அரசியல் ஒரு சூனியக் கலை.ஆளும் வர்க்கத்தினரால் அந்த மந்திரவித்தை செய்யப்படுகிறது.ஆளப்படுபவர்களும் தூங்குபவர்களும் விழித்துக் கொள்ளும்போது அதிகாரம் செய்யும் அந்த மந்திரவாதிகள் மீண்டும் அவர்களை அறியாமை என்னும் உறக்கத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்.ஆனால் நசுக்கப்படுபவர்கள் என்றுமே தூங்குவதில்லை.வண்ணமும் நறுமணமும் இருப்பதாகத் தோன்றும் மாயத் தோற்றம் தான் அரசியல் ஆனால் இது செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தைப் பெருக்கப் பயன்படுத்தும் ஆயுதம்.
********
உறுதி மிக்க வைரத்தையும் மெல்லிய மலரின் இதழால் அறுத்து விடலாம்.ஆனால் அறியாமையில் உழலும் மனிதனிடம் எந்த வித உபதேசமும் பலனளிக்காமல் போய்விடுகிறது.
********
தனிப்பட்ட மனிதனின் திறமை ஒரு கூட்டத்தினால் நிறைவு பெறுகிறது.அகண்டத்தைத் தேடித் திரியும் நீர்த்துளி கடலாக மாறி விடுவதைப்போல சமூகத்துடன் சேரும் மனிதன் பூர்ணமானவனாகி விடுகிறான்.
********
கீழ் நாட்டவருக்கு மேல் நாட்டு வெள்ளையனே கடவுள்:ஆனால் அந்த மேல் நாட்டவனுக்கோ பொன்னும் பொருளும்தான் கடவுள்.
********
உழவனின் உணவுக்கு உதவாத கழனிஎங்கிருந்தாலும்,அங்கே ஒரு தானிய மணி கூட இல்லாமல் நெருப்பிட்டுக் கொளுத்துங்கள்.
********
உன் அன்பு சந்தேகங்களை எரிக்கட்டும்.
********
---- புகழ் பெற்ற கவிஞர் முஹம்மது இக்பால்