உலகில் மனிதானால் மிக வேகமாக அழிவை சந்தித்துவரும் விலங்கினங்கள் பற்றிய பாகம் இது. பெரும்பான்மையான விலங்குகள் மனிதனால் நேரடியாக அழிக்க படவில்லை என்றாலும் விலங்கினங்களின் வாழிடமான காடுகளை அளிப்பதால் அவை தன்னாலேயே அழிந்துவிடுகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மை. காடுகளை அதிகபடுத்துவது என்பது இயலாத காரியம் ஏனெனில் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான வாழிடங்களை உருவாக்க நமக்கு அருகில் உள்ள காடுகளை அழித்துதான் ஆக வேண்டியதுள்ளது. எப்படியாயினும் இன்று விலங்கினங்களை அவற்றின் வாழிடங்களிலேயே பாதுகாப்பது என்பது நம்மிடையே உள்ள மிகப் பெரிய சவால் தான், அதை இந்த வையகம் எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சிவிங்கிப்புலி
சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்தபாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 125 கிமீ வேகத்துக்கு மேல் ஓட முடியும். ஓடும் போது வெறும் மூன்று நொடிகளில் 110 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும்.
இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும் 112 முதல் 135 செமீ நீளமான உடலும் 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும்.
புலி குடும்பத்தில் சிவிங்கிப்புலி மட்டுமே மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன பெண் சிவிங்கிப்புலிகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் சிவிங்கிப்புலிகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன.
பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் முற்றிலும் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது
பஞ்சவர்ணகிளி
இப்பெருங்கிளி 76 முதல் 83 செ.மீ நீளமும் 900 முதல் 1300 கிராம் எடை வரையும் வளரக்கூடியது. இப்பறவை பார்ப்பதற்கு அழகாக நீல இறக்கை, வாலுடனும் கருநீல கன்னமும், உடலின் அடிப்பகுதி பொன்மஞ்சளாகவும் இருக்கும். இதன் நெற்றி பச்சைநிறத்திலும் அலகு கருப்பாகவும் இருக்கும். கடினமான கொட்டைகளை உடைத்துத் தின்ன ஏதுவாக இப்பறவை உறுதியான அலகினைப் பெற்றுள்ளது.
இப்பறவைகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஓரிணையுடன் வாழ்கின்றன. மரப்பொந்துகளில் கூடுகட்டி வாழ்கின்றன. பெண் கிளியானது இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் வரை இடும். 28 நாட்கள் அம்முட்டைகளை அடைகாக்கும்.
இப்பறவைகள் இவற்றின் அழகான தோற்றத்திற்காகவும் இவற்றின் பேசும் திறனுக்காகவும் மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. பூகுன் பாடும்பறவை
இசை பிரியர்கள் அனைவரும் அறிந்த உயர்வாக போன்றுகின்ற பறவையினமாகும் இது. இசையின் பல பரிமானங்களை உலகிற்கு தந்தது என்ற நம்பப்படும் இதன் கூவும் இசையை பதிவு செய்ய பல மாதங்களாக காட்டுக்குள் தவம் கிடப்பவர்கள் ஏராளம். இன்று இந்தியாவின் மேற்குவங்க காடுகளில் மட்டுமே குறைந்த அளவில் வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்த தலைமுறையிலேயே பெரும்பான்மை அழிந்து போய் விட்டதாகவும், அடுத்த தலைமுறையில் முற்றிலும் அற்று போய்விடும் எனவும் அஞ்சபடுகிறது.
|