நீ குளித்து முடித்ததும்
ஒரு துண்டெடுத்து
உன் கூந்தலில்
சுற்றிக்கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடிசூட்டிக் கொள்வதா?
*************************
சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது!