ராமு,ஒரு மனோதத்துவ டாக்டரைப் பார்த்து,''சார்,எனக்கு ஒரு பிரச்சினை.ஒவ்வொரு முறை நான் கட்டிலில் படுத்திருக்கும் போதும் கட்டிலுக்குக் கீழே யாரோ படுத்திருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது.உடனே நான் கட்டிலுக்கு அடியில் சென்று பார்ப்பேன்.உடனே கட்டிலின் மேலே யாரோ படுத்திருப்பது போலத் தோன்றுகிறது.இப்படி மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருப்பேன்.எனக்குப் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறது,''என்றான்.டாக்டர் சொன்னார்,''என்னிடம் தொடர்ந்து இரண்டு வருடம் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் நான் சரி செய்து விடுவேன்,'' ராமு கேட்டான்,''நீங்கள் எவ்வளவு கட்டணம் வாங்குவீர்கள்? ''டாக்டர் சொன்னார்,''ஒரு தடவை பார்ப்பதற்கு நூறு ரூபாய்தான்,'' ''நான் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிச் சென்றவன் திரும்ப டாக்டரிடம் வரவேயில்லை.சில நாட்கள் கழித்து ஒரு இடத்தில் இருவரும் தற்செயலாக சந்தித்தபோது டாக்டர் ஏன் திரும்ப தன்னை வந்து பார்க்கவில்லை என்று கேட்டார்.ராமு சொன்னான்,''நீங்கள் ஒவ்வொரு தடவைக்கும் நூறு ரூபாய் கேட்கிறீர்கள்.ஆனால் நான் ஒரே தடவை நூறு ரூபாய் கொடுத்து என் பிரச்சினையை சரி செய்து விட்டேன்,''என்றான்.டாக்டர் ஆச்சரியப்பட்டு,எப்படி என்று கேட்டார்.அவனும் சொன்னான்,''நான் ஒரு தச்சனிடம் என் பிரச்சினையை சொன்னேன்.அவன் கட்டிலின் நான்கு கால்களையும் அறுத்தெடுத்து விட்டான்.