திரிந்த பழமொழிகள்

 
அனுபவத்தின் மேன்மையை திறம்படவும், நகைச்சுவையாகவும், சுருக்கமாகவும் எடுத்தியம்புபவை பழமொழிகள். உலமெங்கும் உள்ள எல்லா மொழிகளிலும் பழமொழிகள் உண்டு, சுருக்கமாக கூறப்பட்டமையால் பின் வந்த மக்களால் அவை திரித்து வேறு பொருள் வருமாறு கூறப்பட்டது நான் ஏற்கனவே இரெண்டு பதிவுகள் இவற்றை பற்றி எழுதியுள்ளேன் என்றாலும் இன்று மேலும் அவ்வாறு திரிந்த இரெண்டு பழமொழிகளை பற்றி இங்கு காண்போம்.

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
அந்தக் காலத்திலெல்லாம் பர்மா, ரங்கூன் என்று திரைகடல் ஒடி திரவியமான பொருளை ஈட்ட வீட்டுத்தலைவர்கள் பயணம் செல்வார்கள். ஒரு ஊரிலிருந்து நான்கைந்து பேர் கூட்டாக சென்று ஐந்து வருடம், பத்து வருடம் என்று உழைத்து சம்பாதித்துவிட்டு சம்பாதித்த பணத்தை பொன்னும், வைரமுமாக மாற்றிக் கொண்டு கப்பலில் வருவார்ர்கள். அப்படி வரும்போது சில சமயம் கடல் சீற்றம் காரணமாக கப்பல் கவிழ்ந்து ஈட்டிய பொருளெல்லாம் இழந்து விடுவார்கள். தப்பித்து கரை சேரும் சிலர், ‘இவ்வளவு காலம் உழைத்துச் சம்பாதித்ததெல்லாம் இப்படி வீணாகிவிட்டதே.. இனி நம் ஊருக்கு என்ன கொண்டு செல்ல?’ என்ற விரக்தியில் கூட்டு சேர்ந்து கன்னம் வைத்துதிருட திட்டம் போடுவார்கள். (ஒரு ஆள் புகும் அளவுக்கு சுவரில் துளை போட்டு திருடுவதற்கு கன்னம் வைத்தல்என்று பொருள்)

அதனால், ‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னம் வைக்கும் தொழிலில் ஈடுபடக்கூடாதுஎன்ற அர்த்தத்தில் கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதேஎன்று சொல்லப்பட்டது, நாளடைவில் திரிந்து, இப்போது இடத்திற்கு இடம் ஒவ்வொரு அறத்தான் கொண்டு உலவி வருகிறது!

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்
விளக்கமாக சொல்லபட்டது என்னவெனில் அடிபட்டாலும் வசதியானவனின் கைகளில் அடிபட வேண்டும் என்பது குப்புற விழுந்தும் மீசையில் மண் ஓட்டல என்று கூவும் பார்ட்டிகள் விளக்கமளித்ததில் இந்த பழமொழி இவ்வாறு திரிந்திருக்க கூடும்.

இது உண்மையிலேயே இது "குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படணும்" என்பதே சரியானது. அதாவது, தன்னை குட்டுகிறவன் தன் சக்திக்கு நிகராக மோதுகிற தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே பழமொழியின் அர்த்தம். பலவீனமாணவனை தாக்காதே என்பதே இப்பழமொழியில் ஒளிந்துள்ள உட்கரு.