வரலாற்றில் கைத்தொலைபேசி; Cell Phone




நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்துவரும் இந்த நவீனயுகத்தில் செல்போனும், மினஅஞ்சல் முகவரியும் இல்லாத மனிதனை மனிதன் என்றே யாரும் மதிப்பதில்ல. ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் நிழல்(Shadow) அவர்களுடன் இருக்கிறதோ இல்லையோ, செல்போன் அவர்கள் கைகளில் தவறாமல் இடம் பிடித்துள்ளது. வீட்டிலிருந்து வெளியே கிளம்புபவர்கள் வீடு நன்றாக பூட்டியிருக்கிறதா என்று சோதித்து கொள்கிறார்களோ இல்லையோ, செல்போனை எடுத்துகொண்டு விட்டோமா என்று தவறாமல் பரிசோதித்துக்கொள்வர். இப்போதைய சூழ்நிலையில் செல்போனும் இன்டர்நெட்டும் இரெண்டு நாள் உலகம் முழுவதிலும் பழுதடைந்துவிட்டால் உலகில் பகுதிக்கு மேற்பட்டோர் பத்தியமாகத்தான் திரிவர். மேலும் உலகில் வாழும் மக்களில் பகுதிக்கு மேற்பட்டோரை கலையில் தூக்கத்தில் இருந்து அலாரத்தால் எழுப்புவது செல்போனாகத்தான் இருக்ககூடும், இத்துணை தூரம் மனித வாழ்வில் இறண்டற கலந்துவிட்ட செல்போனைக் கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா? என்ற கேள்வியை உங்களிடம் எழுப்பினால் பகுதிக்கு மேற்பட்டோர் அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பீர்கள், பகுதிக்கு மேற்பட்டோர் ஹி ஹி நாங்க செல்போன்ல பேசத்தான் செய்வோம் ஆராச்சியல்லாம் பண்ண மாட்டோம் என்பீர்கள்.
செல்போன் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்து அதற்க்கு வடிவம் கொடுத்தவர் டாக்டர் ஜெ.பிரான்டர் பெக்கன்ல், 1908-ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது, இதிலிருந்த பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளை கலைந்தது இப்போது பயன்பாட்டிலுள்ள புதிய தலைமுறை தொழில் நுட்பத்தை கண்டறிந்தவர் டாக்டர். மார்டின் கூப்பர் என்பவர் ஆவார். 1973-ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து இதனை வடிவமைத்து தந்தார்.
 
 
சரி செல்போன் உருவாக்கியாச்சு. அதை மட்டுமே வச்சிக்கிட்டு எப்புடி பேசுறது, சிம் கார்டு வேண்டாம் அதனை உருவாக்கியவர் ஜெர்மன் ராக்கெட் விஞ்ஞானியான ஹெல்மட் க்ரோட்ரப் மற்றும் அவரது சக பணியாளர் ஜர்ஜென் டெத்லோஃப் ஆகியோர் ஆவார் 1968 ஆம் ஆண்டில் அது கண்டுபிடிக்கப்பட்டு, 1982 ஆம் ஆண்டில் காப்புரிமை பெறப்பட்டு முதன் முதலில் வர்த்தக ரீதியில் பெரும் பயன்பாடு பிரான்ஸ் நாட்டில் 1983-ல் துவங்கப்பட்டது.
சிம்(SIM) அப்படின்னா என்ன அர்த்தம்னு தெரியாதவங்களுக்கு இந்த எக்ஸ்ட்ரா தகவல் அது என்னென்னா Subscriber Identity Module. மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் அது வரை நன்றிகளுடன் விடைபெறுகிறேன்.