உன்மொழி தமிழ்மொழி:சிறப்புக்கவிதை



தடுக்கி விழுந்தால்
மட்டும் ......

சிரிக்கும்போது
மட்டும்
....

சூடு
பட்டால்
மட்டும்
.....

அதட்டும்போது
மட்டும்
.....

ஐயத்தின்போது
மட்டும்
...

ஆச்சரியத்தின்போது
மட்டும்
......

வக்கணையின் போது
மட்டும்
...

விக்கலின்போது
மட்டும்...
 ஃ

என்று தமிழ் பேசி
மற்ற
நேரம்
வேற்று
மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல்
சொல்
உன்
மொழிதமிழ் மொழியென்று !!!