தமிழன் என்றோர் இனமுண்டு - சிறப்புக்கவிதை!!!

 
 
தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கொருகுணம் உண்டு
அமிழதம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்
கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்
மானம் பெரிதென உயிர் விடுவான்
மற்றவர்க்காக துயர்ப் படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேலெனப் பேசிடுவான்
ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்
நீதியும் உரிமையும் அந்நியர்க்கும்
நிறை குறையாமல் பண்ணினவன்

என்று,. அன்று நாமக்கல் கவிஞனால் போற்றபெற்ற தமிழன் இன்று எனக்கும் மேற்குறிய வரிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சொன்னாலும் சொல்வான்!!!