வியக்கவைக்கும் தகவல்



உலகம் முழுவதிலும் சுமார் 650-கோடி மக்கள் 195-நாடுகளில் வசித்து வருகின்றனர் அவர்களால் 267-க்கும் மேற்ப்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இத்தனை மொழிகள் இருந்தாலும், எந்த நாட்டில் வசிப்பவராக இருந்தாலும் படித்தவர்/படிக்காதவர் என்ற பேதமின்றி ஒவ்வொருவரின் ரகசிய கருவி என்று அழைக்கப்படும் தொலைபேசி அழைத்தவுடன், அழைப்புக்கு உயிர் கொடுத்து முதலில் பேசப்படும் வார்த்தைஹலோ”.

நாமும் நம் வாழ்நாளில் எத்தனையோ முறை இதை உபயோகித்திருப்போம், ஆனால் ஒரு முறையாவது நாம், அது ஏன் இந்த வார்த்தையை எல்லோரும் உபயோகிக்கிறார்கள் என்று சிந்திதிருப்போமா? (எவனுக்காவது வேலையில்லேன்னா அவனுக்குதான் இப்படியெல்லாம் சிந்திக்க தோணும், அப்படீன்னு சொல்லிகிட்டே நீங்க முறைக்கிறது எனக்கு இங்க தெரியுது, சரி விடுங்க சொல்ல வந்ததை சொல்ல ஆரம்பிப்போம்)

அது 1860-ஆண்டு இங்கிலாந்து கல்லூரி, மாணவர்கள் வகுப்பரையில் கூச்சளிட்டு கொண்டிருக்க உள்ளே நுழைந்த விரிவுரையாளர்(ஆசிரியை) மாணவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பவும், அவர்களை மிரட்டவும் தன்னை அறியாமல் சத்தமாக உபயோகித்த வார்த்தை தான் இந்தஹலோ”. ஹலோ என்ற சொல்லின் அந்தம் “Ahoy” என்பதே, இதன் பொருள் வணக்கம் என்பதே.  

1877-ஆம் ஆண்டு தொலைபேசியை உருவாக்கியவுடன் அதனை சோதனை செய்ய விரும்பிய அலெக்ஸ்சாண்டர் கிரகாம்பெல் முதன் முதலில் தன் நண்பன் வாட்சனிடம்ஹலோ வாட்சன், இங்கு வருகிறாய?, நான் உன்னை பார்க்க வேண்டும் (Hello, Watson will you come here, I want to see you?)” என்றாராம். இதுதான் முதன் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர்

அன்றிலிருந்து இன்றுவரை அவரின் நினைவாக அவரை போற்றும் விதமாக அன்று அவர் தொலைபேசியில் பேசிய அந்த முதல் வார்த்தையான ஹலோ-வை நாடு, மதம், மொழி பேதமின்றி நாம் அனைவரும் பேசி வருகிறோம்.

இன்றைய வியக்கவைக்கும் தகவல் எல்லோருக்கும் பயனளித்திருக்கும் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.., வணக்கம்.