ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையை புரட்டினால் அதில் குறைந்த பட்சம் இரெண்டு செய்திகளாவது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியதாக இருக்கும். நாம் சுதந்திரமடைந்து அரைநூற்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் நாம் நம்முடன் வாழும் பெண்டிற்கு அந்த சுதந்திரத்தை அளிக்கவில்லை என்பதே இது காட்டுகிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில் துணிக்கடைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்குரிய ஆடைகளை வாங்கும்போது அதை அணிந்து பார்பதற்க்காக ட்ரையல் ரூமை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது. அங்கு சில ஓநாய் முதலாளிகள் செய்யும் செயல்கள் மன்னிக்க இயலாதது அதாவது ஆடை மாற்றும் அறையில் இருபுறமும் இருந்து பார்க்கும் கண்ணாடி, அறையின் ஏதாவதொரு மூளையில் மறைவாக பதிக்க பட்டிருக்கும் கேமராக்கள் போன்றவை அவற்றில் சில. மனிதனின் தவறுகளுக்குரிய விளைவுகளை அவனையே அவனின் வாழ்நாட்களில் இறைவன் சந்திக்க செய்துவிடுகிறான் என்றாலும் நம் அறியாமையும் அந்த தவறுகளுக்கு ஊக்கமளித்துவிடுகின்றன என்பதை மறுக்க இயலாது, நாம் உசாராக இருந்தால் இவற்றிலிருந்து சுலபமாக தப்பி விடலாம் என்பதும் மறுப்பதிற்கில்லை. இந்த கயவாளிதனத்தை சுலபமாக கண்டறிந்து அவற்றிலிருந்து தப்புவது எப்படி என்று கீழே காண்போம்.
உடை மாற்றும் அறையில் பதிக்க பட்டிருக்கும் கண்ணாடியை நீங்கள் நுனி விரலால் (படத்தில் உள்ளது போல்) தொடுகையில், கண்ணாடியில் உள்ள உங்கள் விரல் பிம்பத்திற்க்கும், உங்கள் விரலுக்கும் இடையில் சிறிது (1CM அளவிற்கு) இடைவெளி இருந்தால் அது நார்மலான கண்ணாடி.
உங்கள் விரல் பிம்பத்திற்க்கும் உங்கள் விரலுக்கும் இடையில் இடைவெளி கொஞ்சம் கூட இல்லையெனில் (கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல்) உசாராகவும் அது இருபுறவழி கண்ணாடி.
உடை மாற்றும் அறையில் மறைவாக பதிக்கபட்டிருக்கும் சிறிய அளவிலான கேமராக்களை கண்டறிவது எப்படி என்றால் அதுவும் சுலபமானதே. உள்ளே சென்று கதவை அடைத்தவுடன் உங்கள் மொபைல்போனை உயிர்பியுங்கள் உங்கள் நண்பரை அழையுங்கள். அழைப்பு நீங்கள் அறையினுள் இருக்கும்போது கிடைக்கவில்லையென்றால், கதவை திறந்து வெளியில் வாருங்கள் இப்போது அழையுங்கள் அழைப்பு கிடைத்தால் உசராகவும் அறையினுள் நிச்சயம் கேமரா பதிக்கபட்டிருக்கும்.
இந்த அனுபவம் இதை வாசிக்கும் உங்களில் யாருக்காவது நேர்ந்தால் அமைதியாக அந்த கடையிலிருந்து வெளியேறிவிட வேண்டாம் அது உங்கள் உடன் பிறவா மற்ற சகோதரிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம். அந்த முதலாளி ஓநாய்களின் முகத்திரையை கிழிக்க அஞ்ச வேண்டாம். கோழையாய் அஞ்சி நெடுநாள் வாழ்வதை காட்டிலும் வீரனாய் ஒருநாள் வாழ்ந்தாலும் நன்றே. இந்த பதிவு பெண்களுக்காக மட்டும் அல்ல ஆண்களுக்கும் தான். மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். வணக்கம்.
|