இந்த மூளை இருக்கே அப்பப்பா அதனோட செயல்திறனும் வேகமும் நினைவுகொள்ளும் திறனும் வியப்புக்குரியது. ஒவ்வொரு முறையும் ஏதாவதொன்றை நாம் ஆங்கிலத்தில் எழுதும்போது எழுத்தில் பிழை வராமலிருக்க அதிக சிரத்தை எடுத்துகொள்வோம்தானே, ஏனெனில் அடுத்தவர் படிக்கும்போது கஷ்டபடாமலிருக்க வேண்டும் என்பது அந்நேரத்தில் நமது எண்ணமாக இருக்கும், ஆனால் சமீபத்தில் மூளைதிறன் குறித்த கேம்ப்ரிட்ச் பல்கலைகழக ஆய்வின் முடிவு ஒன்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதாவது நாம் எவ்வளவு எழுத்து பிழையோடு வார்த்தைகளை எழுதினாலும் வினாடிக்கும் குறைவான நேரத்திலேயே மூளை சரியான வார்த்தையை அடையாளம் கண்டுகொள்வதாக அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது உதாரணமாக ஒரு பேராவை அதிக எழுத்துபிளையோடு நமக்கு கொடுத்து வாசிக்க சொல்கிறார்கள். கொஞ்சம் கூடத் தடுமாறாமல் என்னால் கீழே உள்ள பேராவை படிக்க முடிந்தது. இதில் நமது மூளை செய்யும் Pattern Recognition என்னை வியக்க வைத்தது. நீங்களும் படித்து வியப்படைவதற்க்காக ஒரு உதாரணத்தை கீழே கொடுத்துள்ளேன். கீழே உள்ளதை முடிந்த வரை வேகமாக வாசிக்க முயற்சி செய்யுங்கள்.
I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdgnieg The phaonmneal pweor of the hmuan mnid Aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Amzanig huh? yaeh and I awlyas thought slpeling was ipmorantt!
என்ன உங்கள் மூளையின் பலம் எவ்வளவுன்னு இப்ப புரிஞ்சிருச்சா? மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன், வணக்கம்.
|