மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி (Emotion) என்கிறோம். உணர்ச்சி என்றால் என்ன என்பதை நோக்கிய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வரைவிலக்கணம் இன்று வரை வகுக்கப்படவில்லை என்றே சொல்லலாம், இருப்பினும் மனிதனின் உணர்வுகளில் முக்கியமானதாக கருதபடுவது அன்பும், காதலும்.
அன்பு அது அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது, இதன் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.
காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசையின் காரணமாக ஏற்படுவது
இன்றைய வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலிக்காமல் இருப்பவர்களை கண்டறிவது கடினம். ஏனெனில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு தருணத்தில் காதல் வந்து, சென்றிருக்கும். "ஜாதி, மதம், மொழியை கடந்து இரண்டு இதயங்கள் இணைவது தான் காதல்` என்று கவிஞர்கள் காதலை வர்ணிக்கிறார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி பதினான்காம் நாள் காதலில் விழுந்தவர்கள் தங்களது தினமாக வாலன்டைன்ஸ் டே (Valentine’s Day) என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள். காதலிப்பவர்களிடம் சென்று வாலன்டைன்ஸ் என்றால் என்ன? என்றால் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு தெரியாது என்ற பதில் தான் விடையாய் இருக்கும் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு பேருதவியாய் இருக்கும்.
கி.பி.14ம் நூற்றாண்டில் புகழ் பெற்ற ரோம சாம்ராச்யத்தை ஆண்டவர் இரண்டாம் கிளாடியஸ், அவரது ராணுவத்தில் ஆட்கள் பற்றாகுறையினால் இளைஞர்கள் திருமணத்தை தவிர்த்து, கட்டாயம் ராணுவத்திற்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டார். ஏனெனில் திருமண பந்ததிற்குள் நுழைந்த்தவரை கட்டாயபடுத்த அப்போதைய அந்நாட்டு சட்டம் அனுமதிக்கவில்லை இதற்கு அப்போது வாழ்ந்த வாலன்டைன் எனும் பாதிரியார் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணமும செய்து வைத்தாராம் இதனால் ஆத்திரமடைந்த அரசர், அவருக்கு மரணதண்டனை விதித்ததாக கூறப்படுகிறது. அவர் மரணதண்டனை விதிக்கப்பட்டு இறந்த நாளான பிப்ரவரி பதினான்காம் நாளை இளைஞர்கள் வாலன்டைன் தினமாகவும், திருமணதினமாகவும் கொண்டாட தொடங்கினர்.
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் வாலன்டைன் தினம் காதலர் தினமாக மாறியது. அமெரிக்காவில் விடுமுறை தினமாக காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் இத்தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் இ-மெயில், இன்டர்நெட், வாழ்த்து அட்டைகள், எஸ்.எம்.எஸ்., மற்றும் மொபைல் போன் என காதலர் தினம் புதிய பரிமாணத்தில் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்களது அன்பிற்கு உரியவர்களுக்கு பரிசாக விலையுயர்ந்த அணிகலன்கள், பரிசுகள், சாக்லெட்டுகள், பூக்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வழங்குகின்றனர். சிலர் தங்களது காதலை வெளிப்படுத்த இந்நாளை பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய பண்பாடான காதலர் தினத்தை வியாபார நோக்கங்களுக்காக வணிக நிறுவனங்கள் இந்தியாவில் பரப்புவதாக சில அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவிக்கின்றன. ஆனாலும் எதிர்ப்புகளை கடந்து காதலர் தினம் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. எதற்கும் ஒரு அளவு உண்டு. அதேபோல காதலனும், காதலியும் எல்லை மீறாமல் இருந்து இந்த காதலர் தினத்தை கொண்டாடினால் அது போற்றுதலுக்குரியதே.
|