடைகளிலும் இன்னும் பல எண்ணற்ற வேலைகளிலும் அவை உயிருடன் இருக்கும் போது பயன்படுத்தப்பட்டது. அவை இறந்த பின் அதன் தந்தம் நீக்கப்பட்டு பயன்படுத்தபட்டது, யானையின் தந்தம் அப்போதிருந்தே மதிப்பு மிக்கது.
பண்டைய காலங்களில் யானை உயிருடன் இருக்கும் போது அவற்றின் தந்தம் நீக்கபடுதல் என்பது அரிது. ஆனால் நாம் இன்று தந்தங்களுக்காக பெருமளில் வேட்டையாடியதன் பலன் முன்பு 600- இனங்கள் வரை புவியில் வாழ்ந்துவந்த யானைகளில் இன்று மூன்றே மூன்று சிற்றினங்கள் மட்டுமே உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
இன்னுமொரு அதிர்ச்சிகரமான தகவலும் உங்களுக்கு காத்திருக்கிறது, ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளை குறிவைத்து வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது.
1930ல் 1% ஆக இருந்த பிறவியிலேயே தந்தமில்லா (வளரும்போதும் இவற்றில் தந்தம் வருவதில்லை) குறைபாட்டுடன் பிறந்த யானைகளின் தொகை இப்போது 30% வரை அதிகரித்துள்ளது என அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் இது இன்னும் பெருகி முடிவில் தந்தமுள்ள யானைகளை புகைப்படத்தில் மட்டுமே பார்க்க இயலும்.
|