புதிதாக வந்த பாதிரியார் சர்ச்சுக்கு சொந்தமான வீடுகளை பார்வையிட்டார்.அப்போது ஒரு பெண் அவரிடம் வந்து,''உங்கள் வீட்டில் கூரை ஒழுகுகிறது.உங்கள் வீட்டில் சுற்று சுவர் இடியும் நிலை உள்ளது.மொத்தத்தில் உங்களுடைய இந்த வீடு பாதுகாப்பற்றதாக இருக்கிறது.''என்றார்.கருணையுடன் செவிமடுத்த பாதிரியார்,''நீங்கள் இந்த வீட்டில் எத்தனை ஆண்டுகளாகக் குடியிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.அந்தப் பெண்மணியும் முப்பது ஆண்டுகள் என்றார்.பாதிரியார் சொன்னார்,''அப்படியானால்,நீங்கள் சொல்லும்போதே.உங்கள் வீட்டில் என்று சொல்வதற்குப் பதிலாக நமது வீட்டில் இந்தக் குறைகள் இருக்கின்றன என்று சொல்லலாமே?''அந்தப் பெண்மணியும்,''நீங்கள் சொல்வது சரிதான்,''என்றார்.அந்தக் குறைகளைக் கவனிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு சென்றார் பாதிரியார்.சில நாட்கள் சென்றபின் ஒருநாள்,பாதிரியார்,மற்றும் சில பாதிரியார்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அநதப் பெண்மணி வேகமாக ஓடி வந்தார்.என்ன என்று கேட்க அந்தப்பெண் சொன்னார்,''சற்றுமுன் ஒரு பெரிய பாம்பு நம் வீட்டில் உள்ள நம் படுக்கை அறையில் நுழைந்து நம் படுக்கையின் மீது ஏறி விட்டது.உடனே வந்து அடிக்க வாருங்கள் ''