சாகா வரம் பெற்றது, யாராலும் அழிக்க இயலாதது என்ற அடைமொழிக்கு பொருத்தமான இன்டர்நெட் பயன்பாடு குறித்து நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும் அதன் தோற்ற வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இன்றைய இன்று ஒரு தகவலில் அதனை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமே.
1960ஆம் ஆண்டு வாக்கில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்தபோதிலும் ஒரு கணினியிலுள்ள தகவல்களை மற்றொரு கணினியிடம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரவில்லை. இது கணினி பாடத்திட்டங்களை நடத்திவரும் பல பல்கலைகழகங்களுக்கு பெறும் தலைவலியாக இருந்தது. அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்கழகங்கள் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தது, அந்த பல்கலைகழகங்களுக்கு பெறும் தலைவலியாக இருந்துவந்த இப்பிரச்சனை பற்றி ஐ.பி.எம்-க்கு தெரிவிக்கபட்டது. இப்பிரச்சனையே இன்டர்நெட் உருவானதற்க்கு அடிகோலியது எனலாம்.
இன்டர்நெட் தொடங்குவதற்கான செயல்முறை திட்டத்திற்கு அடி கோலியவர் லிக்லைடர் என்பவர் ஆவார். இதனாலேயே இவர் இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கம்ப்யூட்டரும் தொடர்பு கொண்டு ஒன்றுக்கொன்று மற்றதற்காகச் செயல்படக் கூடும் என்ற செயல்முறையைக் கொண்டு வந்தவர் இவர்தான். அவர் அத்தகைய இணைப்பை உருவாக்கி அதற்க்கு காலக்டிக் நெட்வொர்க் ("Galactic Network") என்று பெயரிட்டார். இது மேற்சொன்ன அந்த பல்கலைகலங்களில் வெற்றிகரமாக சோதனைமுறையில் பயன்படுத்தப்பட்டது. இதன்பின்னர் அமெரிக்கரானுவத்தில் ரகசிய தகவல்களை உடனுக்குடன் அனுப்பவும், பெறவும் இத்திட்டம் ARPANET (Advanced Research Projects Agency Network) என்ற பெயரில் பயன்படுத்தபட்டது.
லிக்லைடரின் காலக்டிக் நெட்வொர்க் திட்டம் 1962ல் DARPA, (Defense Advanced Research Projects Agency) என்ற அமைப்பாக உருவானது. அதன் பின் இதனுடன் ARPANEஇணைய இன்டர்நெட் உருவானது. இதன்பின்னர் மக்கள் பயன் பாட்டிக்காக 1965ல் ARPA என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
1965 ஆம் ஆண்டு, மிக மெதுவாக இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி, எம்.ஐ.டி. பல்கலையின் பேராசிரியர் லாரன்ஸ் ராபர்ட்ஸ் (Lawrence G. Roberts) தாமஸ் மெரில் (Thomas Merrill) என்பவருடன் இணைந்து மாசசுசட்ஸ் என்னும் இடத்தில் இயங்கிய TX2 கம்ப்யூட்டரை கலிபோர்னியாவில் இயங்கிய கி32 என்ற கம்ப்யூட்டருடன் இணைத்தார். பின்னர் சில தகவல்கள் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பரிமாறப்பட்டது. இது தான் இன்டர்நெட் முதல் தகவல் பரிமாற்றம் அப்போதய தொலைபேசி இணைப்புகள் இத்தகைய இன்டர்நெட் இணைப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டர்நெட் தொடர்பில் தகவல்களை அனுப்ப பாக்கெட் ஸ்விட்சிங் (Packet Switching) என்னும் வழிமுறை கையாளப்படுகிறது. பைல்களில் உள்ள தகவல்கள் பொட்டலம் பொட்டலமாக சேர வேண்டிய சர்வர் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டு அங்கு இணைக்கப்படுகின்றன. லியோனார்ட் கிளெயின்ராக் என்பவர் இந்த முறையைக் கண்டுபிடித்தார். அக்டோபர் 29, 1969ல் மாணவர்கள் பலருடன் இணைந்து இதனை இயக்கினார். இயக்கத் தொடங்கியவுடனேயே சிஸ்டம் கிராஷ் ஆனது வேறு ஒரு நிகழ்ச்சி. இப்போது வரை அந்த முறையே பயன்படுத்த பட்டு வருவது குறிப்பிட தக்கது.
கம்ப்யூட்டருக்கான முதல் மவுஸ் 1968ல், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கம்ப்யூட்டர் கண்காட்சியில் Douglas Engelbart என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதன் பின்னரே இன்டர்நெட் பயன்பாடு எழுச்சியுற துவங்கியது எனலாம்
பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் புதிய முறைகள் பின்னர் அறிமுகபடுத்தபட்டதன் விளைவாக 1990களில் இன்டர்நெட் மிக பிரபலமடிய துவங்கியது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு உலகெங்கும் பரவியது. ஐந்து கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. ஆனால் இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.
சரி உலகில் அதிக அளவில் இன்டர்நெட் பயன் படுத்துவோர் யார் என்று நினைக்குறீர்கள் அமெரிக்கர் என்றா.., தவறு. ஸ்வீடன் நாட்டவரே. இங்குள்ள மக்களில் 85 சதவிகிதத்தினர் இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சதவிகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்ற ஆராய்ச்சி முடிவொன்று கூறுகிறது.
இன்டர்நெட் பயன்பாட்டில் வரும் www என்பதன் அர்த்தம் நாம் எல்லோருக்கும் தெரிந்ததே (World Wide Web). ஆனால் இது எப்போதிலிருந்து பயன்படிற்கு வந்தது யாரால அறிமுகபடுத்தபட்டது என்பது நமக்கு தெரியாததே!. டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர் தான் 1990 ஆம் ஆண்டு இந்த சொற்றொடரை உருவாக்கிப் பயன்பாட்டிக்கு கொண்டுவந்தார்.
|